Printer Friendly Page
by வெங்கட் • August 3, 2004 • பொது • 0 Comments
![]()
என்னுடைய வலைக்குறிப்பின் அமைப்பில் இன்னொரு சிறிய சேர்க்கை; இப்பொழுது தனிப்பட்ட குறிப்புகளை பிற தேவையில்லாத விஷயங்களை நீக்கிவிட்டு அச்செடுக்க முடியும். இது மற்றவர்களுக்கு எப்படிப் பயன்படுமோ தெரியாது, ஆர்வமுள்ள என்னுடைய நண்பர்களின் பெற்றோர்களுக்கு இன்னமும் நேரடியாகப் படிப்பதில் சிக்கல் இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சில கட்டுரைகளை அச்செடுத்துத் தருவதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வழக்கம்போல சிக்கல்கள் எதுவுமிருந்தால் தெரியப்படுத்துங்கள்.
இதைச் செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் சுவாரசியமாகவே இருந்தது. என்னைப் பொறுத்தவரை என் வலைக்குறிப்பின் உள்ளடக்கங்களைத் தருவதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறதோ அதைவிட என்னுடைய வீட்டிலிருந்து இயங்கும் வழங்கியைப் பராமரிப்பது முதல் இதுபோன்ற நிரலிகளுடன் விளையாடுதல் வரை அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது.