• Archive for July, 2004

    கலவை மருந்துகள்-1

    by  • July 13, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய பள்ளி நாட்களில் தொண்டை கரகரத்து சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக என் அம்மா ஒரு குவளை சுடுதண்ணீரில் கொஞ்சம் உப்பைப் போட்டு நன்றாக வாயைக் கொப்பளிக்கச் சொல்வாள். இதை அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, அடிக்கடி செய்தால் தொண்டைவலியை ஓரளவுக்குக் குறைக்க முடியும். சில சமயங்களில் இப்படி உப்புநீரைக் கொடுக்கும்பொழுது அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் என் அம்மா சேர்ப்பார்கள். மஞ்சளுக்கு நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் உண்டு. சுடுநீர் தொண்டைக்கு இதமளிப்பதுடன் மஞ்சளின் நோய் [...]

    Read more →

    அந்நியன்

    by  • July 12, 2004 • இலக்கியம் • 0 Comments

    தெருக்கோடியிலிருந்தே அந்த வீடு தனியாகத் தெரிகிறது. தெருவின் நடுவில் இருக்கிறது. நோஞ்சானாகத் தெரியும் அந்தத் தெருவின் பிற வீடுகளைப் பார்க்க இது கம்பீரமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த திண்ணையை மூன்றில் இரண்டுபங்காகப் பிரித்து வலதுபுறம் சதுரவடிவில் இருக்கிறது. போனால் போகிறது என்று கொஞ்சூண்டு விண்டு போட்டதுபோல் இடதுபுறம். அதிகபட்சம் ஒற்றை சரீர ஆசாமி படுத்துக் கொள்ளலாம். இரண்டுக்கும் இடையில் குறுகலான நடைவழி. பெரிய திண்ணையில் எட்டிலிருந்து பத்து ஆட்கள் அமரமுடியும். வழக்கமாக இதுபோன்ற திண்ணைகளில் இருப்பதைப் போலத்தான் இங்கும் [...]

    Read more →

    செத்தாலும் பேசறதை நிறுத்

    by  • July 9, 2004 • நகைச்சுவை • 0 Comments

    அமெரிக்காவில் காப்புரிமைப்பதிவு என்பது மிகவும் பிரபலமான ஒன்று. தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கிடையில் தங்கள் கண்டுபிடிப்பின் முழுப் பொருளாதாரப் பலனையும் தாங்களே அனுபவித்தாக வேண்டும் என்ற வெறி இருக்கிறது (ஆனால் பெரும்பாலான சமயங்களில் இந்தக் காப்புரிமை கண்டுபிடிப்பவர்களால் இடைத்தரகர்களிடம் விற்கப்படுகின்றன. அல்லது ஆய்வுக்குப் பணம்போட்ட நிறுவனம் மொத்தமாக அதன் கண்டுபிடிப்பு உரிமையை எடுத்துக் கொள்கிறது. என்னுடைய ஒரு காப்புரிமைப் பத்திரம் என் முன்னாள் நிர்வாகத்தால் பத்து டாலர்களுக்கு விற்கப்பட்டது). காப்புரிமை பெற்று பணம் சம்பாதித்துத் தள்ளவேண்டும் என்ற [...]

    Read more →

    வி. குமார் என்னும் திரையிச&#

    by  • July 8, 2004 • இசை • 0 Comments

    tfmpage.com இணைய தளத்தில் வி. குமார் – மலரும் நினைவுகள் என்ற தொடரை நண்பர் சரவணன் ஆரம்பித்திருக்கிறார். இந்தத் தொடரில் மறைந்த இசையமைப்பாளர் திரு. வி. குமார் குடும்பத்தினரின் (வி.குமாரின் மனைவி ஸ்வர்ணாவும் ஒரு திரைப்படப் பாடகி) உதவியுடன் சரவணன் வி.குமாரின் பழைய வானொலி நிகழ்ச்சிகள், பத்திரிக்கை பேட்டிகள், பாடல் பதிவின்பொழுது பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் இவர்களுடனான உரையாடல் என்று பல அரிய விஷயங்கள் இங்கே தொகுக்கப்படவிருக்கின்றன. இது ஒரு அருமையான முயற்சி, இதற்குத் தோள் (தளம்) [...]

    Read more →

    அந்நியன்

    by  • July 6, 2004 • பொது • 0 Comments

    டொராண்டோ மாநகரம் உலகிலேயே வித்தியாசமான நகரம். சென்ற வாரம் கீரீஸ் ஐரோப்பியக் கால்பந்தாட்டக் கோப்பையை வென்றதற்கு டொராண்டாவின் டான்·à®ªà¯‹à®°à¯à®¤à¯ (Danforth) பகுதியில் கிரேக்க நாட்டினர் இரவெல்லாம் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கிரேக்கர்கள் வசிக்கும் நகரம் டொராண்டோ (ஐரோப்பாவிற்கு வெளியே இங்கேதான் கிரேக்கர்கள் அதிகம் வசிக்கிறார்கள்). அந்த இறுதியாட்டத்தில் கீரீஸ்க்குப் பதிலாக போர்த்துகல் வென்றிருந்தால்? — டொராண்டோவைப் பொருத்தவரை ஒரு மாற்றமும் இருந்திருக்காது. டண்டாஸ்-பாத்தர்ஸ்ட் (Dundas – Bathurst) பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் போர்த்துக்கீசியர்கள் [...]

    Read more →

    நோஸ்ட்ராடமஸ்ம் அறிவியலுī

    by  • July 5, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய வழக்கமான கனேடியத் தமிழ் வானொலி வாராந்திர நிகழ்ச்சியில் விஞ்ஞானச் செய்திகளுக்குப் பிறகு இடம்பெறும் விஞ்ஞான அலசல் என்ற பகுதியில் “நோஸ்ட்ராடமஸ்ம் அறிவியலும்” என்ற தலைப்பை எடுத்துக் கொண்டோம். (பெரும்பாலான நிகழ்ச்சிகள் இப்பொழுது நேயர்கள் வழங்கும் தலைப்பிலேயே நடக்கத் தொடங்கிவிட்டன, இது நேயர்களிடையே பெருகிவரும் ஆர்வத்தைக் காட்டுகிறது). கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் வரை நடக்கும் இந்தப் பகுதியில் திரு. விஜே குலதுங்கன், திரு. மாறன் செல்லையா இவர்களுடன் நானுமாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட தலைப்பை (கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு) [...]

    Read more →

    Some Moore Revolutions

    by  • July 4, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    தற்பொழுது வெளியாகி அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விவரணத் திரைப்படம் பாரன்ஹீட் 9/11. இந்தப் படத்தைக் குறித்த அருண் வைத்தியநாதனின் விமர்சனம் இங்கே. நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. மைக்கேல் மூரின் முந்தைய பௌலிங் ·à®ªà®¾à®°à¯ கூலும்பைன் விவரணப் படத்தையே நான் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பார்த்தேன். (பாரன்ஹீட் 9/11 என் பல்கலைக்கழக நூலகத்திற்கு டிவிடியில் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று இந்தப் படத்தின் இயக்குநர் மைக்கேல் மூர் இதை இணையம் [...]

    Read more →