• Archive for December, 2004

    நிவாரணம் – அமெரிக்காவின் தயக்கம் – ஐ.நா

    by  • December 28, 2004 • பொது • 11 Comments

    இன்றைக்கு வாஷிங்கடன் போஸ்ட் செய்தியில் ஆசிய இயற்கைப் பேரழிவுக்கு அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகள் தாராளமாக முன்வந்து உதவி செய்யாமல் கஞ்சத்தனம் காட்டுகின்றன என்று சொல்லியிருக்கிறது. இது மிகவும் கவலை தருகிறது. தொடர்பான இன்னொரு இழையில் ஸ்லாஷ்டாட் விவாதத் தளத்தில் அமெரிக்க ஊடகங்கள் இந்த அழிவைப் பற்றி அதிகம் செய்தி தரவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் பத்துக்கும் குறைவான அமெரிக்கர்களே இறந்தது என்று சொல்கிறார்கள். சிலர் இதை 9/11 உடன் ஒப்பிட்டு, பல நாட்கள் கதறிய [...]

    Read more →

    கல்பாக்கம் அணு உலைக்கு ஆபத்து?

    by  • December 27, 2004 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    நேற்றைய ட்சூனாமியினால் கல்ப்பாக்கம் அணு உலைக்குப் பெரிய பாதிப்புகள் இருக்கலாம் என்று வதந்திகள் வந்தன. இதற்கு முக்கிய அடிப்படை அணு உலை நிறுத்தப்பட்டதுதான். (பொதுவில் அணு உலைகளைச் சாதாரணமாக நிறுத்திவிட மாட்டார்கள். உலையை நிறுத்துவதற்கும், துவக்குவதற்கும் நிறைய எத்தனங்கள் தேவைப்படும்). இந்த வதந்திகளுக்கு ஒரு முக்கிய அடிப்படை, பிரதமர் மன்மோஹன் சிங் கல்பாக்கம் உலையை நேரடியாகப் பார்வையிடுவார், அதன் சேதங்களை ஆராயக் குழு அமைக்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த செய்திகள்தான். மன்மோஹன் சிங் அக்டோபர் மாதத்தில்தான் [...]

    Read more →

    அடுத்த வலை – சீனாவின் சாதனை

    by  • December 27, 2004 • அறிவியல்/நுட்பம் • 1 Comment

    இன்று வெளியான அறிவிப்பின்படி சீனா வருங்கால இணையதின் ஆதாரமாக இருக்கப்போகிற IPv6 என்ற நுட்பத்தின் அடிப்படியிலான வலை பல்கலைக்கழகங்களுக்கிடையே திருப்திகரமாக இயங்குவதாகத் தெரிவித்திருக்கிறது. இந்த புதிய நுட்பத்தின் அடிப்படையிலான வலையமைப்பில் தகவல் பரிமாற்ற வேகம் நொடிக்கு 40 மெகாபைட்கள் வரைச் செல்லக்கூடும். சீனாவின் புதியவலையின் சராசரி வேகம் நொடிக்குப் பத்து மெகாபைட்கள். இதனுடன் ஒப்பிட நம் அகலப்பாட்டையின் வேகம் சராசரியாக 1 கிகாபைட்/நொடி. இதுநாள்வரை நாங்கள் தொழில்நுட்பத்தைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். இப்பொழுது புதிய தொழில்நுட்பத்தை முன்னின்று [...]

    Read more →

    பிற மொழிப்படங்களில் தமிழ்ப்பாடல்கள்

    by  • December 27, 2004 • இசை • 6 Comments

    தமிழர்கள் பொதுவில் மொழிகடந்து இசையை நேசிக்கக் கற்றுக் கொண்டவர்கள். நான் சிறுவனாக இருந்தபொழுது மரோசரித்ரா, சங்கராபரணம் போன்ற படங்கள் மற்றும் பல ஹிந்திப் பாடல்கள் பிரபலமாக இருந்தன. (ஹிந்திப் பாடல்களுக்குப் பொதுவில் தேசிய அளவில் தூர்தர்ஷன் மற்றும் பல ஊடங்கள் வழியாக விளம்பரம் கிடைப்பதால் அவை தகுதிக்கு மீறி நாடு முழுவதும் முழங்குகின்றன). ஆனால் சங்கராபரணம் இசைத்தட்டுகள் தமிழகத்தில் விற்றதைப் போல பிற மாநிலங்களில் வேறெந்த மொழி இசைத்தட்டும் விற்றிருக்காது. பாடல்: என்ன தவம் செய்தனை படம்: [...]

    Read more →

    வாலு போயி கத்தி வந்தது

    by  • December 27, 2004 • பொது • 1 Comment

    ஷங்கர் சமத்தா ஒரு வாரம் எழுதிவிட்டு வால்நட்சத்திரம் போய்விட்டது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார். அடுத்தது என் முறை. வாலுபோயி கத்தி வந்தது என்ற கதையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரவர்கள் இஷ்ட தேவதைகளை வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தவரை இந்த வாரம் சுவாரசியமாக எழுத முயற்சிக்கிறேன்; உத்தரவாதம் ஏதுமில்லை. என்ன எழுத உத்தேசம்? எதற்காக என் வலைக்குறிப்பைப் படிக்க வருகிறார்கள் என்பதைப் பின்னூட்டத்தின் மூலம் கொஞ்சம் ஊகித்திருக்கிறேன். அப்படியே எழுத உத்தேசம். அதைத் தவிர எதை எழுதுவது [...]

    Read more →

    ஆழ்ந்த அனுதாபங்கள்

    by  • December 26, 2004 • பொது • 4 Comments

    கடந்த சில மணிகளில் நடந்த நிகழ்வுகள் மிகவும் கவலையைத் தருகின்றன. இன்னொரு இயற்கைச் சீற்றம் உயிர்களைப் பறித்துள்ளது. இது கடந்த நாற்பதாண்டுகளில் நிகழ்ந்த மாபெரும் நில அதிர்வு (ரெய்க்ட்சர் அளவு கோலில் 9.0 ஆக இந்தோனேஷியாவில் அளக்கப்பட்டிருக்கிறது). இதன் தாக்கம் பல நாடுகளில் இருந்தாலும், மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவை இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை ஆகியவையே. சலிப்புடன் வேதனையில் உலகமயமாக்கல் என்ற வார்த்தையை நினைத்துக் கொள்கிறேன்.

    Read more →

    வியாகூலப் பிரசங்கம் – செல்வம் அருளானந்தம்

    by  • December 25, 2004 • இலக்கியம் • 1 Comment

    இன்றைக்கு வாசித்துக் கொண்டிருந்த என்னுடைய நண்பரின் பழைய கவிதை இது. செல்வம் காலம் சிற்றிதழின் ஆசிரியராக இருக்கிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வாழ்வைக் கவிதையாக்கிய முதல் சிலரில் ஒருவர் செல்வம்.

    Read more →

    வடதுருவ மஹாத்மியம்

    by  • December 23, 2004 • கனடா • 10 Comments

    < %image(1/20041223-varun_snow.png|512|384|Varun)%> இந்த வருடம் பனிக்காலம் ஆரம்பமே பயங்கரமாக இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்னால் வெப்பநிலை (சீ.. இந்த ஊரில் குளிர்நிலை என்றுதான் சொல்ல வேண்டும்) -24 செல்சியஸாக இருந்தது, அன்றைக்கு காற்றின் பங்கையும் கணக்கெடுத்துக் கொண்டால் -34 செல்ஸியஸ் (என்னுடைய அமெரிக்க நண்பர்களுக்கு இந்த செஸ்சியஸ் புரிவது கஷ்டமாக இருக்கலாம், மன்னிக்கவும். இந்த பாரன்ஹீட் எப்பொழுதுமே எனக்குச் சிக்கல்தான், இது செல்ஸியஸைப் போல எளிதாக பூச்சியத்தில் உறைந்து நூறில் ஆவியாகிப் போவதில்லை). இது கடந்த வருடம் [...]

    Read more →

    கணினியின் எதிர்காலம்

    by  • December 22, 2004 • அறிவியல்/நுட்பம் • 4 Comments

    இன்றைய ஸ்லாஸ்டாட்டில் அஸுஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் எஸ்-பிரஸ்ஸோ என்றா புதுவடிவ கணினியைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இதைப் போன்ற வடிவம் பரவலாக விற்பனைக்கு இருந்தாலும் (எங்கள் ஊரில் 190 கனேடிய டாலர்களுக்கு இதைப் போன்ற ஷட்டில் என்ற சிறிய கணினி கிடைக்கிறது). அஸுஸ் சற்று வித்தியாசமானது.

    Read more →

    பொய்கள் – பகுதி 3 (இறுதி)

    by  • December 21, 2004 • இலக்கியம் • 1 Comment

    பொய்யைக் கண்டுபிடித்தல் பல சமயங்களில் பொய்யைப் பொய்யாலேயே எடுக்க முடியும். “நா இல்லப்பா அக்காதான்” என்று சொல்லும் சிறுவனிடம் “டேய், நாந்தான் பாத்துக்கிட்டே இருந்தேனே” என்று இன்னொரு பொய்யைச் சொன்னால், அடுத்ததாக ஒத்துக் கொள்வது நிச்சயம். பல சுடாத பொய்களை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்குக் காரணம், பொய் சொல்பவர்கள் அடிமனதில் தங்கள் தவறைத் தாங்களே ஒத்துக் கொள்கிறார்கள். நாலு முறை “ஏன்டா வெயிட் போட்ருக்கே” கேள்விக்குப் பொய் சொல்லும் நபர் கட்டாயம் அடுத்தமுறை சாப்பாட்டில் [...]

    Read more →