Archive for November, 2004
Final Jeopardy
எல்லா சுவாரசியமான விஷயங்களைப் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. Jeopardy நிகழ்ச்சியில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு வந்த கென் ஜென்னிங்க்ஸின் இன்னிங்க்ஸ் பத்து நிமிடங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.
இன்றைக்கு ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய வழக்கத்துக்கு மாறாக ஊதாரித்தனமான பந்தயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, கென்னின் முடிவும் Final Jeopardy பதிலில்தான் இருந்தது. “Most of this firm’s 70,000 seasonal white-collar employees work only four months a year.” என்ற [...]
எய்ட்ஸ்: முடிதிருத்துநர்களும் முனிவர்களும்
இன்றைக்கு வாசித்த செய்தியன்றில் ஆந்திராவில் சிகையலங்காரத் தொழிலாளிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பிரச்சாரம் செய்யப் பயன்படுகிறார்கள் என்று வந்திருக்கிறது. ஆரம்பச் சோதனை முயற்சிகள் நல்ல பலனைத் தருவதாகவும் இதை இன்னும் தீவிரப்படுத்த உத்தேசம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதேபோல் சாமியார்களையும் எய்ட்ஸ் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப் போவதாகத் தெரிகிறது.
* * *
அடுத்தமுறை சலூனுக்குப் போனால் உரையாடல் இப்படியிருக்கலாம்;
வா ஸார் குந்து! எப்டிக்கிற? வூட்லல புள்ளங்கள்லாம் எப்டிக்கிறாங்க? … கட்டிங்கா ஷேவிங்கா?
கட்டிங்தாபா.
நெமிந்து குந்து ஸார்!
எனது நதி – உமாமகேஸ்வரி
சமீபத்திய வாசிப்பில் பிடித்த கவிதை
எனது நதி
உமாமகேஸ்வரி
சிறுவயதில் பார்த்தபோது
அம்மாவின் புடவையென
அலையோடிருந்தது.
செல்லமாய் வளைவுகளில்
சேர்த்தணைக்கும்;
வருடும் மெல்ல.
பள்ளங்களில் கால்பட்டால்
பதறிப் பாய்ந்து மிரட்டும்
பருவ காலத்தில்
ஓரம் தைத்த தாவணிகளாய்
உருவம் மாறிக் கிடந்தது
துள்ளல் போர்த்தித் துவண்டு அடங்கி
சன்னமாய் மின்னும் ஜரிகை வரிகளோடு
வேறு திசையில் எறிந்து
மாறுதலாக்கியது திருமணம்
திரும்பிவந்து தேடினால்
பிரிந்த நூலிழைகளாய்த்
திரிந்திருந்தது அதுவும்
அறுந்த
அடி நீரோட்டத்தோடு.
Tabla Beat Science
தாள வாத்தியங்களில் இந்தியக் கருவிகளில் உலகிலேயே ஒரு உயர்ந்த இடமுண்டு. என்னுடைய மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்று ஹார்மனியை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாஸ்திரிய இசையை வடித்த மேற்கிசை விற்பன்னர்கள் எப்படி அதில் தாளத்திற்கு முக்கிய இடம் கொடுக்காமல் போய்விட்டார் என்பது. மாறாக கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் ஸ்வரத்திற்கும் தாளத்திற்கும் கிட்டத்தட்ட சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவற்றுக்கிடையில் கர்நாடகத்தில் இன்னும் தாளத்தின் முக்கியத்துவம் அதிகம். (கர்நாடக இசையில் தாளவாத்தியக் கலைஞர்களும், தந்திக் கருவிகளை இசைக்கும் [...]
இந்தியாவில் வேலைசெய்யும் வெளிநாட்டவர்
இன்றைக்கு பிபிஸி் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்து அங்கேயே தங்கி வேலைபார்க்கும் வெளிநாட்டவர் பற்றிய செய்தியன்றை வெளியிட்டிருக்கிறது.
இது ஓரளவுக்கு நான் எதிர்பார்த்ததுதான். இந்தியா அடிக்கடி சென்று வரும் என்னுடைய ஸ்லாவேனிய நண்பன் பிரிமோஷ் (Primoz Kerkoc) அங்கிருக்கும் வசதிகளைப் பற்றி புலம்பித் தீர்த்துவிடுவான். இந்தியாவில் இருக்கும் என்னுடைய பேராசிரியருக்கு காரோட்டி இருப்பது அவனுக்கு பெரும் ஆச்சரியம், (இங்கே நோபல் பரிசு பெற்றவர் பல்கலைக்கழக வளாகத்தில் கார் நிறுத்த இடமில்லாமல் சுற்றிச் சுற்றி [...]
கீரவாணி (எ) மரகதமணி
அடுத்ததாக என்னுடைய தெலுகு பாடல் தெரிவு ஒன்று. தமிழுக்கு அடுத்தபடியாக இந்திய மொழிகளுக்குள்ளே நான் அதிகம் கேட்பது தெலுகு பாடல்களைத்தான். ஐஐஎஸ்ஸியில் படித்த காலத்தில் வளாகத்தை ஒட்டி, கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில் மத்திகெரே என்ற இடத்தில் விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்காக மனோரஞ்சன் என்ற திரையரங்கு ஒன்று இருந்தது. இது விமானப்படையினருக்காக நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை, ஐஐஎஸ்ஸி மாணவர்களைத்தான் அதிகம் காணமுடியும். வாரத்தில் இரண்டு நாட்கள் தமிழ், ஒரு நாள் தெலுகு, ஒரு நாள் கன்னடம், ஒரு நாள் ஆங்கிலம், [...]
இன்றைய நகைச்சுவை
செய்திக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இன்றைக்கு USA Today -ல் இன்றைக்கு வந்த நகைச்சுவை:
The year’s biggest upset in sports has to be the Boston Red Sox’s improbable world championship. The biggest upset in politics: that choosing the president did not require Supreme Court intervention.
http://www.usatoday.com/tech/products/2004-11-22-bonus-baig_x.htm
அமெரிக்காதான் உலகம்; உலகமே அமெரிக்கா.
பாரதிக்கு வணக்கம்
< %image(1/20041120-bharathi.png|125|166|பாரதி)%>
மகாகவி பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக என்னுடைய அடுத்த இசைத்தெரிவு.
பாரதியாரின் அற்புதமான பாடல்களில் ஒன்று நல்லதோர் வீணை செய்தே. இதைக் காலம்காலமாக நம் இசைக்கலைஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
மடை திறந்து
ஒரு வகையில் இந்தப் பாடலைக் கொண்டு துவக்குவது Cliche ஆக இருக்கலாம். ஆனால் அதைப் போன்ற தயக்கங்களை எல்லாம் தாண்டி இதுதான் நான் அறிமுகப்படுத்தும் முதல்பாடல்.
எனக்குப் பிடித்த இசை என்று அறிமுகப்படுத்தும் பொழுது – நூறு சதவீதம் எனக்குப் பிடித்தது இப்படித்தான் இருக்கும் என்று காட்ட வேண்டுமல்லவா? பாடலைக் கேளுங்கள்
மடை திறந்து
இசை: இளையராஜா,
பாடியவர் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்,
பாடலாசிரியர் – வாலி
படம் – நிழல்கள் (1980)
இசையால் வசமாகா இதயமெது
என்னுடைய வலைக்குறிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறேன்.
இன்று தொடக்கம் அவ்வப்பொழுது நாம் மிகவும் இரசிக்கும் இசையை சில நிமிடங்கள் உங்களுடனும் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். முறையான சங்கீதப் பயிற்சி ஏதுமில்லாதவன் நான் (சங்கீத ஞானசூன்யம் என்பதைக் கௌரவமாக இப்படியும் சொல்லிக் கொள்ளலாம்). ஆனால் என்னுடைய வாழ்வில் எப்பொழுதும் இசை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. என் அம்மா எனக்குப் பாடிய தாலாட்டுகள் தெரியவில்லை. ஆனால் எனக்கு மூன்று வயதிருக்கும்பொழுதிலிருந்து நான் கேட்ட இசை எனக்கு இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. [...]











