என்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதற்கு நான் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தேன். ஒரு மாதத்தில் இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்.

1.

Date: Wed, 10 Dec 2003 22:55:09 +0530
From: R Shashidhar

hi Venkat,

Most of the questions answered in
http://www.zhakanini.org/faq.html
are based on your letter to Sri Sujatha.
I am unable to give you his email address.

If you have any further questions,
you are welcome to ask me.

regards,
shashi.

2.

Date: Sat, 13 Dec 2003 21:11:45 +0530
From: S.Rangarajan

your long letter has been abswered see the FAQ
Sujatha

3

Ma Siva Kumar wrote:

> On Tuesday 20 Jan 2004 1:39 am, Venkataramanan
> wrote:
> > Now it is for public consumption in my next
> > mail.
>
> Please see http://www.zhakanini.org/faq.html for
> the answers.
>
> anbudan,
>
> Ma SivaKumar

ழா கணினி குழுவினருக்கும் சுஜாதாவிற்கும் இருக்கும் பத்திரிக்கைத் தொடர்புகள், பொதுஜனத் தொடர்புகள், வலைத்தளம் இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவர்கள் எடுத்தாளும் தமிழ் லினக்ஸ் தன்னார்வலர்கள் பெயர்கள் வருகின்றதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இல்லை ஏமாற்றுவது என்ற தீர்க்கமான முடிவில் இருப்பதைப் போலத் தெரிகிறது.

எனவே, அவர்களது வலைத்தளத்தில் இருக்கும் கேள்வி-பதில் விடைகள் (திரு சசிதர் இது என்னுடைய கேள்விகளுக்கான பதில்கள் என்று கூறியிருக்கிறார்). பகுதியில் இருக்கும் பொய்களை திறந்து காட்ட முற்படுகிறேன்.

உண்மையில் இதன் தலைப்பில் வெங்கட்டின் கேள்விகளுக்கு விடைகள் என்றுதான் ழா-வினால் தலைப்பிடப்பட்டிருக்க வேண்டும். நான் இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்காவிட்டால் அவர்கள் தமிழ் லினக்ஸ் ஆர்வலர்களின் உழைப்பை ஒட்டுமொத்தமாகத் திருடியிருப்பார்கள் என்பது நிச்சயம். சொல்லப்போனால் நான் செந்தொப்பி என்ற தமிப்’படுத்த்தலை’க் கிண்டல் செய்திருக்காவிட்டால் அவர்களின் தமிழ் கணினித் திட்டம் ‘தமிழ்பிசி’ என்னும் அழகான பெயரிலேயே தொடர்ந்திருக்கக்கூடும்.

1. என்னுடைய தொடர்ச்சியான, பொறுமையான அணுகலுக்கும், தமிழினிக்ஸ் குழுவில் இருக்கும் முகுந்தராஜ் போன்ற நண்பர்களின் கேள்விகளுக்கும் பிறகும் கூட இன்றுவரை தமிழ் லினக்ஸ்க்குப் பங்களித்து இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அதிகார்வபூர்வ லினக்ஸை வெளியிடச் செய்தத் தன்னார்வலர்களின் பெயர்கள் ஒன்று கூடக் குறிப்பிடப்படவில்லை. பிற தமிழ் லினக்ஸ் தளங்கள், நிரலிகள், உதவிக் கட்டுரைகள், தமிழ் லினக்ஸ்க்குக்காக இலவசமாக, தளையறு மென்கலன் உரிமத்தில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் போன்றவற்றைப்பற்றிய எந்த ஒரு தகவலும் சுட்டிக்காட்டப்படவில்லை. எனவே, ழா-தளத்தைப் படிப்பவர்களுக்கு இன்றைய நிலையில் (இந்திய மொழிகளிலேயே முதன்மையாக) தமிழ் இருக்கக் காரணம் இந்தத் திட்டம்தான் என்று தோன்றும். இது அறிவுத்திருட்டு.

அறிவியல்/தொழில்நுட்ப உலகில் யாருடைய கண்டுபிடிப்புகளையும் பங்களிப்புகளையும் ஒட்டி நம் படைப்பை அமைக்கிறோமோ, யாருடைய உழைப்பை நாம் முன்னெடுத்துச் செல்கிறோமே அதைச் சரிவரக் குறிப்பிடுதல் நாணயமான முறை. அப்படிக் காட்டாமல் மறைப்பது அவர்களது அறிவுசார் சொத்துரிமையைத் திருடுவதற்குச் சமம். எனவே, இது கட்டாயம் அறிவுத்திருட்டு.

2. இந்த ழா-வில் கேள்வி-பதில்கள் பகுதியில் தொடர்ந்தும் பல விஷயங்களைத் திரித்துக் கூறி ஏமாற்றுகிறாகள். முதலாவது உதாரணம்.

{கேள்வி} மொழியாக்கத்தில் எந்த அகராதி பயன்படுத்தப்படுகிறது?

{பதில்} தமிழ் கலைச்சொல் அகராதி

இதைப் படிப்பவருக்குக் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டுவரும், அறிஞர்கள் குழு வடிவமைத்த கலைச்சொல் தொகுப்புதான் பயன்படுத்தப்படுகிறது (அதாவது மற்ற தன்னார்வலர்கள் செய்த லினக்ஸ் மொழியாக்கத்திற்கும் இவர்களது மொழியாக்கத்திற்கும் ஒரே அகராதி என்று தோற்றமளிக்கச் சொல்லப்படுகிறது).

உண்மை? அவர்களுடைய இணைய தளமே இப்படிச் சொல்கிறது. “மொழியாக்கத்திற்கானச் சிறப்பு அகராதியை இறக்கிக் கொள்ளுங்கள் (இது சுஜாதாவால் வடிவமைக்கப்பட்டது, அதாவது அப்படிச் சொல்லப்பட்டது. அவரது பெயரில் இருக்கும் இந்த அகராதியிலும் காலம் காலமாகத் தமிழில் புழங்கி வரும் கலைச்சொற்களும், பிறர் தொகுத்த அகராதியின் பங்களிப்பும் உண்டு, வழக்கம்போலவே இதுவும் அறிவுத் திருட்டுதான்). அதை வைத்துக் கொண்டு உங்கள் மொழிபெயர்ப்பைச் செய்யுங்கள்”

யாரை ஏமாற்றுகிறார்கள், அவர்களை நம்பி தங்கள் உழைப்பத்தரும் கல்லூரி இளைஞர்களையா, காலம் காலமாகப் பலன் கருதாமல் லினக்ஸ்க்குப் பங்களித்துவரும் தமிழ் லினக்ஸ் ஆர்வலர்களையா, ழா திட்டத்திற்குப் பண உதவியளிக்கும் தனியார் நிறுவனங்களையா, தமிழிணையப் பல்கலைக்கழகத்தையா, வரிப்பணத்தில் வேலை செய்வதால் பொதுமக்களையா? எல்லாரையும் ஒட்டுமொத்தமாக.

அடுத்த பொய் குறித்த விபரத்தை விரைவில் எழுதுகிறேன்.