• Archive for August, 2004

    கருத்தோடை

    by  • August 3, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    பல சமயங்களில் என்னுடைய வலைக்குறிப்பில் யாராவது கருத்து எழுதியிருக்கிறாரா என்று பார்க்க என்னுடைய குறிப்புத்தளத்திற்குப் போக வேண்டியிருக்கிறது. அதைவிட மோசம் சில சமயங்களில் மூவபிள்டைப் கருத்துப்பகுதியில் எரிதங்கள் வந்து விழுகின்றன. கடந்த முறை ஒரே சமயத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட எரிதங்கள் விழுந்திருந்தன. இவற்றை உடனே அடையாளம் கண்டு நீக்குவது சிரமமாக இருக்கிறது. இதை ஓரளவுக்கு எளிமைப்படுத்துவதற்காக இன்றைக்கு என்னுடைய கருத்துக்களுக்கான ஆர்எஸ்எஸ் செய்தியோடைத் தயாரித்திருக்கிறேன். இந்த ஓடை http://www.tamillinux.org/venkat/myblog/comments.xml என்ற முகவரியில் கிடைக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நான் [...]

    Read more →

    பிரான்சிஸ் கிரிக் – அஞ்சலி

    by  • August 2, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    உயிரின் வேதி அடிப்படையைக் கண்டறிந்த இரட்டையர்களில் ஒருவரான பிரான்சிஸ் கிரிக் 28 ஜூலை 2004 அன்று காலமானார். உயிர்பெருக்கத்தின் அடிப்படையாகவும், மரபின் மூலக்கூறாகவும் அறியப்படும் டிஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம் (டிஎன்ஏ) (Deoxyribo Nucleic Acid, DNA) மூலக்கூறின் அமைப்பை ஜேம்ஸ் வாட்சனும் (James Watson) ஃபிரான்ஸிஸ் கிரிக்கும் (Francis Crick) பெப்ருவரி 1953ல் புரிந்துகொண்டு உலகிற்கு அறிவித்தார்கள். பிணைந்திருக்கும் இரட்டைப் பாம்புகளைப் போன்ற தோற்றமுடைய டிஎன்ஏ மூலக்கூறின் அமைப்பும் அது பிழையின்றி அற்புதமாகத் தன்னைத்தானே நகலெடுத்துக்கொள்ளும் திறத்தையும் [...]

    Read more →