Archive for August, 2004

தமிழும், ஜப்பானும் ரஜினி ஊ&#

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ரஜினி ஆர்வம் தமிழ்-தமிழர்கள்-தமிழ்நாடு என்ற மொழி-குழு-இடம் பற்றிய ஆவலாக மாறியது. இதற்கு முக்கிய காரணம் – வியாபாரிகள். இவர்களைப் பற்றி கொஞ்சம் விலாவரியாகப் பார்க்க வேண்டும்.
முத்து திரைப்படத்தை முதலில் ஜப்பானுக்கு அனுப்பிவைத்தவர்கள் சிங்கப்பூர், மலேஷியாவில் அந்தப் படத்தின் உரிமையைப் பெற்றிருந்தவர்கள்தான். 1998-99 வாக்கில் புள்ளிவணி குமிழி உச்சத்திலிருந்தபொழுது ஜப்பானியர்களுக்கு ஏன் இந்தியர்களை வைத்துக்கொண்டு அமெரிக்கா எழுதும் மென்கலன்களுக்கு அதிகவிலை தரவேண்டும், அந்த இந்தியர்களையே இங்கே கொண்டுவந்து மென்கலன் துறையை வளர்க்கலாமே என்ற [...]


தகவல் வண்டி

இன்றைய ஷ்லாஷ்டாட் சிஎன்என் கட்டுரையை மேற்கோள் காட்டி இந்தியாவில் சைக்கிள் ரிக்ஷாவில் பொருத்தப்பட்டிருக்கும் கம்பியில்லா இணைய இணைப்பு கொண்ட கணினியைப் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறது.
ஐஐடி கான்பூரின் மூளையில் உதயமான இந்த வண்டி, கிராமங்களில் இணைய இணைப்பு கொண்ட நடமாடும் கணினி ஆய்வகமாகச் செயல்படுகிறதாம்.


பாடகி ஜிக்கி மறைவு

ஆகஸ்டு 16 அன்று பிரபல திரையிசைப் பாடகி ஜிக்கி மரணமடைந்தார். அவருக்கு வயது 70. தமிழ், தெலுகு உள்ளிட்ட பல மொழிகளில் மறக்கமுடியாத பாடல்களைப் பாடியவர் திருமதி ஜிக்கி. மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜிக்கியின் மறைவு ஒருவகையில் அவருக்கு அமைதியைத் தந்திருக்கிறது.
ஜிக்கி என்கிற பி.ஜி. கிருஷ்ணவேணி 1943 ஆம் ஆண்டு தெலுகில் ‘பந்துலம்மா’ திரைப்படத்தில் நடிகையாகவும் பிண்ணனிப்பாடகியாகவும் அறிமுகமாகி 2002 ஆம் ஆண்டுவரை – கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையிசையில் பாடியிருக்கிறார். எழுபது [...]


தமிழும் ஜப்பானும் – ரஜினி ஊ&

நான் டோக்கியோவில் வசித்த 1999-2001 ஜப்பானில் ரஜினி அலை வீசிக்கொண்டிருந்த நேரம். என்னுடைய ஆய்வகத்திற்கு இரண்டுமாதம் கோடை மாணவர்களாக வந்த இருவர் மெதுவாக என்னிடம் முத்து திரைப்படத்தில் குறுந்தகடு இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று சொல்ல அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். முத்து படத்தில் தொடங்கி இன்று ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்து ரஜினியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை அவருடைய இரசிகர் மன்றத் தலைவரையாவது பார்த்து காலில் விழுந்துவிட்டுப் போகலாம் என்ற அளவிற்கு முத்திப் போயிருப்பதன் [...]


Faster, Better… Schumacher

நேற்றைய ஹங்கேரியன் கிராண் ·à®ªà¯à®°à¯€à®¯à®¿à®²à¯ (வழக்கம்போல) மிகைல் à®·¥à®®à®¾à®•்கர் வெற்றி பெற்றிருக்கிறார். இது இந்த வருடத்தில் 13 பந்தயங்களில் இவருடைய 12ஆவது வெற்றி . இவருடைய ·à®ªà¯†à®°à®¾à®°à®¿ சகா ரூபன் பாரிகெல்லோ இரண்டாமிடத்தில் (வழக்கம்போல) – à®·¥à®®à®¾à®•்கர் – பாரிகெல்லோ இணை இந்த வருடத்தில் ஏழாவது முறையாக முதலிரண்டு இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்.


UofT student dies in freak solar car accident

நான் வேலைசெய்யும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சூரியசக்தி காரில் பயணித்துக் கொண்டிருந்த மாணவன் நெடுஞ்சாலை விபத்தில் நேற்று இறந்திருக்கிறான்.
உலகின் பல முன்னணி பல்கலைக்கழகங்களைப் போலவே டொராண்டோவிலும் பல சிறிய அறிவியல்/தொழில்நுட்ப விசேட ஆர்வமுள்ளவர்களின் குழுக்கள் இருக்கின்றன. புகைப்படக் கலை, சலனப்படம், ஒலிப்பதிவு, இரத்ததானம்,… இவற்றில் டொராண்டோ பல்கலையைப் பொருத்தவரை மிகவும் பிரபலமானது ப்ளூஸ்கை சோலார் கார் போட்டிக் குழு (Blue Sky Solar Racing Team). சென்ற வருடம் வடஅமெரிக்க சூரியக்கார் [...]


கொடுப்பதும் தடுப்பதும்

நேற்று நான் மைக்ரோஸாப்ட் வெளியிட்டிருக்கும் வின்டோஸ் எக்ஸ்பிக்கான சேவைப்பொதி -2 பற்றி எழுதினேன். இன்று மைக்ரோஸாப்ட் தாங்கள் வெளியிட்டிருக்கும் இந்தப் பொதி கணினிகளில் நிறுவப்படாமல் தடுக்க ஒரு ஒட்டு வழங்குகிறார்கள்.
சே.பொ-2 அறிவித்ததும் ஐபிஎம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதைத் தாங்கள் தற்பொழுதைக்கு ஆதரிக்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்த நிலையில் தனிநபர்கள் தங்கள் கணினிகளில் தானாக சேபொ-2 ஏறிக்கொள்வதைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார்கள். சேபொ-2 ஐ மைக்ரோஸாப்ட் அதிமுக்கியம் வாய்ந்த பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பொதி என்று [...]


மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி – 2

சேவைப்பொதி என்றால் எதோ இடியாப்பம் சமாச்சாரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது “ஆனாலும் கந்தை அதிலுமோர் ஆயிரங் கண்” என்று இரட்டைப் புலவர்கள் பாடியதைப் போன்ற துளையுள்ள மைக்ரோஸாப்ட் இயக்குதளங்களுக்கு அவ்வப்பொழுது பொத்தல்களை அடைக்க மைக்ரோஸாப்ட் தரும் ஒட்டுகளை (Patches) ஒன்றாகப் பொதியாக்கித் தருவதற்குப் பெயர்தான் சேவைப்பொதி (Service Pack). நேற்று மைக்ரோஸாப்ட் தன்னுடைய வின்டோஸ் எக்ஸ்பி இயக்கு தளத்திற்கு இரண்டாவது சேவைப்பொதியை வெளியிட்டிருக்கிறது.


Review: Invasion of Body Snatchers

நோபல் பரிசு விஞ்ஞானி பேராசிரியர் பிரான்ஸிஸ் கிரிக்-ன் அஞ்சலியில் அவருக்கு உயிரின் தோற்றம் குறித்த செலுத்தப்பட்ட பெருவிதைப்பு என்ற கருத்தில் இருந்த நம்பிக்கையைப் பற்றி எழுதினேன். இதைத் தொடர்ந்து வந்த மெய்யப்பனுடனான கருத்துப்பரிமாற்றத்தில் Invasion of the body snatchers என்ற திரைப்படத்தைப் பற்றியும் எழுதினேன். இந்தப் படத்தை நான் முதல்தடவை பார்த்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. எனவே இன்னொரு முறை பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது. அதிருஷ்டவசமாக என்னுடைய பல்கலைக்கழக [...]


Printer Friendly Page

என்னுடைய வலைக்குறிப்பின் அமைப்பில் இன்னொரு சிறிய சேர்க்கை; இப்பொழுது தனிப்பட்ட குறிப்புகளை பிற தேவையில்லாத விஷயங்களை நீக்கிவிட்டு அச்செடுக்க முடியும். இது மற்றவர்களுக்கு எப்படிப் பயன்படுமோ தெரியாது, ஆர்வமுள்ள என்னுடைய நண்பர்களின் பெற்றோர்களுக்கு இன்னமும் நேரடியாகப் படிப்பதில் சிக்கல் இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சில கட்டுரைகளை அச்செடுத்துத் தருவதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வழக்கம்போல சிக்கல்கள் எதுவுமிருந்தால் தெரியப்படுத்துங்கள்.
இதைச் செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் சுவாரசியமாகவே [...]