schumacher.png நேற்றைய ஹங்கேரியன் கிராண் ·à®ªà¯à®°à¯€à®¯à®¿à®²à¯ (வழக்கம்போல) மிகைல் à®·¥à®®à®¾à®•à¯à®•à®°à¯ வெற்றி பெற்றிருக்கிறார். இது இந்த வருடத்தில் 13 பந்தயங்களில் இவருடைய 12ஆவது வெற்றி . இவருடைய ·à®ªà¯†à®°à®¾à®°à®¿ சகா ரூபன் பாரிகெல்லோ இரண்டாமிடத்தில் (வழக்கம்போல) – à®·¥à®®à®¾à®•à¯à®•à®°à¯ – பாரிகெல்லோ இணை இந்த வருடத்தில் ஏழாவது முறையாக முதலிரண்டு இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். அடுத்த கிராண் ஃபீரீயில் (பெல்ஜியம்) வெற்றி பெற்றால் ஷுமாக்கர் ஆகஸ்டு மாத இறுதிக்குள் இந்த ஆண்டின் பார்முலா 1 சாம்பியன் கோப்பையை வென்று விடுவார். நான் ஷுமாக்கரின் பரம இரசிகன். 1994, 95, 2000, 01, 02, 03 ஆண்டுகளில் ஷுமாக்கர் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். ஜேர்டான் காரில் 1991ல் துவங்கிய இவர் 1995 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பிறகு பெனெட்டன் காரை விட்டுவிட்டு ஃபெராரி சென்றார். அடுத்த இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாகத் தோற்றுக்கொண்டிருந்த நிலையில் இவர் ஃபெராரிக்கு நகர்ந்து பெரிய தவறு என்று நினைத்திருந்தேன். 1999 ஆம் வருடம் மெக்ளாரன் காரில் மிக்கா ஹக்கினன் எழுபத்தாறு புள்ளிகள் எடுத்து சாம்பியன் ஆனபொழுது மிகைல் 44 புள்ளிகள் எடுத்து ஐந்தாம் இடத்தில் வந்தார். அந்த வருடத்துடன் ஷுமாக்கரின் ·à®ªà®¾à®°à¯à®®à¯à®²à®¾ 1 வரலாறு முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மிகவும் திறமையான பந்தயக்காரர் மிகவும் மோசமான காரில் பணத்திற்காக அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் பிராயச்சித்தமாக 1999ல் ஃபெராரி 048 மாடலை அறிமுகப்படுத்தியது. அந்த வருடம் ஃபெராரிக்கு சாம்பியன்ஷிப் கிடைக்க ·à®ªà¯†à®°à®¾à®°à®¿à®¯à®¿à®©à¯ எட்டி இர்வைன் இரண்டாமிடத்தில் வந்தார், à®·¥à®®à®¾à®•à¯à®•à®°à¯ ஐந்தாமிடத்தில். அப்பொழுதுகூட ஃபெராரிக்கும் ஷுமாக்கருக்கும் ஒத்துவரவில்லை என்றுதான் தோன்றியது.

2000 ஆண்டிலிருந்து புதிய வரலாறு துவங்கியது. தொடர்ச்சியாக ஃபெராரியும், ஷுமாக்கரும் வெற்றியைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஷுமாக்கரின் வெற்றியில் அவருடைய சகாவான ரூபன் பாரிக்கெல்லோவின் பங்கு மிகவும் முக்கியமானது. சில சந்தர்ப்பங்களில் ரூபன் விட்டுக் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தவருடம் துவக்கத்திலிருந்தே, மிகைல் ஷுமாக்கர் அற்புதமாக ஓட்டிவருகிறார். பல சாதனைகள் ஏற்கனவே முறியடிக்கப்பட்டுவிட்டன. ஆகஸ்டிற்குள் கோப்பையை வென்று அசைக்க முடியாத சாதனையும் நிகழச் சாத்தியம் இருக்கிறது. தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லும் விளையாட்டு என்ற வகையில் ஃபார்முலா 1 க்கு ஈடாக எதுவுமில்லை.