Tamil Linux – More Questions/Answers – 2
by வெங்கட் • January 31, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
டைனோவுடன் தொடர்ந்த விவாதத்தின் அடுத்த பகுதி,
திரு டைனோவின் சம்பந்தமான மடலை ராயர் காபி கிளப்பில் காணலாம்;
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/5524
அன்புள்ள டைனோ,
{[அ] உங்கள் முயற்சியை சிறுமைப்படுத்துவது என் நோக்கம் அல்ல!}
நன்றி,
{[ஆ] விவாதத்தில் பங்குபெற பெயரறிமுகம் தேவையற்றது என்னும் கருத்தை நம்புபவன் நான். எனைப்பற்றிய அந்தரங்க தகவல் தந்தால் தான் நீங்கள் விவாதத்தை தொடர்வீர்களானால், விவாதத்தில் இடம்பெற நான் விரும்பவில்லை. }
பெயரைச் சொல்லிக்கொள்ள நான் வற்புறுத்தப்போவதில்லை. ஆனால், மறுபுறம் எழுதும் என்னைப்பற்றிச் சிந்தித்தால் நீங்கள் இப்படிச் சொல்லமாட்டேன் என்று நினைக்கிறேன்.
நேர்மை குறித்த விவாதத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட நான் தனிமனிதனாக நிற்கிறேன் (இதில் ழ-கணினியினர் நிலை தவறு என்றும் சுஜாதா தனக்கு வெகுஜன ஊடகத்தில் இருக்கும் ஆளுமையைத் தன்னை முன்னிருத்திக்கொள்ளத் தவறாகக் கையாளுகிறார் என்றும் நான் எழுதி உங்களைப்போலக் கேள்வி கேட்கும் பலருக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிவருகிறேன். இந்த நிலையில் முகந்தெரியாதா தாக்குதல்களுக்கு என்னை உட்படுத்தி உங்கள் தனிமைத்துவத்தைப் பாதுகாத்துக்கொள்வதுதான் உங்களுக்குச் சரியான நெறி என்று தோன்றினால் என்னால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாது.
இப்படி ஒரு விவாதத்தில் ஒரு காலத்தில் ஈடுபட்டால் என்னை மாதிரி அயர்வடையாமல் நீங்கள் இருக்க வேண்டும் என்றுதான் விழையமுடியும்.
தனிமனிதானகத்தான். இங்குகூட பாருங்கள், வந்திருக்கும் கடிதங்களில் என் தரப்பில் எதாவது நியாயம் இருக்கும் என்று சிலபேர் நம்புகிறார்கள். அவர்கள் என்னுடைய வாதங்களுக்கு உதவ முற்படத் தயங்குகிறார்கள். இன்னும் சில பேர் நான் இவ்வளவு கத்திக் கொண்டிருக்கிறேனே, மறுபுறத்தில் ழ-வும் சுஜாதாவும் மௌனம் காக்கிறார்களே என்று சந்தேகப்படுகிறார்கள். இவர்களுக்கு ழ-தரப்பின்மீதுள்ள சந்தேகங்களை எழுதவேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் பெயரைச் சொல்லலாமே என்று கேட்டால், உடனே அவருக்கு அப்படிச் சொல்லாமல் இருக்க உரிமையிருக்கிறது, “முகமுடி போட்டுக்கிட்டு நல்லா அடிக்கிறார், இவருக்கு மூஞ்சி வீங்கி போச்சு, இவர் எப்படி திருப்பி அடிக்கிறார் பார்க்கலாம்” என்று வேடிக்கைப் பார்க்க உடனே கடிதம் வந்து விழுகிறது.
இதில் ஒரு வசதி பாருங்கள்; விவாதம் அயர்வடைய வைத்தால் நீங்கள் உங்களுக்கு எந்தவிதமான இழப்பும் இல்லாமல் நிறுத்திவிடமுடியும். ஆனால் நான் வேலைகளுக்கு நடுவேயும் உடனே பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால், “நல்ல அடிப்பா, ஆளு அவுட்” என்று எல்லோரும் கைத்தட்டுவார்கள். (உண்மை இதுதான்; நெருக்கும் வேலைகளுக்கு இடையில்தான் நான் இதை எழுதுகிறேன்).
{ஜெயராதா என்பவர் தமிழ்-உலகம், ராகாகி முதலிய இணையக்குழுக்களில் இடம்பிடித்துள்ளார். அவர்களை தொடர்பு கொள்ள முயன்றீர்களா?}
ஜெயராதா, பொதுவிடங்களில் பேசத்தெரியாது, விவாதங்களில் தயக்கம், நான் சொல்வதையெல்லாம் பொதுவில் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டுதான் என்னுடன் ஒரு முறை கதைத்தார், பின்னர் மின்னஞ்சலும் அப்படியே வந்தது. நானும் பொறுமையாகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மறுபுறம், “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விட்டேன்” என்று அவரே சொல்லியிருக்கிறார். எனவே, அவரைத்தான் திட்ட மேலாளராக அறியமுடிகிறது. எனவேதான் திட்டத்தின் மேலாளரிடம் கேள்விகளை முன்வைத்தேன்.
{“கற்றதும் பெற்றதும்” – தான் கற்ற, அறிந்த, விசயங்களை எழுத்தாளர் விவரிக்கும் கட்டுரை. அவரின் ஞானத்தைகுறித்து மறுப்பிருந்தால் அவருக்கு தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால் நீங்கள்தான் அதை அவருக்கு தெரிவித்தீர்கள் என்பதை அறிவிப்பது அவர் உரிமை. அதை அவர் தன் கட்டுரையில் குறிப்பிடாதது அவரது மேன்மை குறித்த கேள்வி!}
மன்னிக்கவும். நான் படித்த பள்ளி வேறு. இங்கு அறிவியலில் உண்மை மாத்திரம்தான். மேண்மையும் இழிவும் உண்மையைக் கண்டறிந்து சொல்வதிலும், திரைபோட்டு மறைப்பதிலும்தான். அறிவியல், நுட்பம் சமாச்சாரங்களை எழுதும்பொழுது மாறுகருத்தையும், மேற்கோள்களையும் காட்டாமல் இருப்பது, தொடர்ந்து சுட்டிக்காட்டியபின்னும் மறுப்பது கீழ்த்தரமான சமாச்சாரம். நான்தான் தெரிவிக்க வேண்டும் என்று நான் எழுதியாதாகத் திசை திருப்பாதீர்கள். நான் வேண்டியது, முன்னோடித் திட்டங்களைக் குறிப்பிடுங்கள். என்று சொல்லித்தான், நான்தான் அவருக்குக் காட்டினேன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையில்லை (சொல்லப்போனால், அவருக்கு இதெல்லாம் தெரியும்)
{பல்கலைக்கழக மானியத்தை பெற்றுத்தந்தவர் சுஜாதா என்பதை அவர்களுடைய இணையத்தில் எங்கும் நான் காணக்கிடைக்கவில்லை. உங்கள் வலையிலும், அரவிந்தன் அவர்களின் பின்னூட்டத்திலும் ஜெயராதாதான் திட்டத்தை ஒருங்கிணைப்பதாக கூறியுள்ளார்.}
இந்த இடத்தில் நான் முன்னரே எழுதியதுபோல் ஜெயராதாவை மேற்கோள் காட்டமுடியாத நிலையில் இருக்கிறேன்.
அது ஒருபுறமிருக்க என்னுடைய எழுத்துக்களில் பிழைகளையும், ழ-வின் வழிமுறைகளில் நேர்மையையும் தோண்டித்தோண்டி கண்டுபிடிக்கும் உங்கள் திறமை எனக்குப் பிரமிப்பளிக்கிறது.
{“THEY” என அரவிந்தன் குறிப்பிடுவது சுஜாதா, ஜெயராதா மற்றும் ஷிவக்குமார் குழுவினரை. அப்படியிருக்க சுஜாதாவை தனித்து குறிப்பிடுவதேன்?}
அதனை அவன்கண் விட்டவர் என்பதால்
{கேவலப்படுத்துவது என் நோக்கமல்ல. அதைப்போல ஒருதாக்கத்தை ஏற்படுத்த அந்த கேள்வியை முன்வைக்கவில்லை. உங்கள் நோக்கங்கள் எனக்கு தெளிவாகவில்லை. இம்மடலின் வாயிலாக எதைச் சாதிக்கவிரும்புகிறீர்கள்? ழ-கணினி திட்டம் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு அங்கீகாரமளிக்க வேண்டுமா? எவ்வாறான அங்கீகாரத்தை எதிர்நோக்குகிறீர்கள்? உங்கள் மென்பொருள் இணையதளத்திற்கு சுட்டியிட வேண்டுமா? இதை தெளிவாக தெரியபடுத்தலாமே?}
இதை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இரண்டு மாதங்களாக ஒன்றும் நடக்கவில்லை (இப்பொழுது நடக்குக் போலத் தெரிகிறது) உங்களுக்கும் ழ-திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வரையறுத்ததாலும், மீண்டும் ஒருமுறை அதை இங்கே எழுத அயர்வாக இருக்கிறது.
மேலும் என்ன செய்யவில்லை, என்பதை என்னுடைய திண்ணைக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.
{திறந்த ஆணைமூலம் மற்றும் தளையறு மென்கலன்களை தயாரித்தவன் என்பதாலும், அதை தினசரி உபயோகிப்பவன் என்ற முறையிலும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். நான் நீதித்திறையின் உதவியை நாடச்சொன்னது பொருள் ஆதாயம் கருதியல்ல! அதை நான் குறிப்பிடவும் இல்லை?! ஊடக செய்திகளிலும் பத்திரிக்கை துறைச் சார்ந்தவரும்தான் சுஜாதாவை “பிதாமகனாய்” தலையில் வைத்துக்கொண்டாடி வருகிறார்கள். (பொறியியற்) கல்லூரி மாணவர்கற்கோ, வெகுஜனங்களுக்கோ சுஜாதாவை ஒரு ஊடக/ திரைப்பட (வசனகர்த்தா?) எழுத்தாளராகவே தெரியும். நீங்களும் அவரைப்பிரதானப்படுத்தி அவருக்கு மென்பொருள் துறையில் புகழ்தேடித்தருகிறீர்கள்
.}
உண்மைதான்; தனக்கு இருக்கும் சமூக அந்தஸ்தை வைத்துக் கொண்டு அவரால் தமிழ் லினக்ஸ் திட்டத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்க முடியும். தனக்கு இருக்கும் மேலாண்மை அறிவை வைத்துக்கொண்டு அவரால் எளிதாக நெறிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் (நீங்களே எழுதியிருப்பதைப் போல) தன்னுடைய காலரை உயர்திக் கொள்ள மாத்திரமே அவர் முயற்சி செய்கின்றார் என்று தோன்றியதால் அதை எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
நாளை இந்தக் கணினியை ஒரு பத்திரிக்கைக் கூட்டத்தில் இயக்கிக் காட்டுவார்கள். “சுஜாதாவின் தமிழ் கம்யூட்டர்” என்று தலைப்புச் செய்தி வரும். அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு, கனேடிய, அமெரிக்கக் குளிரில் ஆய்வகத்தில் மாலை நேரங்களில் தன்னைப் பூட்டிக்கொண்டு தமிழ் லினக்ஸில் ஆதார வேலை செய்த சில மாணவர்கள் மறந்துபோகப்படுவார்கள் என்றும், இதை ஆரம்பகாலத்திலிருந்து கூட இருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர்கள் பங்கைச் சொல்லத் தார்மீகக் கடமையிருப்பதாகத் தோன்றியதாலும்தான் எழுதினேன்.
{உலகத் தமிழ்த் தொழில்நுட்ப மன்றத்தில் உங்கள் கருத்தை குறித்து ஆலோசனை பெற்றீர்களா? அவர்கள் மூலமாக ழ-கணினி திட்ட முனைவர்களை தொடர்புகொள்ள செய்தீர்களா?}
இப்பொழுது ழ-திட்டத்திலிருந்து சில பேர் நேரடியாகத் தொடர்புகொண்டு வருகிறார்கள். எனவே, உத்தமம் அமைப்பைத் தொந்தரவு செய்யவேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
பிளத்தல்:
{பலவடிவங்களில் லினக்ஸ்க்குவிசைப்பலகைகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை மீண்டும் செய்ய முற்படுவது}
அதை தனி திட்டமாக செயல்படுத்திவருகிறார்கள். அதைப்பற்றிய முழுவிவரம் கிடைத்தால் கதைக்கிறேன். சுட்டியிருந்தால் அனுப்புங்கள்.}
இதை நான் எழுதிய முதல்திட்டத்துடன் இணைக்க இப்பொழுது அவர்கள் முற்பட்டிருக்கிறார்கள்.
இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்; ஒரே செயலை (இரண்டு வழிகளில் இருந்தாலும் திரும்பச் செய்வது திறந்த ஆணைமூல வழிமுறைக்கு ஊறுவிளைவிக்கும், இதுதான் ரிச்சர்ட் ஸ்டால்மானால் மூடிய ஆணைமூலங்களைப்பற்றி முன்வைக்கப்பட்ட முதல் வாதம்). மேலும் தமிழுக்கு வேலை செய்ய ஆளில்லாத இந்த நிலையில் முதலில் தேவையான காரியங்களை வரிசைப்படுத்தி நிறைவேற்ற வேண்டிருப்பதும் இதன் அடியில் இருக்கும் கருத்து.
{நானறிந்தவகையில் முன்பிருந்த அமைப்புகளை களைந்து புதிய அமைப்புகளை புகுத்தினால் அதை பிளத்தல் எனலாம்? ழ-கணினியில் பழைய அமைப்புகளை நீக்குவதைப்பற்றி குறிப்பிடவில்லையே? புதிய அமைப்புகளை உள்ளிடூவதால் பழைய அமைப்பு அழிக்கப்படுகிறதா? அவ்வாறு அவை அழிந்து, மறுபடியும் நிறுவதடை ஏற்ப்பட்டால் பிளத்தல் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அவர்களின் அமைப்புகள் ‘plugins’ போல தெரிகிறது? சரியா?}
இல்லை, அமைப்புகளைக் களைந்து புதியன புகுத்தலுக்கு Version என்று பெயர். பிளத்தல் என்பதன் விளக்கம்;
ஒரு திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். (உதாரணமாக ஒரு மின்னஞ்சல் நிரலி). திட்டம் ஒருமித்த நோக்கங்களுடன் செல்லாமல் திடீரென சிலர் அதில் வேறு விஷயங்களைப் புகுத்தி/மாற்றி வெளியிட முயற்சிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் உடனே இருவரும் சமரசத்திற்கு வர முயற்சிப்பார்கள். அப்படியில்லை என்றால் நாளடைவில் ஒரே நிரலியின் இரண்டு வேறு வடிவங்கள் வரத்தொடங்கும். ஒரு அளவிற்கு மேல் போய்விட்டால் ஒருவர் எழுதும் நிரலை இன்னொருவர் பயன்படுத்த முடியாது. அந்த நிலை திட்டத்திற்கு நல்லதில்லை. (இது மூடிய ஆணைமூலங்களின் அதே நோயின் – Reinventing the same wheel -வேறுவிதமான வடிவமாக அறியப்படும்).
இப்பொழுது தமிழ் கேடிஈ திட்டம் ஒரு அகராதியின் அடிப்படையில் நடக்கிறது. திடீரென சுஜாதாவின் அகராதிக்கு மாறுகிறார்கள் (மாறக்கூடாது என்றில்லை, அதன் அவசியத்தை ஏற்கனவே அந்த காரியங்களைச் செய்துகொண்டிருப்பவர்களிடம் விவாதிக்கலாம், அவரை அதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள வைக்கலாம், இதெல்லாம் திறந்த ஆணைமூல வழிமுறைகள்). இல்லாவிட்டால் நாளடைவில், முதலில் செய்யப்பட்ட நிரலிகள் ஒரு மொழியிலும் பிற வேறொரு முறையிலும் அமையும் – அதாவது Close the window = சாரளத்தை மூடு, சன்னலைச் சாத்து என்று உலாவியிலும் மின்னஞ்சல் நிரலியிலும் வருவது. இது பயனரைக் குழப்பும். நாளடைவில் இது திருத்தச் சிக்கலாகும் எனவேதான் ஒரே அகராதிக்கு எல்லோரும் வரவேண்டும் என்பது. அது இல்லாத நிலையைத்தான் நான் பிளத்தல் என்று அழைக்கிறேன். ஜெர்மானிய மொழியிலும், ஜப்பானிய மொழியிலும் ஒரு க்னோம் வடிவம்தான் செய்ய முற்படுகிறார்கள். (நம்மிடையே அதற்குக்கூட ஆளில்லாத நிலையில் தன்போக்குக்குச் சிலரை வழிநடத்திச் செல்வது சேவையாகத் தோன்றவில்லை).
For more information on Forking, see Eric Raymond’s essay “Homesteading the Noosphere”
http://catb.org/~esr/writings/homesteading/homesteading/index.html
தவிர்க்க முடியாத காரணங்களால் (கொள்கைரீதியாக) பிளத்தல் அவசியமானால் நேர்வழி கொந்தர்கள் தங்கள் நிலையை அழகாக, நேர்மையாக விளக்க முற்படுகிறார்கள். உதாரணத்திற்கு ஜெண்டூ லினக்ஸை ஏன் பிளக்கிறோம் என்ற இந்தக் கட்டுரையைப் பாருங்கள்
http://www.zynot.org/info/fork.html
{>>4. ….இன்னொரு குழு வேறு ஒரு அகராதியை வைத்துக்கொண்டு மொழியாக்கம் செய்ய முற்படுவது.
மொழியாக்கம் செய்ய வேண்டிய அகராதி அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஒப்பன் ஆபிஸ் வரைமுறைப் படுத்தியுள்ளதா? நீங்கள் உபயோகிக்கும் அகராதி அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டதா? 5 வருடர்காலமாக உபயோகித்திருந்தால், உங்கள் அகராதிக்கு அவ்வாறான அங்கீகாரத்தை
பெற்றிருக்கலாமே?}
எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது; நான் தெளிவாக எழுதியிருக்கிறேன். இதுவரை பயன்படுத்தப்படுவது அண்ணா பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிகப்பட்டு, உத்தமத்தினால் முன் மொழியப்பட்ட அகராதி. இந்தக் கேள்வியை உங்களுக்கு அந்த இடத்தில் கேட்கத் தோன்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
{நெறிமுறைகள் மீறப்பட்டால், அதை தடுக்கமுடியாது என்றே சொல்கிறேன். நெறிமுறைகளை அமலாக்க எந்த நாட்டிலும் சட்டமில்லை. அது அவரவர் மனசாட்சிக்கு உட்பட்ட விஷயம்! நேர்மையும், மேன்மையும், நெறிமுறையும் ஒருவரின் அந்தரங்கள், அதை பொது ஊடகத்தில் விவாதி
//முகமுடி போட்டுக்கிட்டு நல்லா அடிக்கிறார், இவருக்கு மூஞ்சி வீங்கி போச்சு, இவர் எப்படி திருப்பி அடிக்கிறார் பார்க்கலாம்//
உங்களுக்கு அசாத்தியமான பொறுமை வெங்கட்!
¦Åí¸ð, À¢Çò¾ø ±ýÈ¡ø ¬í¸¢Äò¾¢ø splitting ±ýÚ þÕìÌõ ±É ¿¢¨Éò§¾ý. þÐ forking ±ýÚ þô§À¡Ð¾¡ý «È¢¸¢§Èý. Fork ±ýÈ ¦º¡øÖìÌ §¿Ã¡É ¾Á¢ú¡ø ¸¨Å. ¸Å¡ý. ¸ÅÄø. ´ýÚ ¿¼ìÌÁ¡ ¿¼ì¸¡¾¡, ¸¢¨¼ìÌÁ¡ ¸¢¨¼ì¸¡¾¡ ±ýÚ ´ýÈ¢ø ¦¾¡¼í¸¢ þÃñ¼¡¸ô À¢Ã¢Å¾¡ø¾¡ý (¸¨Å¢ĢÕóÐ) ‘¸Å¨Ä’ Åó¾Ð. À¢Çò¾ø ±ýÈ ¦º¡ø, À¢Ã¢¾ø «øÄÐ À¢Ã¢ò¾ø ±ýÈ ¦À¡Õ¨Çò ¾ÃÅ¢ø¨Ä. ¸¢ð¼ò¾ð¼ ´òÐô §À¡¸¢È§¾ ¾Å¢Ã, ±ýɧš ¦Áý¦À¡Õû «øÄÐ ¦ºÂÄ¢¨Âô À¢ÇôÀ¡÷¸û §À¡Ä¢Õ츢ÈÐ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ. «Ï¨Åô À¢Çò¾ø §À¡ýÈ ¦º¡øÄ¡ì¸í¸¨Çì §¸ðÎô ÀƸ¢Â¾ý Å¢¨Ç×. ¡÷ ¦ºö¾ ¦Á¡Æ¢ Á¡üÈõ ±ýÈÈ¢§Âý. ºÃ¢Â¡É ¾Á¢úî ¦º¡ø¨Äô ÀÂýÀÎò¾¢É¡ø ÒâóЦ¸¡ûÇø ±Ç¢¾¡Ìõ.
ஹரி, அப்படி மொழிபெயர்த்த மடையன் அடியேன்தான் (இதுவரை என்னைத் தவிர இப்படி திறந்த ஆணைமூலச் சமாச்சார்ங்களுக்கு எல்லாம் த்மிழ் தேடியலவைபவர்கள் யாரையும் கண்டதில்லை). நிச்சயம் குழப்பம் வரும். நான்கூட “கவைத்தல்” என்று எழுதலாமா என்று யோசித்தேன் (முதல் முறையாகத் திண்ணையில் எழுதும் பொழுது இல்லை, கடந்த சில தினங்களில்தான்). ஆனால் கவைத்தல் என்பது சரியான பிரயோகமா என்று தெரியவில்லை.
கவைத்தல் இல்லாட்டி கிளைத்தல்? ‘கவையாகிக் கொம்பாகி’ வெண்பா நினைவிருக்குமே.
நீங்கள் சொல்வது ஒரு வேளை ‘இந்தச் சொல் சரியா’ என்பதைப் பற்றிய சிந்தனையானால், கவைத்தல் என்று தாராளமாகச் சொல்லலாம். பெயர்ச்சொல்லின் அடிப்படையில் வினைச் சொல்லை உருவாக்குகிறோம். அவ்வளவுதானே!