எழுத்தாளர் சுஜாதா அவர்களின் தமிழ் லினக்ஸ் திட்டம் பற்றி நண்பர் முகுந்தராஜ் (தமிழ் மோசிலா, தமிழ் ஓப்பன் ஆபீஸ் குழு) எழுதிய கடிதத்தைச் சில வாரங்களுக்கு முன் இங்கு முன்னிலைப்படுத்தியிருந்தேன்.
தொடர்ந்து நான் அவரை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். பல முயற்சிகளுக்குப் பிறகு அவரிடமிருந்து கிடைத்த ஏமாற்றம் தரும் பதிலை இங்கு முன்னிலைப்படுத்தியிருந்தேன்.
இப்பொழுது தமிழ் லினக்ஸ் குழுவினரிடையே அவருடைய திட்டத்தில் சம்பளம் பெற்றுப் பணியாற்றும் சிலரும் பங்களிக்கும் தன்னார்வலர்களும் திரு சுஜாதா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் அவர் தமிழ் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணைமூல நிரலிகளுக்கு அளிக்கும் பங்கிற்கு எல்லோரும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஒரு மறைமுகமான விளம்பரங்களைச் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் லினக்ஸின் தற்பொழுதைய நிலை என்ன, இதை முன்னெடுத்துச் செல்பவர்கள் (உண்மையாகவே) என்பவை போன்ற சில விபரங்களை வெளியிடவிருக்கிறேன். இதன் முதல் கட்டமாக, நான் திரு சுஜாதாவிற்கு எழுதிய கடிதம் இங்கே. இது அவரால் புறங்கையால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அன்புள்ள திரு சுஜாதா,
பல நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த இந்தக் கடிதம் ஒத்திப்போடப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணமாக என்னுடைய வேலை, குடும்பம் இவற்றை நான் சுட்டினாலும் சடத்துவம்தான் (inertia) உண்மை என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கடிதத்தின் நோக்கம் தங்களுடைய “தமிழ் பிசி” என்பதைப் பற்றிப் புரிந்து கொள்வது.
2002 டிசம்பர் 08 ஆனந்த விகடன் இதழில், மைக்ரோஸாப்டின் பில் கேட்ஸ் இந்திய வருகையை ஒட்டி, திறந்த ஆணைமூலத்தின் சிறப்பைப் பற்றியும், இந்தியாவில் அதன் தேவை குறித்தும் உங்கள் “கற்றதும் பெற்றதும்” தொடரில் எழுதியிருந்தீர்கள். அந்தக் கட்டுரையில் நான் உள்ளிட்ட (வெங்கட் ராமன் என்று நீங்கள் குறித்திருந்தது என்னைத்தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்தக் குழுவில் அந்தப் பெயரில் வேறு யாரும் கிடையாது) எங்கள் குழுவைப் பாராட்டியும் இருந்தீர்கள். அந்த முறை, எங்களுடைய தமிழ் கணினி நடவடிக்கைகள் தமிழக வெகுஜன ஊடகத்தில் முதன்முறையாக உங்கள் மூலம் கவனத்துக்கு வந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அதனால் எங்களுடன் திறமை மிகுந்த தமிழக் இளைஞர்கள் சேருவார்கள் என்று நம்பியிருந்தோம் (இன்றுவரை தமிழில் திறந்த ஆணைமூல நிரலிகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு மிக அதிகம்).
அதே கட்டுரையில் “வெளிவரவிருக்கும்” மாண்ட்ரேக் லினக்ஸில் தமிழ் பயன்பாடுகள் கிடைப்பதைக் குறித்தும் எழுதியிருந்தீர்கள். அந்த நேரத்தில் மாண்ட்ரேக் வெளிவந்திருந்தது. என்னுடைய சில தமிழ் லினக்ஸ் நண்பர்கள் உங்கள் கட்டுரை வெளியாவதற்கு முன்னால் அதன் குறுந்தகட்டை அம்பலம் அலுவலகத்தில் உங்களிடம் கொடுத்ததாக விவாதக் குழுவில் எழுதியிருந்தார்கள்.
பிறகு, கடந்த தமிழிணைய மாநாட்டில் (2003) உங்கள் உரை/கட்டுரையில் இதற்கு விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். அதில் நீங்கள் பல காலமாக நாங்கள் விவாதித்து வரும் ஒற்றைத் தகுதரம் பிரச்சனையைத் தொகுத்துச் சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் திறந்த ஆணைமூலத் திட்டங்களை அதிகம் விரித்துச் சொல்லாமல் போய்விட்டீர்கள். சில வாரங்களுக்கு முன்னால் நீங்கள் அம்பலம் மின்னிதழில் “தமிழ் பிசி” திட்டத்தைப் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். காசு கொடுத்துப் படிக்க வேண்டிய இணைய தளமான அம்பலத்தில் தளையறு மென்கலன் (Free Software) திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள என்னாலும் என்னுடைய திறந்த ஆணைமூல நண்பர்களாலும் இயலவில்லை. எனவே, இன்றுவரை அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.
கடந்த வாரம் ஆனந்த விகடனில் மீண்டும் “கற்றதும் பெற்றதும்” தொடரில் திறந்த ஆணைமூலத்தைக் குறித்து எழுதினீர்கள். இந்த முறை உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்குத் தன்னார்வலர்கள் தேவை என்ற அழைப்பை விடுத்திருக்கிறீர்கள். இது குறித்த ஆர்வமுள்ளவர்கள் உங்களுடன் (அல்லது உங்கள் குழுவுடன்) தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய இந்தத் திட்டத்திற்கு ரெட்ஹாட் இந்தியா (இது வர்த்தக நிறுவனத்தின் பெயர், இதைச் செந்தொப்பியாக ஆக்குவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. “தமிழ் பிசி” என்ற உங்கள் திட்டத்திற்கு உதவி செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தமிழ்ப்படுத்துவது அவசியம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்).
—
இந்தக் கடித்தத்தை எழுத எனக்கிருக்கும் தகுதிகளாக நான் கருதுவதைக் குறித்த ஓரிரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மீண்டும் தொடருகிறேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக என்னுடைய அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுத LaTeX பயன்படுத்துவதில் தொடங்கி (இதன் என்னுடைய சில பங்களிப்புகளை பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்) இன்றுவரை தொடர்ந்து வருகிறது. லினக்ஸின் துவக்கத்தை அருகிலிருந்து கவனித்தவன் (என்னுடைய படிப்பு கணினி பற்றிக் கிடையாது) என்ற முறையில் லினக்ஸ், தளையறு மென்கலன், பகிர்தலின் அவசியம் பற்றி விளக்கவும், தமிழ் லினக்ஸ்க்குப் பங்களிக்கவும் “ஒரு பெங்குவின் தமிழ்க் கற்றுக் கொள்கிறது” என்ற தொடரை திண்ணை மின்னிதழில் எழுதினேன். லினக்ஸ் ஆவணப்படுத்தும் திட்டத்தின் மூலமாக “தமிழ் லினக்ஸ் – எப்படி” என்ற விளக்கக் கையேட்டை எழுதித் தொடர்ந்து பராமரித்து வருகிறேன். தமிழில் முதன் முதல் துவக்கப்பட்ட உள்ளூர்மயமாக்கல் திட்டமான கேடிஈ திட்டத்தில் ஆரம்ப காலத்திலிருந்து பங்களித்திருக்கிறேன். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) – பணிக்குழு-7 (தமிழ் லினக்ஸ்) தலைவராக இருக்கிறேன். கடந்த சான்பிரான்ஸிஸ்கோ தமிழிணைய மாநாட்டில் (2002) தமிழ்ப் பள்ளிகளில் லினக்ஸ் மூலம் கணினி கற்பித்தலைப் பற்றிய ஒரு திட்டத்தை மாநாட்டின் முக்கிய உரையாக வழங்கினேன். தமிழ் லினக்ஸ் குறித்த செயல்பாடுகளை அறிவிக்க தமிழ்லினக்ஸ்.ஆர்க் இணைய தளத்தை மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறேன்.
—-
இனி தமிழில் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணை மூல நிரலிகளில் தன்னார்வக் குழுக்களின் பங்களிப்புகளையும் சாதனைகளையும் பற்றி கொஞ்சம்;
1. கேடிஈ மூலமாக தமிழ் முதல் இந்திய மொழி இடைமுகமாக வெளிவந்தது. (சிவக்குமார் சண்முகசுந்தரம், வசீகரன், குழு)
2. முனையத்தில் தமிழ் பயன்பாடுகள் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக வடிக்கப்பட்டது. (சிவராஜ், குழு)
3. தமிழ் க்னோம் திட்டம் இந்திய மொழிகளிலேயே முன்னோடியானது. (தினேஷ் நடராஜா, குழு)
4. இந்திய மொழிகளியே முதன் முறையாக, முற்றிலும் தமிழாலான இடைமுகம் கொண்ட மேசைத்தளத்துடன் மாண்ட்ரேக் லினக்ஸ் 9.0 வெளிவந்தது. (பிரபு ஆனந்த், குழு)
5. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக யுனிக்கோட் உருவேற்றி பாங்கோ மூலம் (சிவராஜ், விக்ரம், குழு)
6. ஓப்பன் ஆபீஸ் அலுவல் செயலி தமிழ்ப்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. (லினக்ஸ், மைக்ரோஸாப்ட் இயக்கு தளங்களுக்கு) (முகுந்தராஜ், குழு)
7. சிக்கலான அறிவியல் ஆவணங்களை வடிக்க தமிழ் லேட்டக்ஸ் நான்கு வருடங்களாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. (வசீகரன்)
8. திறந்த ஆணை மூல இணைய உலாவி மோஸிலா முற்றிலும் தமிழ்ப்படுத்தப்பட்டு லினக்ஸ் தவிர மைக்ரோஸாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பல இயக்கு தளங்களுக்குக் கிடைக்கிறது. (முகுந்தராஜ், குழு)
9. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக அதிகார்வபூர்வ “எப்படி” ஆவணம் தமிழில். (வெங்கட்ரமணன், குழு)
10. இதைத் தவிர பல எழுத்துரு தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் எழுத்துருக்களைத் தளையறு மென்கலன் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் பல செயலிகளும் பயனுதவிக் கருவிகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன.
11 இவற்றை எல்லாம் எளிதாக விளக்கும் வகையில் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக Knoppix, Demolinux வெளியீடுகளைத் தமிழ்ப்படுத்தி இலவசமாக செய்முறை விளக்கக் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கணினியில் லினக்ஸை நிறுவாமலே இயக்கிப் பார்க்க முடியும். (வசீகரன்).
—–
இவற்றை முன்னின்று பல்வேறு குழுக்கள் நடத்தி வருகின்றன. இவற்றுக்கென இணையத்தின் வழி இயங்கும் பல விவாதக் குழுக்கள் இருக்கின்றன. இந்த விவாதக் குழுக்களில் பங்கேற்பது எளிது, தன்னார்வலர்கள் தாமாகத் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இவற்றில் முக்கியமானது யாகூ குரூப் தளத்தின் வழி இயங்கும் tamilinix செய்திக் குழு. செய்திகளை அறிவிக்க tamillinux.org என்ற இணைய தளம் இயங்கி வருகிறது. கருவிகளின் சேமிப்பிற்கு உலகெங்கிலும் இருக்கும் பல தொழில்நுட்பர்கள் பயன்படுத்தும் sourceforge.org இணையதளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு பல சிறு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் பலவும் காலம் காலமாக உலகெங்கும் இருக்கும் திறந்த ஆணை மூல நிரலர்களை அடியற்றி திறந்த முறையில், பெரும்பாண்மை கருத்துகளுக்கு மதிப்பளித்து நடத்தப்படுகின்றன.
இவற்றைப் பற்றியெல்லாம் கட்டாயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், இவ்வளவு விரிவாக எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை. இணையத்தில் கூகிள் போன்ற தேடல் இயந்திரங்களில் தமிழையும் இவற்றையும் இணைத்து நடத்தப்படும் தேடல்களில் இவை குறித்த தகவல்தான் முன்னணியில் வரும். (உதாரணம்: tamil +linux).
இந்தத் திட்டங்கள் எதுவும் எந்த ஒரு நிறுவனத்திடமோ, அரசமைப்பிடமோ, கல்விக் கூடங்களிடமோ நிதியுதவி பெற்று நடப்பதில்லை.
—
இனி உங்கள் ‘தமிழ் பிசி’ திட்டத்தின் தேவை, அதன் நடைமுறைகள் குறித்த சில கேள்விகளுக்குத் தாங்கள் விளக்கமளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
1. தமிழில் ஏற்கனவே தொடங்கி தீவிரமாக நடந்துவரும் தன்னார்வத் திட்டங்களைப் புறக்கணித்துத் தாங்கள் புதிதாக ஒரு திட்டத்தை முன்னின்று நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?
2. உங்களுடைய 2002 டிசம்பர் கற்றதும் பெற்றதும் கட்டுரையிலேயே நீங்கள் இந்தத் திட்டங்கள் பலவும் கிட்டத்தட்ட 60% முடிவடைந்த நிலையில் இருப்பதாகப் பாராட்டியிருக்கிறீர்கள். இவற்றை முற்றாக நீங்கள் இப்பொழுது புறந்தள்ளக் காரணம் என்ன?
3. தமிழில் லினக்ஸ், கேடிஈ, மொஸிலா, ஒப்பன் ஆபீஸ் என்று பல ஏற்கனவே (இலவசமாகக்) கிடைத்துக் கொண்டிருக்க இவற்றை நீங்கள் திரும்பச் செய்வதாக அறிவிப்பதன் நோக்கம் என்ன?
4. அப்படி ஏற்கனவே சாதிக்கப்பட்டவற்றின் தரத்தில் தங்களுக்கு அதிருப்தி இருந்தால் எளிதில் அனுகக் கிடைக்கும் அந்தக் குழுக்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் வல்லமைகளை அவர்களுக்கு அளிக்க, அவர்களை வழி நடத்த, முயற்சித்தீர்களா?
5. திறந்த ஆணைமூல தயாரிப்பு வழியில் “பிளத்தல்” (forking) என்பது மிகவும் பாவகரமான செயலாகக் கருதப்படும். ஒரு திட்டத்தைப் பிளப்பதற்கு முன் அது சம்பந்தமான குழுக்களில் அதைப் பற்றித் திறந்த அறிவிப்புடன் ஜனநாயக முறையில் கருத்துக் கணிக்கப்படும். கருத்து மாறுபாடுகள் அலசப்பட்டு ஒருமித்த முடிவெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்னர், தவிர்க்க முடியாத பட்சத்தில் திட்டம் பிளவுபடும். இரண்டு குழுக்களும் மீண்டும் திறந்த வழியில் செயல்படத் துவங்கும். இது போன்ற திறந்த ஆணைமூலத் இயக்க விதிகளை நீங்கள் அறிவீர்களா? (மேலதிக விபரங்களுக்கு எரிக் ரேமண்ட்-ன் தி கதீட்ரல் அன்ட் தி பஸார்” புத்தகத்தைப் பார்க்கவும்). உங்களுடைய நடவடிக்கைகள் மூலம் அந்தப் பாவத்தைச் செய்வதாக அறிகிறீர்களா?
6. ஒருக்கால் உங்களுக்கு இருக்கும் பிரபலத்தின் அடிப்படையிலும், அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் இவற்றிலிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் பணபலத்தின் மூலமும் உங்கள் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக உலகெங்கும் பரவிக்கிடக்கும் பல தன்னார்வலர்கள் தாங்கள் பாடுபட்டுச் சேர்த்தப் பணத்தையும் (அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லோரும் பணக்காரர்கள் அல்லர்; எங்களில் சிலர் மாலை நேரங்களில் வேலை செய்து படிக்கும் மாணவர்கள்), தங்கள் நேரத்தையும் செலவிட்டு முன்னெடுத்துச் சென்ற திட்டங்கள் தீய்ந்து போகுமானல் உங்களுக்கு அதனால் பெருமையா?
7. இந்தத் திட்டங்களை முன்னின்று நடத்த நீங்கள் அரசாங்கத்திடமிருந்தும் கல்விக்கூடங்களிடமிருந்து பெற்ற மானியங்கள் வழக்கமாக அரசாங்கத் திட்டங்களைப் போல திறந்த முறையில் அழைப்பு விடுக்கப்பட்டு தேர்ந்த அறிஞர்களின் கருத்துப்படி (Peer Review Process) பரிந்துரைக்கப்பட்டவையா?
8. அப்படியென்றால் உங்களுடன் கூட மாற்றுத் திட்டங்களை அரசாங்கத்தின் முன் வைத்தவர்கள் யார் என்பதைக் காட்ட முடியுமா? (ரெட் ஹாட், அம்பலம் டிஷ்நெட் போன்ற தனியார்களின் உதவிகளைப் பற்றிக் கேட்கவில்லை).
9. இந்த வாரம் தமிழ்லினிக்ஸ் யாகூ குழுமத்தில் வெளியான அழைப்பின்படி நீங்கள் விரைவில் கேடிஈ தொடர் மொழியாக்கத்தில் ஈடுபடப்போவதாக அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்பில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கும், தங்கள் மானிய உதவியின் கீழ் சம்பளத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கும் தகுதி/பங்களிப்பு அடிப்படையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?
10. அந்தத் தொடர் மொழியாக்க நிகழ்வில் பங்குபெற்றவர்களுக்குத் தங்கள் கையப்பமிட்ட புத்தகங்களைப் பரிசாகத் தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக பலனை எதிர்பாராமல் பங்களித்து வரும் தன்னார்வலர்களை ஏதாவது ஒரு வகையில் பாராட்ட வேண்டும் என்று முயன்றிருக்கிறீர்களா?
11. மானிய உதவியின் கீழ் வேலை செய்பவர்களின் உதவியுடனும், மொழிபெயர்ப்புக்குப் பாராட்டாக புத்தகங்களைப் பெற்றுக் கொள்பவர்களின் துணையுடனும் இந்தியாவில் (தமிழகத்தில்) தளையறு மென்கலன் கொள்கைகள், ஆணை மூலங்களைப் பகிர்தலின் அவசியம், தற்சார்பின் முக்கியத்துவம் இவற்றை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று நினைக்கிறீர்களா?
12. மாறாக இது ரெட் ஹாட் நிறுவனத்தின் முழு நேரப் பணியா? அப்படியென்றால் அழைக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு இது தெளிவாக்கப்பட்டிருக்கிறதா?
13. உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்கென தனியான மொழியாக்க அகராதியை உருவாக்கி வருவதாக அறிகிறோம். ஏற்கனவே, இணையத்தின் வழி (உத்தமம்) பல்வேறு அறிஞர்களை உள்ளடக்கிய மொழியாக்கக் குழுவின் பரிந்துரைகளை விட்டு விலகக் காரணம் என்ன? (இந்தத் தொகுப்பு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ஈழத்து அறிஞர்களின் தொகுப்பு இவற்றின் அடிப்படைய&
Dear Venkat,
I would like to inform the following points regarding Sujatha and Tamil Linux issues
1.The person named as Shivakumar in the Tamil PC team is earleir associated with Dinesh and Vasikaran and team…
2.Mr.Shivakumar is known to Jayaradha and to me.Mr.Shivakumar is involved in localisation of TSCII version along Vasikaran and Dinesh for a long time.
3.Mr.Shivakumar used to ask us to involve ourselves in the project( late 2001)
4.By seeing the Vasikaran’s team work, myself and Jayaradha decided to bring a CD combining the all the sources available so far in net as Tamil linux OS.
5.We(myself and Jayaradha) with a help of investors,along with engineering college students,tried to assemble the sources available so far in the net and bundle it as a CD.Then the confusion prevailed whether to bring in TSCII or TAB.
6.All the paper works done and modules prepared.
7.I had some problems with the investors.Jayaradha said without money it would be bit difficult to execute project.
8.In the meantime (P.S.Jayaradha is working under Sujatha)Jayaradha started discussing with Sujatha about Tamil Linux project.
Sujatha asked her to display all the works done so far Vasikaran,Dinesh,Saravanan(Singapore..?)
9.Pls note, thats the first time Sujatha saw Tamil Linux for the first time.
10.Unfortunately some of the translation works by done by Dinesh team is so amaerure.Sujatha did some “kindal”
11.Then he called ShivaKumar and Jayaradha and said “Lets create a Tamil linux OS ” on Unicode.
12.They got all the funding easily from TVU and support from Dishnet.
13.Shivakumar knows whats the drawback of TSCII version
Cont….
Aravindan
Bangalore
Aravindan, Glad to see you here and glad to see another member from Zha coming out of stealth mode 🙂
Since you said contd… I will wait before I comment on you. Basically, all the questions addressed to Sujatha can now be addressed to you, I guess 🙂
14.After the seeing the works of others Sujatha thought of new version on his own.
15.The most unfortunate part is even ShivaKumar who worked with Vasikaran team joined with Sujatha by simply forgetting about his past association.
16.After TamilInternet 2003,in Tamil_ulagam yahoo group conf,I wrote about Sujatha’s attempt of projecting himself as saviour of TamilLinux OS(which is not the fact)
17.Sujatha will never accept any critisim,never accept any attempt.
18.I had several discussion with him on the Saturday chat on various issues.He never never never accept anything which is logical,correct with facts to support.
19.I am really feel pitty on the mass Tamil media which is so narrow minded which accepts whatever Sujatha says as Technology..
20.But small magazine like Tamil Computer ulagam will never accept Sujatha works on Linux,because they don’t need stories or articles from him,where as for Ananda Vikatan its not so
21.I dont know Why these NRI folfs expect his appreciation,commemt about their original works.because of this only he think too much about himself and he feels balls to others.
22.70 vayasilum puzhagukku asaipadupvargalai enna seiyya
23.Oru Tamil pazha mozhi…sila manithargalukku
ella idathilum mukkiyathuvam ethirpapangaa
Kalyana veetila iruntha Mappillai irukka ninaippangaa
Izhavu(saavu) veetila ponama irukka ninaippangaaa
Intha type than Sujatha vummmm
Anbudan
Aravindan
Dear Venkat,
24.One more point to mention here.There is a company called Chennai Kavigal Kanini,Chennai under the guidance and finacial aid from IIT Chennai working on Tamil LInux projects.They also always underestimate the works of overseas Tamil Linux projects
In Chennai All the Tamil computing companies in will talk very bad about open source products particularly the works done by overseas Tamils….
Why Sujatha, even the Kanithamizh Sangam,(A association formed by the tamil computing companies in TN) purposely spread wrong informations about open sourse products..They never ever conducted any seminar or meeting about open sourse productssss..
When u question them they will simply say open sourse products will not give support,will not give printed materials etcccc.
They want to safe guard their business interest.Thats all..
Anbudan
Aravindan
what happened to my comment which i posted some 10 mins ago
will aravindan or somebody else give a state of art picture about open source & free software projects and groups working in tamil.one does not expect everyone in the computer industry to support them.in the long run if open source has to succeed in tamil there should not be too much confusion in the initial stage itself, with claims and counter claims.
although i am not aware of the fine details of what is going on with linux, i am hurt to see the attitude of ‘big’ name people like sujatha in ignoring the selfless efforts of numerous volunteers. hope sujatha gives a responsible explanation.
Aravindan, thanks for your comments. I am glad that you dissociated yourself from this hijackers. Will comment more later.
While searching for something in Google, I came across this page. Aravindan, nice to read your writings after a long time. Venkat, you have achieved something – to pour cold water on the enthusiasm of a number of open source contributors and you should be happy about it! I am disgusted.
Ma Siva Kumar
March 25, 2004
Siva 🙂
I am surprised to read this insinuation here after neglecting 3 of my personal mails to you.
Pl. do not worry much. Tamil Linux works are going with its usual pace, with constant acceleration. It is just that no big splash is made in the popular media.
BTW, Do you reckon that I am powerful enough to curb the enthusiasm of people(students) in India, who in your own words, “do not have internet access and hence cannot subscribe to tamilinix”. I guess there should be something more to it 🙂
I do not know about others. Atleast, you succeeded in curbing me. Personally, I feel what is the point in doing all this and hope to come out of that mentality some time sooner.
As to efforts going at their usual pace, hope you can muster your forces and get Gnome Tamil to cross some 80% or 90% translation level (as is the case with KDE now). We really wanted to take it up, but “the community” represented by you is ready to shut down any useful work.
The students in India have to be galvanized by a close team and that team is demoralised. You can always take up with the few lakh tamil population in Canada and carry the torch forward.
I get a feeling that you really do not want to make tamil linux mainstream.
As for your personal mails, I welcome you to publish what you wrote and how we responded.
Siva Kumar