• Archive for November, 2004

    கலாச்சாரம் பாய்ந்த திசை

    by  • November 17, 2004 • பொது • 8 Comments

    சுந்தரவடிவேலின் கலாச்சாரம் பாயும் திசை வலைக்குறிப்பையும் அதன் பின்னூட்டங்களையும் முன்வைத்து. இது கொஞ்சம் அபாயகரமான உரையாடல், நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், என் நோக்கங்கள் சிலரால் திசைதிருப்பப்படும் என்ற ஐயம் இருக்கிறது. இருந்தாலும், நண்பர் சுந்தரும், இன்னும் நான் மதிக்கும் சிலரும் கருத்தியல் ரீதியாக என்னைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால் அவர்களுக்காகத் தொடர்கிறேன்.

    Read more →

    துளசியும் புனிதமும் இன்னபிறவும்

    by  • November 15, 2004 • பொது • 2 Comments

    தீபாவளி குறித்த சுந்தரவடிவேல் வலைக்குறிப்பை நேற்று படித்தேன். அரக்கர்கள் உருவாகும் விதம் குறித்த அவரது பார்வை என்னுடன் பெரிதும் பொருந்திப்போகிறது. அதையே இன்னும் நீட்டித்துத் தேவர்கள் உருவாகும் விதமும் அப்படித்தான் என்று சொல்லமுடியும். ஆயர் குலத்தலைவன் கண்ணனும், குன்றுதோறும் இருக்கும் குமரனும் இப்படித்தான் உருவாகியிருக்க வேண்டும். இன்னும் நேரடியாகச் சொல்லப்போனால் நம் கண் முன்னே உருவெடுக்கும் தெய்வங்களையும் பார்க்க முடியும். உதாரணமாக, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், காந்தி இவர்களுக்கு எழுப்பட்ட சமாதிகளும் மணிமண்டபங்களும் மரணத்திற்குப் பிறகு அவர்களைக் [...]

    Read more →

    ஜெயேந்திரர் கைது – சில சந்தோஷங்களும் (வேறு) சந்தேகங்களும்

    by  • November 14, 2004 • பொது • 13 Comments

    ஒரு வழியாக இந்தியாவின் “பிராண்ட்” சாமியார் ஒருவர் (ஜெயேந்திரர்) கைது செய்யப்பட்டிருக்கிறார். இது எப்பொழுதோ ஒரு முறை நடக்கும் அதிசயம். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் தாம் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியவருவது சமூகத்திற்கு நல்லது. அந்த வகையில் இந்தக் கைது பாரட்டப்பட வேண்டிய விஷயம். இவருக்கு மூத்தவரான மறைந்துபோன சந்திரசேகர சரஸ்வதி அவர்களுக்கு கனகாபிஷேகம் செய்யப்பட்ட தினத்தில் இந்தியாவின் பிரதமர் அவருடைய பாதத்தில் உட்கார்ந்திருந்த காட்சியைப் பார்க்க முடிந்தது. அது அரசாங்க எந்திரமான தூர்தர்ஷனில் நாடு முழுவதும் [...]

    Read more →

    வலைப்பக்கங்கள் – மறுபடியும்

    by  • November 11, 2004 • பொது • 4 Comments

    என்னுடைய வலைப்பக்கங்களை மீட்டுருவாக்கி வருகிறேன். தற்சமயம் பெரும்பாலான தமிழ்ப் பக்கங்கள் தயார். வரும் நாட்களில் என்னுடைய படைப்புகள் இன்னும் சிலவற்றை வலையேற்ற உத்தேசம். குவாண்டம் கணினி – அறிவியல் கட்டுரைத் தொகுப்பு புத்தகத்தின் மேலதிகத் தகவல்களுக்காக உருவான பக்கங்களும் மறு வலையேற்றம் பெற்றுள்ளன. இன்னும் சில நாட்களில் எல்லா கட்டுரைகளுக்கும் மேலதிகத் தகவல்களையும் கருத்தாடல் வசதியையும் செய்ய உத்தேசம். படைப்புகளைப் பற்றிய கருத்துகள், விமர்சனங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். படத்திலிருப்பது ? – ஆமாம் அவர்கள்தான்!

    Read more →

    தீபாவளி

    by  • November 11, 2004 • பொது • 3 Comments

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தீபாவளி எப்பொழுதும் மனதில் இனிய நினைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியது. இனிப்பும், புத்தாடைகளும், மினுமினுக்கும் பட்டாசுகளுமாக நாமும் நம் மனிதர்களும் கவலைகளைச் சற்றே புறந்தள்ளிவிட்டு மகிழ்ந்திருக்கும் நாள் இது. இறைநம்பிக்கை, மூடநம்பிக்கை, இன்னபிற்வற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நம்முடைய சகமனிதர்களிடமிருந்து தொற்றும் சந்தோஷத்தை முழுமையாக மறுதலிப்பவர்கள் அடிமனதில் கொடூரர்களாகத்தான் இருக்க வேண்டும். சிறிய வயதில் தீபாவளி எத்தனையோ கனவுகளையும் கூடவே ஏமாற்றங்களையும் கொண்டுவரும். கொள்கை ஒன்றுக்காக என் அப்பா நிமிர்ந்து நிற்க, கோழைகளின் குலத்தில் பிறந்தவர் என்பதை [...]

    Read more →

    செப்புமொழியும் சந்தைக்கட்டாயமும்.

    by  • November 7, 2004 • பொது • 7 Comments

    { நான் பல நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த ஒரு கருத்தை அருள் இன்றைக்கு எழுதியிருக்கிறார். (ஹாஸ்டலில் சுற்றிச் சுற்றி நண்பர்களெல்லாம் பியர் மாந்திக்கொண்டிருக்க சற்றும் சளைக்காமல் ஒவ்வொரு பாட்டிலாகத் தோலுரிந்து அரையிருட்டில் கண்ணைக் குறுக்கிக் கொண்டு லேபலின் பின்புறம் எழுதியிருக்கும் பொடி வார்த்தைகளைப் படிக்கும் அருள் நினைவில் வந்துபோகிறார்). } ஜப்பானில் இருந்தபொழுது எனக்குத் தரப்பட்ட வீட்டில் தட்டுக்கு அடியில் போடும் பிளாஸ்டிக் மடக்குப்பாய் தொடங்கி அறைக்குளிரூட்டிவரை எல்லாம் கொடுத்திருந்தார்கள். என்னுடைய கனிஷ்ட புத்ரன் வருண் [...]

    Read more →

    தாஜ்மஹல் சாயவில்லை

    by  • November 7, 2004 • பொது • 1 Comment

    < %image(1/20041107-taj_mahal.jpg|220|300|தாஜ் மஹல்)%> சில நாட்களுக்கு முன்பு தாஜ் மஹலின் கோபுரக்கம்பங்கள் அபாயகரமான அளவிற்குச் சாய்ந்திருப்பதாக ராய்ட்டரில் ஒரு செய்தி வந்தது. யமுனை ஆற்றின் கரை வற்றிவருவதாகவும், அதனால் ஏற்படும் நிலத்தடி மாறுபாடுகள் தாஜின் கோபுரத்தூனைச் சரிப்பதாகவும் தகவல் வந்தது. இது அகம் மாத்தூர் (ஆக்ரா பல்கலைக்கழகம்) ராம் நாத் (ராஜஸ்தான் பல்கலைக்கழகம்) ஆகியோரார் முன்மொழியப்பட்டது. தாஜின் வடக்குப் பகுதி யமுனை ஆற்றின் கரையில் இருக்கிறது. இது தொடர்ச்சியான நீரோட்டத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் சமீபகாலமாக யமுனையின் [...]

    Read more →

    கேள் – சேரன்

    by  • November 4, 2004 • இலக்கியம் • 4 Comments

    இரண்டு வருடங்கள் கழித்து மீளவாசித்ததில் ‘வேற்றாகி நின்ற வெளி’ என்ற ஈழக்கவிதைத் தொகுப்பில் மனதைக் கவர்ந்த சேரனின் கவிதை; கேள் எப்படிப் புணர்வது என்பதைப் பாம்புகளிடம். எப்படிப் புலர்வது என்பதை காலையிடம்.பொறுமை என்பது என்ன என்பதை மரங்களிடம். கனவுகளுக்கு வண்ணங்கள் உண்டா என்பதைத் தூக்கத்தில் நடப்பவர்களிடம். கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக மாறியது எப்படி என்பதை அகதிகளிடம். பயம் என்பது என்ன என்பதை நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற கறுப்புத்தோல் மனிதர்களிடமும் பெண்களிடமும். மோகம் முப்பது நாள்கள்தானா [...]

    Read more →

    அமெரிக்கத் தேர்தல் முடிவு

    by  • November 3, 2004 • பொது • 4 Comments

    ஒருவழியாக அமெரிக்கத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க மக்கள் பெருந்தன்மையாக மாண்புமிகு ஜார்ஜ் புஷ் (இளையர்)-ஐ இரண்டாம் முறையாக உலகின் தலையில் சுமத்தியிருக்கிறார்கள். தாங்கமுடியாத இந்தச் சுமையை உலகம் இன்னும் நான்கு வருடங்களுக்குச் சுமக்கவேண்டும் என்று நினைத்தால் சோகமாக இருக்கிறது. ஓரளவுக்கு இந்தத் தேர்தல் முடிவு எதிர்பார்த்ததுதான் (பெரிதாக எந்தக் கருத்துக் கணிப்புகளிலும் கெர்ரி வெற்றிபெறக்கூடும் என்று சொல்லவில்லை). ஆனாலும் நம்பிக்கையை ஊற்றாகக் கொண்ட அடிமனத்தில் கெர்ரி எப்படியாவது வென்றுவிடுவார் என்று ஒரு சபலம் [...]

    Read more →

    விடிஞ்சா கல்யாணம்

    by  • November 1, 2004 • கனடா • 0 Comments

    ம்ம்.. அப்பாடா ஆறு மாத முழுநேரக் கூத்து நாளைக்கு உச்சகட்டத்தை எட்டப்போகிறது. நிலையில் உறுதியான அயோக்கியனா, தடுமாறும் அறிவாளியா என்று அமெரிக்க மக்கள் நாளை முடிவு செய்துவிடுவார்கள் (அல்லது, அவர்கள் சார்பில் திருவாளர் புஷ் முடிவு செய்வார்). இந்தக்கூத்தில் கனேடிய ஊடகங்கள் (வழக்கம்போல்) நிறைய பகடி செய்தன. இந்த நாட்களில் நான் வலையை விட்டு அஞ்ஞாதவாசம் இருந்ததால் கனேடியரல்லாதவர்களுக்கு அறியத் தரமுடியவில்லை. எனவே, முதலும் கடைசியுமாக, புஷ்-கெர்ரி விவாதத்தைப் பகடி செய்து கனேடியத் தொலைக்காட்சி வழங்கிய நிகழ்ச்சி. [...]

    Read more →