Klip Me!
by வெங்கட் • January 11, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
வலைக்குறிப்புகளில் இருக்கும் பெரிய சிக்கல் ஒருவர் எப்பொழுது உள்ளிடுகிறார் என்று தேடி அலைவது. இதை எளிதாக்கப் பல வழிகள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமானது xml-லில் எழுதப்பட்ட RSS செய்தியோடை. என்னுடைய வலைக்குறிப்பில் வலது பட்டியில் Syndicate this site (XML) என்று ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி RSS செய்திப் படிப்பிகள், RSS திரட்டிகள் போன்றவற்றின் உதவியுடன் உங்களால் எப்பொழுது நான் புதிதாக எழுதுகிறேன் என்று தெரிந்து கொள்ளமுடியும். இந்தத் திரட்டிகளில் நான் எதைப்பற்றி எழுதுகிறேன் என்பதையும் ஒருசில வரிகள் படிக்க முடியும். சிலர் இப்படிப் படிக்கிறார்கள்.
இதன் அடுத்த கட்டம் நேரடியாக உங்கள் மேசைத்தளத்திற்கே இதைக் கொண்டுவருவது. இதைச் செயல்முறைப்படுத்த எங்கள் மாநிலத்தில் இருக்கும் Scrence ஒரு நிறுவனம் KlipFolio என்று ஒரு இலவச நிரலியைத் தருகிறது. இதன் பயன் வலைக்குறிப்புகளைத் தாண்டி நீடிக்கிறது. இதன் உதவியுடன் உங்கள் மேசையில் பல தகவல்களை நீங்கள் பெறமுடியும். உதாரணமாக, அருகில் உள்ள திரைக்காட்சியில் நீங்கள் டொராண்டோ நகரின் தற்பொழுதைய வெப்பநிலையையும் அடுத்த இரண்டு நாட்களின் முன்நோக்கையும் பார்க்கலாம். இதுபோல கூகிள் செய்தி, ஸ்லாஸ்டாட் விவாதங்கள் போன்ற பல விஷயங்களை நேரடியாக உங்கள் மேசைத்தளத்திற்கே வரவழைக்க முடியும். இதை வைத்துக் கொண்டு நான் என்னுடைய வீட்டில் நிர்வகிக்கும் tamillinux.org இணையச் சேவை வழங்கி இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதையும் பார்க்க முடியும்.
இதன் தொழில்நுட்பத்தைப் பற்றி விரைவில் விரிவாக எழுதுகிறேன். இப்பொழுதைக்கு இதை முயற்சித்துப் பார்க்க விரும்புவர்கள் செய்ய வேண்டியது.
1. KlipFolio என்ற சிறிய நிரலியை scrence.com தளத்திலிருந்து பெற்று உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். Version 2.5 Beta -வைப் பயன்படுத்தவும். இது எழுத்துருக்களை மாற்றிக் கொள்ள உதவுகிறது.
2. வலது பட்டியில் இருக்கும் Klip என்ற பொத்தானில் தட்டினால் திறக்கும் இணைய பக்கத்திற்குச் சென்று குறும்படத்தின் கீழ் இருக்கும் (Add Klip +) என்ற இணைப்பில் சொடுக்கவும். என்னுடைய வலைக்குறிப்பை உங்கள் மேசைத்தளத்திற்குக் கொண்டுவர நான் எழுதியிருக்கும் சிறிய xml கோப்பைத் தானாக இணைத்துக் கொள்ளும்.
3. உடனடியாக என்னுடைய வலைக்குறிப்பில் கடைசியாகச் சேர்க்கப்பட்ட இடுகைகளின் விபரம் கிடைக்கும். மேலதிக விபரம் வேண்டினால் உங்கள் விசையெலியை ஏதாவது ஒரு வலைக்குறிப்பின் தலைப்பின் அருகில் கொண்டு செல்லவும். இது இன்னொரு பெட்டியில் அந்தக் குறிப்பின் முதல் சில வரிகளைக் காட்டும். அதில் விசையெலியைச் சொடுக்கினால் என்னுடைய இணையதளத்தின் சம்பந்தமான பக்கம் திறக்கும்.
இன்னும் சில வேலைகள் மீதம் இருக்கின்றன. இதை நான் முயற்சிக்கக் காரணமே, எல்லா நண்பர்களின் வலைக்குறிப்பையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதற்காகத்தான். பல சிக்கல்கள் இருக்கின்றன. பத்ரியின் செய்தியோடையை முயற்சித்துப் பார்த்தேன். யுனிக்கோட் குழப்பம் இருக்கிறது.
என்னுடைய முழு மேசைத்தளத்தையும் (With Klips from Slashdot, My webserver status, Toronto Weather (Surely, you do not want to come here at -26 deg. C)and my weblog updates) இங்கே காணலாம்.
வெங்கட்: நீங்கள் ‘நியூஸ்மான்ஸ்டர்’ RSS தொகுப்பானைப் பார்க்க வேண்டும். இது மொசில்லாவுக்குள்ளிருந்து இயங்குவதால் வேறெந்த மென்பொருளும் தேவையில்லை (ஜாவா வேண்டும்). இதைப்பற்றிய என் வலைப்பதிவு: http://thoughtsintamil.blogspot.com/2003_12_21_thoughtsintamil_archive.html#107207701627197704
தற்போது தான் முயற்சித்துப்பார்த்தேன். மிக அருமை.. வாழ்த்துக்கள்!
பத்ரி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வேலை.
நான் நியூஸ்மான்ஸ்டர், ஔல், போன்ற பல நிரலிகளைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இவற்றையெல்லாம் நெட்ஸ்கேப், மோஸிலா போன்ற உலாவி வகையில் சேர்க்கலாம். Content Management System என்று எக்ஸ் எம் எல்லின் அடிப்படியில் அமைந்த இணையப்பக்கங்களின் செய்தியோடை போன்ற வசதிகளைப் பயன்படுத்தித் தேவையான விஷயங்களை நேரடியாக நம் மேசைத்தளத்திற்கே வரவழைக்கும் அடுத்த முயற்சி இது.
கவனிக்கவும், இங்கு இணையப்பக்கங்கள், வலைக்குறிப்புகள், செய்திகள் மாத்திரமல்லாது, உள்ளூர் வெப்பநிலை, (அல்லது எங்களைப் போன்றவர்களுக்குக் குளிர் நிலை
) போன்றவற்றுடன், உங்கள் இணையச் சேவை வழங்கியின் நிலவரம். உங்களுக்குத் தேவையான பங்குகளின் சந்தை நிலவரம், கிரிக்கெட் நிலவரம் போன்று பல விஷயங்களை நேரடியாகக் கவனிக்க முடியும். நியூஸ்மான்ஸ்டரிலோ, ஔலிலோ இது போல என்னுடைய தமிழ்லினக்ஸ்.ஆர்க் வழங்கியின் ஆராக்கியத்தைக் கவனிக்க முடியாது. இதற்கு நான் பயன்படுத்த்தும் ஆக்டிவ்சர்வர் என்னும் சிறிய கிளிப் என்னுடைய வழங்கி பழுதுபட்டால் என்னுடைய செல்போனுக்குக் குறுஞ்செய்தி அனுப்புகிறது.
எனவே, கிள்ப் போன்ற நிரலிகளை நான் நியூஸ்மான்ஸ்டருக்கு அடுத்தகட்டமாகப் பார்க்கிறேன்.
நீங்கள் என்னுடைய Google News Science-Technology RSS செய்தியோடையை முயற்சி செய்தீர்களா?
http://www.muselog.net/feeds/google_scitech.xml
மேலும் விவரங்களுக்கு:
http://www.muselog.net/archives/000099.html
Please note: My google_scitech.xml feed is updated only once every hour.
நான் இப்போதுதான் முயற்சித்துப்பார்த்தேன் .. அருமையக இருக்கிறது..ஆனால் என்னால்தான் எழுத்துக்களைப் பார்க்கவே இயலவில்லை ..எல்லாம் பெட்டி பெட்டியாகத் தெரிகிறது .. XP புரபசனல் உபயோகிக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் இப்பிரச்சனை இருக்கிறது .. ஒரு கோப்பின் பெயரைத் தமிழில் கொடுக்க முயலும்போது மட்டும் இப்பிரச்சனை வருகிறது.. நான் வைத்திருக்கும் XP-ஹோம் எடிசனில் இப்பிரச்சனை இல்லை ..புரபசனில் மட்டும்தான் இப்பிரச்ச்னை..
நான் முயற்சித்ததில் எங்கள் ஊர் தட்பவெப்பம் ஒன்றும் வராமல் பூச்சி காட்டுகிறதே:(