An Invitation to Photonics
by வெங்கட் • March 9, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
சில மாதங்களுக்கு முன்னால் இங்கே டொராண்டோவில் பள்ளி மாணவர்களுக்கு வருங்காலத் தெரிவுகளை அறிமுகப்படுத்தும் விதமாக நடந்த ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றில் “An Invitation to Photonics” என்ற தலைப்பில் என்னுடைய துறையைப்பற்றிய அறிமுக உரை ஒன்றை வழங்கினேன். பொதுவில் மாணவர்கள் உயிர்த்தொழில்நுட்பம், மருத்துவம், பொருளாதாரம் போன்ற துறைகளுக்கு மாணவர்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது. அதைப்பற்றி பேச வந்தவர்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.
இயற்பியல் துறையில் ஆர்வம் குறைந்துதான் காணப்பட்டது. எனவே, பல மாணவ/மாணவியருக்கும் என்னுடைய அறிமுகத்தைப்பற்றி அதிகம் கவலையில்லை. இருந்தாலும், நிகழ்ச்சியால் அவர்கள் ஓரளவு கவரப்பட்டதை உணரமுடிந்தது. இன்றைக்கு ஒரு மாணவியும், அவளது பள்ளி ஆசிரியரும் என்னுடைய உரையில் பவர்பாயிண்ட் கோப்பைத் தரமுடியுமா என்று கேட்டார்கள். அந்த மாணவிக்கு BioPhotonics துறையில் ஆர்வமிருப்பதாகவும், கோடை விடுமுறையில் எங்கள் ஆய்வகத்தில் வேலைசெய்ய வாய்ப்பு கிடைக்குமா என்றும் கேட்டு எழுதியிருக்கிறாள்.
அவளுக்காக வலையில் ஏற்றிய An Invitation to Photonics கோப்பு இங்கே கிடைக்கும். உங்கள் சொந்தம்/அண்மையில் பள்ளி மாணவர்கள் இருந்தால் படிக்கக் கொடுக்கலாம் (படிப்பதற்கு அதிகமில்லை, எல்லாம் படங்கள்தான்!). ஆர்வமுள்ளவர்களுக்கு என்னாலான உதவியையும் தருகிறேன்.
Thank you Venkat. It seems my daughter is developing interest in Science, particularly Physics. This may be useful to her.
பிரபு .. உங்க பொண்ணுக்கு இரண்டு வயதுதானே ஆகிறது .. ? அதற்குள் அறிவியலில் ஆர்வமா.. ? வியப்பாய் இருக்கிறது ..