• Archive for October, 2004

    தளம் – சில மாற்றங்கள்

    by  • October 20, 2004 • பொது • 9 Comments

    பொதுஜனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலையுதிர்காலத்து இலை உதிர்க்கப்பட்டுவிட்டது. இலைபோனபிறகு பெட்டிகளின் அளவை மாற்ற வேண்டும். விரைவில் செய்கிறேன். பின்தொடர் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. (அசிங்கமான எழுத்துரு வடிவத்தில்). யாராவது பின் தொடர முயற்சித்து விடை சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். கடைசி ஐந்து கருத்துக்கள் வலது ஓரத்தில் கோடிகாட்டப்படுகின்றன. தங்கத்தமிழன் “தனிக்காட்டு” ராஜா திரு வீரப்பன் மரணமடைந்தார். அவர் ஆன்மா சாந்தியடைய ‘வீரியமிழந்த வெங்காயம்’ பரம்பொருளிடம் பிரார்த்திக்கிறது.

    Read more →

    அகத்தேடல் :: கூகிள் வழி – 1

    by  • October 18, 2004 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    சென்ற வாரம் கூகிளின் புதிய Desktop Search – ஐ வெளியிட்டது. வெளியிட்ட அன்றே என்னுடைய கணினியில் நிறுவினேன். கடந்த நான்கு நாட்களாக இதை இயக்கிப் பார்த்தபின் என்னுடைய கருத்துகள்;

    Read more →

    ஆவீன மழைபொழிய

    by  • October 17, 2004 • பொது • 2 Comments

    விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு. ஆஈன மழைபொழிய இல்லம்வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமைசாவ மாஈரம் போகுதென்று விதைகொண்டோட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ளக் கோவேந்தர் உழுதுண்ட கடமைகேட்கக் குருக்கள்வந்து தட்சணைக்குக் குறுக்கேநிற்கப் பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

    Read more →

    மறு வருகை

    by  • October 17, 2004 • பொது • 3 Comments

    கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு… யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நான் காணமல் போய் இரண்டு மாதங்கள் ஆகப் போகின்றன. இடையில் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன (இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னால்…). மாற்றமில்லாமல் நடந்துகொண்டிருந்த ஒரெ விஷயம் – எந்தக் கேள்வியைக் கேட்டாலும் புஷ்-கெர்ரி இருவரும் தங்களுடைய வழமையான (கேள்விக்குச் சம்மந்தமில்லாத) பதில்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததுதான். இப்பொழுது மீண்டு(ம்) வந்திருக்கிறேன். நான் காணமல் போனதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் “என்னய்யா, ஆளக் [...]

    Read more →