dynobuoy wrote:


> வெங்கட்
>
> மேலும் சில கேள்விகள்!

மேலும் சில பதில்கள். 🙂

நான் ஏற்கனவே சொன்னதுபோல் புரிதல் உருவாகிவரும் நிலையில் இப்பொழுது இதை நீட்டிப்பதில்
எனக்குத் தயக்கமாகத்தான் இருக்கிறது. என்றாலும் தமிழினிக்ஸ் நீண்ட கடிதத் தொடரை வைத்து என்னுடைய
நேர்மையைக் கேள்விக்குறியாக ஆக்கியிருக்கிறீர்கள். எனவே, நான் பதிலளித்துத்தான் ஆகவேண்டும். {From: “V. Venkataramanan”
Date: Thu Nov 27, 2003 7:33 pm
Subject: Questions about Tamil PC project

Dear Friends,

I have today written a long mail addressed to Mr. Sujatha Rengarajan seeking some clarifications about his project(s).}

நீங்கள் கவனிக்க, அல்லது இங்கே சுட்டிக்காட்டத் தவறிய அல்லது மறைக்க விரும்பும் மடல். திண்ணையில் ஜன 22ம் தேதி வந்தது, இதே நவம்பர் 27ன் சற்றும் திருத்தப்படாத படிவம்.

எனவே, கீழே வரும் நீண்ண்ண்ட தொடரைச் சுட்டியிருக்க அவசியமே இல்லை. நான் எழுதியது இவற்றுக்கெல்லாம் முன்னால்.
திண்ணையில் வந்ததும் இதன் மாற்றப்படாத வடிவம்தான்.


> இதோ ஒரு காலரீதி (time line).
> [1] Ma சிவக்குமார் தமிழ் பி சி திட்டம் குறித்து tamillinix
> குழுமத்தில் முதலில் தெரிவித்தது
> நவம்பர் 28, 2003. amilinix/message/2625.
> அது ஒரு தன்னிலை விளக்க மடலாகவே அமைந்தது.
> [10] ஜன 19 -> ழ-கணினியைப்பற்றிய உங்களின் வெடி கடிதம்.
> அனைவரையும் அம்பலப்படுத்துவதாக
> கொக்கரித்த கடிதங்கள் தொடர்ந்தன. இதைத்தொடர்ந்து சிவக்குமாருக்கும்
> உங்களுக்கும் விவாதங்கள் இன்னும்
> தொடர்கின்றன.
> [11] ஜன 22 -> திண்ணையில் உங்கள் கட்டுரை.

என்னைப்பற்றி எழுதும்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் (கொக்கரிக்க…) அதே சமயம் திரு சுஜாதாவின் வார்த்தைகளை பூசிமொழுக நீங்கள் எடுக்கும் பிரம்மப்பிரத்தனத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது உங்கள் நேர்மையில் எனக்குச் சற்று சந்தேகம் வருகிறது என்று சொன்னால் கோபப்படமாட்டீர்களே! 🙂

கொக்கரிப்பதற்கு 🙂 முன்னால் நான் திரைமறைவில் அமைதியான முயற்சிகளை மேற்கொண்டதைத் தெளிவாக விளக்கியிருக்கிறேன். அதைப் பற்றிய விபரங்கள் மேலே இருக்கும் தமிழினிக்ஸ் தொடரில் இருந்தும் நீங்கள் அதை மறந்திருக்கிறீர்கள், மறைத்திருக்கிறீர்கள்.


> ஆக, திண்ணையில் உங்கள் கட்டுரை வெளியாவதற்கு முன் இத்துனை
> கலந்துரையாடல்களையும் மறந்து,
> மறுத்து, “முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள்” என்று எழுதியதை எந்த
> வகை நியாயம், நேர்மை என புரியவி
> ல்லை. திண்ணை கட்டுரையில் ழ-கணினி திட்டதிற்கான சுட்டி
> தேடினாலும் கிடைக்காது! :)). அவர்கள் மேல்
> குற்றச்சாட்டுகளை அடுக்கிவிட்டு, அவர்களின் இணையத்திற்கு சுட்டி
> கொடுக்காததற்கு எந்த திருக்குறளை,
> வெண்பாவை காரணம் காட்டப்போகிறீர்!

சொன்னதுபோல் அந்தத் திண்ணைக் கட்டுரை (சுஜாதாவுக்குக் கடிதம்) எழுதிய நாளில் இதெல்லாம் கிடையாது. ழ-கணினியின் கேள்வி-பதில் பக்கமே என்னுடைய கடிதத்தை வைத்துத்தான் பல நாட்கள் கழித்து வெளியிடப்பட்டது. மேலும் என் திண்ணைக் கட்டுரை தொடர்வதான உத்தேசத்தில்தான் எழுதப்பட்டது. அது திண்ணையில் தொடரப்படும். இடையில் ழ-குழுவினர் என்னுடன் தொடர்பு கொண்டிருப்பதால் இந்த நிலையில் அதைப்பற்றி உடனடியாக எழுதும் அவசியமில்லை. இது நல்லபடியாக முடிந்தவுடன் (முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது), அதே திண்ணையில் தொகுத்தளிக்க உத்தேசம்.


> எழுத்தாளனுக்கு ஒரு தனி நடை, ஆளுமை, திறமை இருப்பது நன்று.
> அதை சுஜாதா பெற்றிருக்கிறார். புரி
> ந்துகொள்ளுதல் வாசகனின் சுழலையும், அறிவையும் சார்ந்த விசயம்.
> எழுதுவதற்கெல்லாம் விளக்கமளி
> த்துக்கொண்டிருந்தால் (அ) படைப்பின் கலை கெட்டுவிடும் (ஆ)
> எழுத்தாளன் வேறு படைப்பை எழுதமுடியாது.

ஐயா, இது படைப்புக்கட்டுரை இல்லை தகவல் விஷயம், தொழில்நுட்ப முன்னேற்றத்தை அவர் மக்களிடம் எடுத்துச் சொல்கிறார். இதில் கலையைவிடப் புரிதல் முக்கியம். தொடர்ச்சியாக நீங்கள் தொழில்நுட்ப சமாச்சாரத்தை படைப்பாளியின் மீது திணிப்பு என்ற ரீதியில் திரிக்கிறீர்கள்.

அப்படியான ஒருவரின் இருமையைச் (duality) சொல்வது தவறு என்கிறீர்களா?


> விவாதம் ஒரு வட்டத்தில் இயங்கும் போது, அதற்கு totally tangent
> ஆக ஒரு விவாதம் வேண்டாம்.
> வேண்டுமானால் தனி விவாதம் துவங்களாமே!

தனி விவாதம் துவங்கட்டும். அதில் ஒரே வாரத்தில் இந்தியா டுடேயில் “இந்தகாலத்திலும் மரபில் பாட்டெழுத முயற்சிப்பவர்கள் இருக்கிறார்களே” என்று எள்ளி நகையாடியதும் மின்னம்பலத்தில் ஒற்று நீக்கி எழுத்தெண்ணிப் பாடப்பட்ட நம்மாழ்வாரின் கட்டளைக்கலித்துறையைச் சிலாகித்து எழுதியதும், இன்னபிறவும் வரும்.


> உங்கள் திட்ட காலரீதி குறித்த ஒரு கேள்வி…
> ta.openoffice.org இல் உங்கள் வெளியீடுகள் ஜன 15, 2004 மற்றும்
> ஜன 21, 2004 (அதாவது ழ-
> கணினியின் வெளியீட்டைப் பற்றிய விவாதத்தை அடுத்து)தான்
> வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் செப், 2003ல்
> தான் (ழ-கணினி May 2003 இப்பணியை துவக்கியதை சிவக்குமார்
> கூறியிருந்தார்) இந்த இணைய
> தளத்தை அமைத்ததாக முன்வைத்த கேள்விக்கு விளக்கமான பதிலையோ,
> சுட்டியையோ கொடுக்கலாமே? மேலும்
> இதைப்போன்ற சந்தேகங்களை களைய உங்கள் FAQவில் உங்கள் timeline விளக்கப்படலாம் என
> நினைக்கி றேன்!

தமிழ்லின்கஸ் இணையதளம் என்னுடைய செலவிலும், தனி முயற்சியாலும் சில நண்பர்களின் தொகுப்பாலும் நடைபெறுகிறது. இதில் இதுபோன்ற சரித்திரப்பேழைத் தகவலைத் தேக்க வேண்டிய அவசியம் எனக்கு முன்னாலேயே தெரிந்திருக்கவில்லை. எனவே, இதைச் செய்ய முயற்சிக்கவில்லை. அதன் முக்கிய சேவை தமிழ் லினக்ஸ் நிரலிகளைத் தொகுப்பது, மற்றும் உதவிக்கட்டுரைகளைத் தருவது.

மேலும் எனக்கு நேரம்போதவில்லை என்பதால் அந்தத் தளத்தை நான் கடந்த ஒன்பது மாதங்களாகச் சரியாகப் பராமரிக்கவில்லை என்பதும் தெளிவு.

தகவல் இல்லை என்பதைக் கேள்விக்குறியாக்கும் நீங்கள் அரைகுறைத்தகவல் (==பொய்) தந்த அவர்களின் ஆரம்பகால நடவடிக்கைகளைப்பற்றி ஒரு வரி எழுத மறுப்பதும் உங்கள் நேர்மையைக் கேள்விக்க்குறியாக்குகிறது.


> <<<<<<<
> >>’பின்னால் கையைக் கட்டிக்கொண்டு’ == மேலாண்மை செய்வது??
> <<<<<<<
> முழு வாக்கியம் -> “பின்னால் கையைக் கட்டிக்கொண்டு ‘எல்லாம்
> சரியா இருக்கா?’ என்று கல்யாண
> சாப்பாட்டின் போது ஒருவர் விசாரிப்பாரே… அது போல”
> திருமணங்களில் இவ்வாறு விசாரிப்பவர் மணமக்களின் தூரத்து
> சொந்தக்காரராய் (ஒன்று விட்ட சித்தப்பாவின்
> இரண்டாவது அத்தையின் மாமன் மகன்) இருப்பார். திருமணத்தில்
> ஆர்வமாய் பங்கேற்கும் இவர் திருமணம்
> முடிந்தவுடன் கணக்கை ஒப்படைத்துவிட்டு மறைந்துவிடுவார். ஆனந்த விகடனில்
> மனதில் பதித்த கதாபாத்தி
> ரங்களை (தலைப்பு நினைவில்லை) பற்றி ஒரு தொடர் வெளியானது.
> அதில் இதை எழுத்தாளர் (பாஸ்கி என நி
> னைக்கிறேன், அவர் பெயரும் மறந்து விட்டது) அழகாய்
> விவரித்திருப்பார். (இதுதான் ஈரொ(¡)ட்டம்,
> சேலம், தருமபுரி, என்று பேராயர் யாராவது எழுதப்போகிறார்.
> ஹ¤à®®à¯!).

>

ம்ம்.. என்னத்தங்க சொல்றது, நீங்கள் இப்படி மாஞ்சு மாஞ்சு மேற்கோளெல்லாம் காட்டிக்கிட்டு இருக்கீங்க, இன்னொரு பக்கம்…

உங்களுடைய நீண்ண்ண்ட விளக்கங்களையெல்லாம் அவர்களே மறுதலிக்கிறார்கள். நேற்று வெளியிடப்பட்ட ழ-குழுவின் பத்திரிக்கை அறிக்கை.

{ழ அறிக்கை}
இது போன்ற நல்ல திட்டங்களில் தமிழக அரசையும், தமிழக மாணவர்களையும் மற்ற பொது மக்களையும் ஈடுபடுத்த திரு சுஜாதா அவர்கள் தலைமையில் à®´ – குழு உருவானது. இதன் முக்கிய அங்கத்தினர்கள் திரு. சுஜாதா, திரு. சிவக்குமார், திரு. †à®°à®¿†à®°à®©à¯, செல்வி. ஜெயராதா, திரு. சாந்தகுமார், திருமதி. லீனா ஆகியோர்
{/ழ அறிக்கை}

அவர்களே தலைவர் சுஜாதாதான் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவரைப்போய் ஏன் கேட்டீர்கள் என்ற ரீதியில் என்னைப் போட்டு தாக்குதாக்கு என்று நொறுக்கியதற்கு நீங்கள் வெளிப்படையாக வருத்தம் தெரிவிப்பீர்கள் என்று நம்பலாமா?


>
> பிளத்தல் :
>
> <<<<<<<
> >>வெல்ச் ஜெண்டூ லினக்ஸை இரகசியமாக ஒருநாள் பிளந்துவிட்டு
> <<<<<<<
> வெல்ச் ஜெண்டூ லினக்ஸ்சை பிளப்பதற்குமுன் விவாதித்துவிட்டுதான்
> பிளந்த்தார் என்பதை மறுக்கவில்லை! ஆனால் பி
> ளவு என அவர்கள் (ழ-கணினி) ஒப்புக்கொண்டால் என்ன
> செய்யவேண்டும் என விளக்க கேட்டிருந்தேன். தாய்
> (THAI) மொழியில் இதைபோல் பிளவு நிகழ்ந்ததை சுட்டியிருந்தேன்.
> அதை ஆராய்ந்தால்
> உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு உதவும்!

நான் எழுப்பிய எதிர்கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்திருந்தால் இந்தக் கேள்விக்கு இடமிருக்காது. மொழியாக்கம், உதவி ஆவணங்கள் தயாரிப்பது போன்றவற்றில்கூட பிற மொழிகளில் இரண்டு திட்டங்கள் இல்லை. இந்த நிலையில் மோஸிலா, ஓப்பன் ஆபீஸ், விசைப்பலகை போன்றவற்றில் நடந்த எத்தனங்கள் பிளத்தல் என்பதில் உங்களுக்கு மறுகருத்து இருக்கிறதா?

இன்னொன்றையும் நீங்கள் தொடர்ச்சியாக மறை(று)த்து வருகிறீர்கள். தமிழில் போதுமான அளவு வேலை செய்ய ஆளில்லை, இந்த நிலையில் தமிழ் ஆர்வலர்களை ஒரே செயலைத்திரும்பச் செய்யச் சொல்வதன் குழப்பம்தான் என்னுடைய நடவடிக்கையின் அடியோட்டம். தொடர்ந்தும் நான் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து செய்யலாமே என்று சொல்லிவருகையில் நீங்கள் அவர்கள் அப்படிச் செய்தால் என்ன ரீதியில்தான் கேட்கிறீர்கள். என்னுடைய நோக்கமெல்லாம் ஒன்றிணைப்பாக இருக்கையில் நீங்கள் இல்லை அவர்கள் தனித்து நின்று செயல்படுவதில் என்ன தவறு ரீதியிலேயே போகிறீர்கள். உண்மையிலேயே உங்கள் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. ஊர் ரெண்டுபட்டால் என்று சொல்வார்களே அதுகூட நினைவில் வந்து போகிறது. நீங்கள் வேறு கூத்தாடி என்ற வார்த்தையை நினைவுபடுத்திவிட்டீர்கள் 🙂


>
> <<<<<<<
> >>சேர்ந்து செயல்பட வேண்டியது எவ்வளவு முக்கியம்
> <<<<<<<
> அவ்வாறு சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும்.
> “கூத்தாடி கூத்தாடி உடைபட்டு” வி
> டக்கூடாது என்பதே பலரின் விருப்பமும்.
>
> <<<<<<<
> >>அவர் லினக்ஸ் தொடர்பில்லாதவர் என்பதை அவரே எழுதியிருக்கிறார்
> <<<<<<<
> தமிழ் பதங்களை எழுதுவதற்கு லினக்ஸ் தொடர்பின் அவசியம் என்ன?
> அவ்வாறே லினக்ஸ் சம்மந்தமான
> சொற்களுக்கு ழ-கணினி முனைவரை கலந்திருப்பார்.

ஆணைமூலம் எழுதுபவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்வி வியப்பளிக்கிறது. தொடர்பில்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதன் உதாரணத்தை பத்ரி இன்றைக்கு எழுதியிருக்கிறார்:

{பத்ரி}
“Save” என்பது “சேமி” என்றும், “Save as”
என்பது “சேமி போல” என்றும் தமிழாக்கப்பட்டிருக்கிறது. “Save as”
என்பதற்கு ஒத்த தமிழாக்கம் “வேறு பெயரில் சேமி…” என்று
சொல்வதே … என நான் நினைக்கிறேன்.
{பத்ரி}


>
> <<<<<<<
> >>தமிழில் கணினியை இயக்குவதில் நம்பிக்கையில்லாதவர்
> <<<<<<<
> முன்பு இருந்திருக்கலாம். அக்கருத்தில் மாற்றமிருப்பதை அவருடைய புதிய
> கட்டுரைகள் தெளிவாக்குகிறது. அவரி
> ன் ழ-கணினி ஆர்வமும் அதை பொதுப்படுத்தியிருக்கிறது.

மாறலாம் தவறில்லை. ஆனால் நான் ஒருகாலத்தில் இதைச் செய்தவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று எழுதினேன். இப்பொழுது இதன் முக்கியத்துவம் தெரிகிறது என்று எழுதியிருக்கலாம். அப்படி வெளிப்படையாக இல்லாவிட்டால் கூட இது முக்கியமாகத் தெரியும்பொழுது செய்பவர்கள் எல்லோரையும் ஒரே தட்டில் நிறுத்தியிருக்கலாம். அப்படியில்லாமல் ஒரு குழுவினர் வேலைவெட்டி இல்லாதவர்கள், என்னிடம் வருபவர்கள் உன்னத நோக்கம் கொண்டவர்கள் என்பதை நிலைப்படுத்திக் கொள்வதுதான் குழப்பமளிக்கிறது.


> அகராதியை
> Plagiary என வகைப்படுத்தமுடியாது
> என்ற என்வாதத்தில் எனக்கு மாற்றமில்லை.

எனக்கும் மாற்றமில்லை.:). பிற மேற்கோள்களைச் சுட்டுவது அறிவியல்/தொழில்நுட்ப வழக்கு. அது தேவையில்லை என்று நீங்கள் சொல்வது உங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். நான் படித்த பள்ளியில் இப்படிச் செய்பவர்கள் இகழப்படுவார்கள்.


>
> <<<<<<<
> >>இதைப்பற்றிக் குரலெழுப்பாமல் இருந்திருந்தால் இங்கேயிருக்கும்
> பத்துபேருக்குக்…
> <<<<<<<
> குரலை கொஞ்சம் உரக்கவே எழுப்பியிருக்கிறீர். Ma.சிவக்குமார்,
> வசிகரன், பத்ரி, ஜெயராதா ஆகிய
> ஆர்வலர்களுடன் முதலிலேயே கலந்து விளக்கியிருக்கலாம்!

>

உங்களுடைய எண்ணங்கள் நன்றாகப் புரிகின்றன. நான் அவருடைய ஈகோவைப் பாதித்துவிட்டேன். அது என்னுடைய தெய்வகுற்றம். எனக்கு தனிநபரின் ஈகோவைவிட பொதுநலத்திட்டம்/தொழில்நுட்பத் திட்டம் நடக்கும் முறை முக்கியமாக இருக்கிறது.


> <<<<<<<
> >>திசைதிருப்ப முயலாதீர்கள்.
> <<<<<<<
> நான் திசை திருப்புகிறேனா?? எனக்கும் சிரிப்பு வருகிறது வெங்கட்!

>
நான் சிரிப்பதை நிறுத்திக் கொள்கிறேன். 🙂 நான் இரண்டுபேரும் சிரிப்பாய் சிரிக்கிறோம் என்று பிறர் சொல்லப்போகிறார்கள் 🙂


>>
> <<<<<<<
> >>எனக்குத் தெரிந்தவகையில் உங்களுடைய கருத்துக்களுக்கு வரிக்கு வரியாக
> நான் பதிலளித்துவருகிறேன்.
> <<<<<<<
> ஆம். ஆனால் உங்கள் வலைப்பதிப்பை ‘மட்டுமே’ படிக்கும் ஒரு
> வாசகனின் மனநிலையில் இருந்து பார்த்தால்,
> ஏதோ உங்கள் மேல் புழுதி அடிக்கும் ஒருவன் வாதம் என ஒதுக்க
> வாய்ப்புக்கள் அதிகமல்லவா? இணைய முகவரி
> யை அச்சாய் (text) வெளியிடுவதற்கு பதில் சுட்டியாய் (hyper text) வெளியிட்டிருக்கலாமே?
> இதிலும் ஓட்டை கண்டுபிடிக்கிறானே என்று நினைக்கவேண்டாம். வாசகன் சுட்டியையும்,
> அச்சு எழுத்தையும்
> எவ்வாறு அணுகுவான் என்று உங்களுக்கு நான் விளக்கத்தேவையில்லை என
> நினைக்கிறேன்! இதை தெரிந்தே செய்தி
> ருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஐயா, உங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. ஒருவர் முன்னோடித் திட்டங்களை எல்லாம் முழுசாக மறைப்பாராம், அதற்கு நீங்கள் சப்பைக்கட்டு கட்டிவருவீர்கள். இன்னொருபுறம் நான் நேர்மையாக சுட்டியை வெட்டியட்டினால் அதற்கு நீங்கள் சுட்டிக்கு இணைப்பு கொடுங்கள் என்பீர்கள். பின்னர் இணைப்பு கொடுத்தால் யாகூவிற்குப் போய் யாரும&#3