நிவாரணம் – அமெரிக்காவின் தயக்கம் – ஐ.நா

இன்றைக்கு வாஷிங்கடன் போஸ்ட் செய்தியில் ஆசிய இயற்கைப் பேரழிவுக்கு அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகள் தாராளமாக முன்வந்து உதவி செய்யாமல் கஞ்சத்தனம் காட்டுகின்றன என்று சொல்லியிருக்கிறது. இது மிகவும் கவலை தருகிறது. தொடர்பான இன்னொரு இழையில் ஸ்லாஷ்டாட் விவாதத் தளத்தில் அமெரிக்க ஊடகங்கள் இந்த அழிவைப் பற்றி அதிகம் செய்தி தரவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் பத்துக்கும் குறைவான அமெரிக்கர்களே இறந்தது என்று சொல்கிறார்கள். சிலர் இதை 9/11 உடன் ஒப்பிட்டு, பல நாட்கள் கதறிய பன்னாட்டு ஊடகங்கள் இங்கே மௌனம் சாதிப்பதன் அர்த்தம் அவர்களுக்கு பிற நாடுகள் மீது இருக்கும் அலட்சியம்தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள். மாறாக பி.பி.ஸி கடந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் பெரும்பான்மையான செய்திகள் அழிவையட்டியே வெளியிட்டிருக்கிறது என்றும் இது ஐரோப்பியர்களிடையே உதவ வேண்டியதன் தேவையை அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்கள். இதனால் ஐரோப்பாவை மையமாகக் கொண்ட ரெட்கிராஸ், ஆக்ஸ்·பார்ம் போன்ற உதவி நிறுவனங்களுக்கு நன்கொடைகள் அதிகரித்திருக்கின்றன என்று சொல்கிறார்கள்.

இந்த அழிவை வெறும் கணக்குப் போட்டுப் பார்த்தால் பிறவற்றைவிடச் சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் பாதிக்கப்பட்ட நாடுகள் அடர்த்தியான மக்கள் நெருக்கம் கொண்டவை. அதேபோல இலங்கையில் இருக்கும் அரசியல் நிலவரத்தினால் அங்கே முறையாக நிவாரணம் சென்றடைவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பொதுவில் ஊடகங்கள் வாயிலாக இது குறித்த விழிப்புணர்வு பரவாவிட்டால் அழிவின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள். பொதுவில் ட்சூனாமியால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம் என்று சொல்கிறார்கள். முக்கியமாகத், தொற்று நோய்கள் பரவும் அபாயம். இதற்குப் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக அனுப்பப்படல் வேண்டும். ஜப்பான், ப்ரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கனவே தங்கள் மருத்துவர்களை அனுப்பியிருக்கிறார்கள்.

வாஷிங்க்டன் போஸ்ட் செய்தியில் இன்னொரு தகவலும் இருக்கிறது; உலகில் அதிகம் உதவிகள் செய்யும் நாடாக அமெரிக்கா இருந்தாலும் இதுபோன்ற நிவாரண உதவிகள் அமெரிக்க அரசாங்கத்தால் நடப்பதைவிட தனியார் தன்னார்வ நிறுவனங்களால் நடப்பதுதான் அதிகம் என்கிறது. இது ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான். ராணுவத்திற்குத் தளவாடங்கள் வாங்க அரசு ரீதியாகச் செலவழிப்பதில் ஆர்வம் இருக்கிறது, ஆனால் நிவாரண உதவிகளால் எந்த அரசியல் ஆதாயங்களும் இல்லை. இந்த மனப்பான்மை எரிச்சலூட்டுகிறது.

அரசாங்கங்களைவிட தனியார், தன்னார்வ உதவிகள்தான் அதிகம் சாத்தியமுள்ளது என்றபொழுது இதை நேரடியாக அவர்களிடமே எடுத்துச் செல்வது நல்லது. இதற்கு நம்மாலான சிறு உதவி, ஆங்கிலத்தில் வலைக்குறிப்பு எழுதும் நண்பர்கள் அணைவரும் இதுபற்றி நிறைய எழுத வேண்டும். இன்னும் அண்டை அயலில் இருக்கும் நண்பர்களிடம் இதுகுறித்து நேரடியாகப் பேசுவதும் பலன்தரும்.

வாஷிங்கடன் போஸ்ட் செய்தியில் அமெரிக்கா இதுவரை 15 மில்லியன் டாலர்கள் உதவி தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மிக மிகக் குறைவு. உதாரணமாக, கிறிஸ்துமஸ்க்கு முன்னால் ஒரே நாளில் அமேசான்.காம் தளம் 2.8 மில்லியன் சாதனங்களை விற்றிருக்கிறது. ஒரு சாதனத்தின் சராசரி விலை பத்து டாலர்கள் (மிக மிகக் குறைவு) என்று வைத்துக்கொண்டால் அமேசானில் மட்டுமே அன்றைக்கு அமெரிக்கர்கள் 28 மில்லியன் டாலர்கள் செலவழித்திருக்கிறார்கள். இராக்கிய மக்களைக் கொடுங்கோலரிடமிருந்து காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அமெரிக்கா சராசரியாக ஒரு மில்லியன் டாலரைத் தினசரி செலவிடுகிறது. (கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்). இதையெல்லாம் விவரமாக எடுத்தெழுதுவது மிகவும் முக்கியம்.

சக மனிதனின் துக்கத்தில் பங்கு கொள்வது மனிதம். ஆனால் சகமனிதன் துக்கத்திலிருக்கிறான் என்பதே தெரியாமலிருக்கும்பொழுது இது சாத்தியமில்லை. எனவே, இதைப் பற்றிய விழிப்புணர்வு முக்கியமாகிறது. இதை வேறெந்த வகையிலெல்லாம் செய்யலாம் என்று சொல்லுங்களேன்.

* * *

வருத்தமான இந்த நேரத்தில் இதை அமெரிக்க எதிர்ப்பாக நான் எழுதுகிறேன் என்று தயவு செய்து யாரும் திசைமாற்ற முயற்சிக்காதீர்கள். இது எனக்குத் தோன்றும் எண்ணங்களை உரத்துக் கூறுவது. உங்களுக்கு வேறு வழிகள் தோன்றினால் சொல்லுங்கள்

Popularity: 3% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

Nothing surprising about it.
'World news' for American media is like this:

1. Western Europe
2. Middle East
3. China(human rights, latest economy etc)
4. Indonesia(You will see 99% of media adding the phrase 'world's most poplulous muslim country')

Basically wherever there is an 'American Interest'. Otherwise, it is just a 10 seconds news item in 'prime time' news.

South Asia has hardly been in their world map.

Others may have a different take, but this is my observation in my stay here so far.

வெங்கட்,
அமெரிக்காவின் அக்கறை இதில் மிக குறைவு என்றே நானும் நினைக்கிறேன். அந்நியர் நாடு என்பதாலோ தெரியவில்லை.

1, அழிவினால் உன்டான நஷ்டத்தை கணக்கிடுவதில் ஒன்றுக்கும் மேற்பட்ட உலகவங்கி,மனித உரிமை போன்ற அமைப்புகள் ஈடுபட வேண்டும். நிச்சயம் உலக வங்கி போன்றவற்றில் இயற்கை சீற்றத்தைன் அழிவை கணக்கிட ஏதாவதொரு அமைப்பு இருக்கும் என்று தோன்றுகிறது. இவர்களது கணினித் தொடர்பு கிடைத்தால் ,ப்ளாகர்கள் அனைவரும் கடிதம் கையெழுத்திட்டு கடிதம் போடலாம்.

2. உதவி நிதி அளிக்கக் கூடிய வலைதொடுப்புகளை தொகுத்து ஒரு கடிதத்தில் இட்டு தங்களுக்கு தெரிந்த அனைத்து முகவரிகளுக்கு அனுப்பலாம். 1 டாலர் அளிப்பது கூட இச் சமயத்தில் பேருதவியாய் இர்க்கும் என்று தோன்றுகிறது.

Forgot to add: With the exception of NPR.

US not stingy over aid: Powell
From correspondents in Washington
29dec04

US Secretary of State Colin Powell insisted today that the US has not been "stingy" in its response to the Asian tsunami disaster but admitted that much more international aid would have to be given.

"The United States is not stingy," Powell told CNN television after a top UN official appeared to criticise the world's rich countries for the amount of aid they give each year.

"We will do more. I wish that comment hadn't been made," Powell said on ABC.

"The world is now responding to this catastrophe. The United States has given more aid in the last four years than any other nation or combination of nations in the world.

"We had a significant increase in our development assistance and other kinds of assistance, and we will do more."

* * *

As the full scale of the disaster gradually emerges and the death toll rises, the US is promising to play its part.

Trent Duffy, White House Spokesman, said: "The United States at the president's direction will be a leading partner in one of the most significant relief, rescue and recovery challenges that the world has ever known."

* * *

The U.S. Agency for International Development prepared today to add $20 million to an initial $15 million contribution for Asian earthquake relief as Secretary of State Colin Powell bristled at a United Nations official's suggestion that the United States has been "stingy."

A senior U.S. official told The Associated Press the increased aid figure was bound to be pushed even higher as assessments of the damage from the biggest earthquake in 40 years are received.

The Pentagon is preparing a supplemental relief operation and pre-stocked supplies of shelter, food and water bags are on their way to Indonesia from Dubai, said the official, speaking on condition of anonymity.

Powell, irritated by the U.N. official's criticism, toured morning television talk shows to say the Bush administration will follow up its contributions with large additional sums.

* * *

வருத்தமான இந்த நேரத்தில் இதை அமெரிக்க எதிர்ப்பாக நான் எழுதுகிறேன் என்று தயவு செய்து யாரும் திசைமாற்ற முயற்சிக்காதீர்கள்.

Reminds me of a Microsoft EULA.

//அமேசானில் மட்டுமே அன்றைக்கு அமெரிக்கர்கள் 28 மில்லியன் டாலர்கள் செலவழித்திருக்கிறார்கள்.//

Saw this in the news yesterday or so: Highest single day collection at Thirupathi, something like 1 crore rupees a day. How much money did the Indian govt give to the Sudan crisis?

பொதுவிலே அமெரிக்க ஊடகங்கள் ஏனோ தானோ என்றே செய்தி தந்திருந்தாலும் (PBS & NPR மற்றைய ஊடகங்களோடு ஒப்பிடும்போது, பரவாயில்லை; சற்று நீண்டு சொல்லியிருந்தார்கள் – அவை இரண்டிலும் BBC செய்திகளும் உள்ளடங்கும் என்பதாலும். நேற்றிரவு PBS- News With Jin Lehar இலேயே Jan Egeland உதவி குற்றம் சாட்டினார்.) அமெரிக்க அரசு ஈராக்கிலே முக்கியமாக அவதானமாக இருக்கின்றதென்பது உண்மையே. ஆனால், அமெரிக்கத்தொண்டு நிறுவனங்கள் தம்மால் இயன்றளவு உதவுகின்றன என்றே நினைக்கிறேன். Oxfarm இன் பொஸ்ரன் கிளை தென்னாசியாவிலே பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளைச் (திருகோணமலைக்கு நீர் சார்ந்த உதவிகள் என்று குறித்தும் சொல்லியிருந்தது) செய்வதாகவும் எங்கே அதற்கான உதவிகளைச் செய்யலாமென்று உள்ளூர் முகவரியை எல்லா பண்பலைவானொலிகள் ஊடாகவும் சொல்லியிருந்தது. வழக்கம்போல, மீதிநாடுகள் பொருள், வைத்தியம், தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளைத் தந்துவிட்ட வேளையிலே இலங்கையிலிருக்கும் அமெரிக்கத்தூதுவர் எ·து எங்கே எப்படி நடக்கவேண்டுமென்ற "வெருட்டல்களை" விட்டதுதான் வெறுப்பேற்றியது. இலங்கைக்கான சட்டமும் நிர்வாகமும் பொறுப்பை வழக்கம்போல, தான் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். :-(

pari link is not working

Try now
(Sorry, if it is messed up now too)

பாலாஜி – என்னைப் பொருத்தவரை உடனடி 15 மில்லியன் அமெரிக்காவிற்கு மிகவும் குறைவுதான். இதைப் போலவே கனடாவின் ஒரு மில்லியனும்.

> As the full scale of the disaster gradually emerges and the death toll rises, the US is promising to play its part.

Sickening – to say the least! Why should they wait until everyone dies? Is it not possible for US to airlift some aids to Indonesia & Srilanka from its multitudes of bases at SKorea, Japan, Phillipines, Diego Garcia and Central Asia? Honestly, I wouldn't mind Bush posing as a pilot for one of these humanitarian planes.

>Saw this in the news yesterday or so: Highest single day collection at Thirupathi, something like 1 crore rupees a day. How much money did the Indian govt give to the Sudan crisis?

அமெரிக்கர்கள் தங்களை இந்தியர்களுடன் ஒப்பிட்டுப் பெருமை கொள்ள வேண்டுமா? I am alluding to the part of disposable income. I pointed to amazon sales just to bring the fact that what is the magnitude of the promised aid by the US.
நான் ஏற்கனவே சொன்னதைப் போல தனிப்பட்ட முறையில் அமெரிக்கர்கள் நிறைய உதவி செய்கிறார்கள். ஆனால் அரசு ரீதியாக அமெரிக்க இன்னும் செய்யலாம். அமெரிக்க அரசின் முன்மாதிர் மற்ற அரசுகளையும் ஊக்குவிக்கும்.

இந்தியாவின் உடனடி விமான உதவி என்னைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்கிறது.

பரி,

யான் எக்லன்ட் விளக்கமளித்திருந்தாலும், அவரது முழுப் பேட்டியையும் படித்தால் நார்வீஜியன் நாடுகளைத் தவிர மற்றவர்கள் தங்கள் வருமானத்தில் சரியான வீதத்தை மனிதாபிமான உதவிகளில் செலவிடுவதில்லை என்பதைத்தான் அவர் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

இதைத்தான் நானும் முதலில் எழுதியிருந்தேன். பணக்கார நாடுகள் இன்னும் விரைவாக இன்னும் அதிகம் செய்யலாம். குறிப்பாக மருத்துவ நிபுணர்களை அனுப்புவது.

Leave a comment

(required)

(required)