நேற்றைய அறிவிப்பில் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் இனிமேல் தான் பணத்திற்காக இசைத்தட்டுக்களை வெளியிடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். தன்னுடைய திறமைக்கேற்ற ஊதியம் இதுவரை கிடைத்து வந்திருப்பதாகவும், (சொல்லப்போனால் கூடுதலாகவே), அது தன்னுடைய வருங்காலத்திற்குப் போதுமென்றும் சொல்லியிருக்கிறார். மேலதிக வருவாயில் ஆர்வம் இல்லை என்று சொன்ன ஜார்ஜ் மைக்கேலின் வருங்காலத் திட்டம் வித்தியாசமானதாக இருக்கிறது. தன்னுடைய பாடல்களை இனிமேல் இணையத்தின் வழியாக இலவசமாக வெளியிடப்போவதாகவும், தனக்குப் பணம் தர விரும்புவர்கள் இணையத்திலேயே தரலாம் என்றும், அவை பொதுநலத்திட்டங்களுக்குத் திருப்பப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். ஜார்ஜ் மைக்கேல் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னால் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பாடகர். வாம் (Wham!) என்ற இசைக்குழுவின் முக்கிய உறுப்பினர் (Wake me up; before you go, Last christmas,…). தொடர்ந்து தனியராக வெளியிட்ட Faith என்னும் ஆல்பம் அமெரிக்காவில் நான்கு முதலிடப் பாடல்களை உள்ளடக்கியிருந்தது. அந்தப் பாடல்களின் பரபரப்புக்கு மைக்கேலின் குரல்வளத்தைவிட ஆளுமை முக்கிய காரணமாகக் கருதப்பட்டது. அன்றைய பெண்களுக்கு கனவு நாயகனாகத் திகழ்ந்தார், கூடவே ·à®ªà¯†à®¯à¯à®¤à¯ ஆல்பத்தில் அவருடைய பிருஷ்ட அசைவுகளும் பிரமாதமாகப் பேசப்பட்டன. பின்னர், அந்த வெற்றியின் சுமையைத் தாங்க முடியாமலேயே அவர் அழியத் தொடங்கினார். அவருடைய அடுத்த இரண்டு வெளியீடுகளும் பெரிய தோல்வியைத் தழுவின. குரல் வளமில்லாமல், உடலைக் காட்டியே புகழ் பெறுகிறார் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லும் விதமாக, Listen Without Prejudice Vol – I என்ற ஆல்பத்தின் வீடியோவில் எங்கேயும் அவர் தலைகாட்டவேயில்லை. ஆனால் ஆல்பம் பலத்த தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து இசை நிறுவனம் கொலம்பியா அதைச] ]>