தற்பொழுது வெளியாகி அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விவரணத் திரைப்படம் பாரன்ஹீட் 9/11. இந்தப் படத்தைக் குறித்த அருண் வைத்தியநாதனின் விமர்சனம் இங்கே.

michael_moore.png நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. மைக்கேல் மூரின் முந்தைய பௌலிங் ·à®ªà®¾à®°à¯ கூலும்பைன் விவரணப் படத்தையே நான் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பார்த்தேன். (பாரன்ஹீட் 9/11 என் பல்கலைக்கழக நூலகத்திற்கு டிவிடியில் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று இந்தப் படத்தின் இயக்குநர் மைக்கேல் மூர் இதை இணையம் வழியே இறக்கிக் கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். எனவே, இதை பிட்டாரண்ட் வழியே இறக்கிக் கொள்ளாமா என்று யோசிக்கிறேன்.

பொதுவாக திரைப்படத்துறை மற்றும் இசைத்துறை சம்பந்தப் பட்டவர்கள் சமகாலத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்களது தயாரிப்புகளை விரைவான (மற்றும் மலிவான) வழிகளில் விநியோகிப்பதை எதிர்த்து வருகிறார்கள். வெற்றுக் குறுவட்டு டாலருக்கு ஐந்து என்று கிடைக்கும் இந்த நாட்களில் இசைக் குறுவட்டுகளை 15-20 டாலர்கள் வரை விற்றுக் கொழுக்கிறார்கள். மறுபுறத்தில் இப்பொழுதைய நேரடிவலைத் தொழில்நுட்பங்கள் ஒற்றைக் கிடங்கிலிருந்து இல்லாமல் பயனர்கள் அவர்களுக்கு இடையே நேரடியாகப் பரிமாறிமாறிக்கொள்ள வழிதருகின்றன. காஸா, மார்பியஸ் போன்றவை இவற்றில் பிரபலமாக இருந்தாலும், திறந்த ஆணைமூலத் தொழில்நுட்பமான பிட்டாரண்ட் தொழில்நுட்ப ரீதியாக இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது.

பொதுவாக ஒரே பாடலையோ அல்லது திரைப்படத்தையோ ஒரே சமயத்தில் பலர் பதிவிறக்கம் செய்ய முயற்சிப்பதால் வழங்கிகள் அளவுக்கு அதிகமான சுமைக்கு ஆளாகி செயலிழந்து போகும். மாறாக பிட்டாரண்டில் பலர் பதிவிறக்க முயன்றால் அதன் செயல்திறன் அதிகரிக்கும். இதற்குக் காரணம், இறக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உங்கள் கணினி மற்றவர்களுக்குப் பறிமாறத் தொடங்கும், எனவே பலர் ஒரே சமயத்தில் இறக்க முயற்சித்தால், பல ஏற்று தளங்களும் கிடைக்கும். இந்தத் தொழில்நுட்பம் தேவைக்கேற்றபடி தன்னைத்தானே திறன் பெருக்கிக் கொள்ள ஏற்றது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள்தான் வருங்கால வலையின் ஆதார மையங்களாக இருக்கப் போகின்றன.

மைக்கேல் மூர் மாத்திரம்தான் இப்படிச் சொன்னார் என்றில்லை. பிரபலமான பல்ப் பிக்ஷன் மற்றும் கில் பில் திரைப்படங்களை இயக்கிய குவென்டின் டாரான்டினோகூட சில மாதங்களுக்கு முன்னால் என்னுடைய திரைப்படங்கள் அதிகார்வபூர்வமாகக் கிடைக்காத நாடுகளில் மக்கள் திருட்டு விடியோக்களை வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று சொன்னார். (அவரது கூற்றுப்படி மக்களின் வாங்குதிறனுக்கு ஏற்றபடியான சந்தைகளை உருவாக்கிக் கொள்ளாத திரைப்பட வர்த்தகர்கள்தான் தவறு செய்கிறார்கள்).

இப்பொழுது மைக்கேல் மூர் ” என்னுடைய படங்கள் நான் பலரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு இதனால் பெரிய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை கிடையாது இந்த நிலையில் நேரடிப் பகிர்வு வலைகள் மூலம் என் படங்களைப் பதிவிறக்கம் செய்தவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் கிடையாது என்று சொல்லியிருக்கிறார்”

இதுவரை இந்த விவரணப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லயன்ஸ் கேட் – ஆச்சரியப்படும்படியாக மைக்கேல் மூருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை (இதுவரை?). இவர்களது மௌனம் மூரின் நிலையை எதிரொலிப்பதைப் போல் இருக்கிறது.

உண்மையிலேயே மூர் வித்தியாசமானவர்தான்.