• Archive for July, 2004

    ஆணுறைகள்

    by  • July 28, 2004 • நகைச்சுவை • 0 Comments

    எச்சரிக்கை: இந்தக் கட்டுரை பதின்மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. தமிழில் மிகவும் குறைவாக எழுதப்பட்ட/பேசப்படும் விஷயங்களுள் ஒன்று ஆணுறைகள். இந்தியா அவசரநிலையில் இருந்த எழுபதுகளில் சஞ்சய்காந்தியின் வற்புறுத்தலில் அகில இந்திய வானொலி இரவு ஒன்பது மணிக்குத் தவறாமல் நிரோத் உபயோகியுங்கள் என்று கணக்கு வாத்தியாரைப்போன்ற குரலில் சொல்ல ஆரம்பித்து இப்பொழுது கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகப்போகிறது. குடும்பக் கட்டுப்பாடும், எய்ட்ஸ் வியாதியுமான இந்த நாட்களிலும் இன்னும் ஆணுறைகளைப் பற்றி பொதுவில் யாரும் பேசுவதில்லை. சராசரி இந்தியனின் தினசரி வாழ்க்கையை [...]

    Read more →

    ஒரு வருடம்

    by  • July 22, 2004 • பொது • 0 Comments

    இன்றுடன் நான் வலைக்குறிப்பு எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருக்கிறது. சத்தியமாக ஒரு வருடத்திற்கு முன்னால் என்னால் இதைத் தொடர்ந்து செய்யமுடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் இப்பொழுது கிட்டத்தட்ட தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகிப்போயிருக்கிறது. இந்த வலைக்குறிப்பின் பயன் என்ன என்று நான் யோசித்துப் பார்த்தபொழுது எல்லாவற்றிலும்கூட முக்கியமானதாகத் தோன்றியது எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்கள். பத்ரி, காசி, குமரகுரு, பரி, பா.ராகவன், சுந்தரவடிவேல், தங்கமணி, பாலாஜி-பாரி, பாஸ்டன் பாலாஜி, ‘என் மூக்கு’ சுந்தர், ஐகரஸ் பிரகாஷ், டைனோ [...]

    Read more →

    ஐஐடி ஆசிரியர் மாஃபியா

    by  • July 22, 2004 • பொது • 2 Comments

    {இரண்டு} ஐஐடி ஆசிரியர் தேர்வு குறித்து; பொதுவாக ஐஐடியில் முன்னாள் ஐஐடி மாணவர்கள் ஆசிரியர்களாக வந்து சேர்வது அதிகம். இது சுயகலப்பு (Inbreeding) என்ற நெருக்கமான நிலையை உருவாக்குகிறது. அந்தந்த ஐஐடிகளில் அவற்றின் மாணவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பொதுவில் உயர்தரமான பல்கலைக்கழகங்களில் தங்களுடைய மாணவர்களை தாங்களே வேலைக்கு அமர்த்தமாட்டார்கள். இது ஆராய்ச்சிக்கூடங்களில் பல்வேறு பிண்ணனிகள் கொண்ட ஆசிரியர்கள் ஒருங்கவும் தங்களுக்குள்ளே கருத்துகளையும் திறமைகளையும் கலக்கவும் வழிவகுக்கும். ஆராய்ச்சிக்கூடங்களில் ஆசிரியருக்குக் கீழ் அவருடைய மாணவரே அடுத்த தலைமுறையாகத் தொடர்வது [...]

    Read more →

    Fighting comment spam

    by  • July 21, 2004 • பொது • 2 Comments

    Today my site was hit by severe comment spamming. There were about 350 junk comments were posted. I have successfully deleted and blacklisted the domains indulging in spam. I guess some visitors to my blog might be inconvenienced (Arul and Sundar have posted their comments twice, guess this is due to slow response). I apologize [...]

    Read more →

    அருளின் “ஒரு சிலர்”

    by  • July 20, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஒரு அற்புதமான சிறுகட்டுரை அருள் செல்வனால் எழுதப்பட்டிருக்கிறது. “ஒரு சிலர்” என்ற தலைப்பில் இந்தியாவின் அடிப்படைத் தேவைகளை, அவற்றை நிறைவேற்றுவதில் இருக்கும் பிரச்சனைகளை நேரடியாக மோதி வெற்றிகண்ட நாயகர்களைப் பற்றிய தகவல் அது. பேராசைமிக்க வியாபாரத் தீயில் ஆகுதியாக வெந்துபோன பிஞ்சுகளைப்பற்றிய வேதனைக்கு மருந்தாக அருளின் கட்டுரை வந்திருக்கிறது. இன்றைக்கு அமுல் என்றால் “க்யா சீஸ் ஹை” என்று சொல்லி அண்ணாசாலையில் அவர்கள் வைக்கும் பாலூட்டிகளின் சாதனங்கள்தான் என்று இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கனவை விரிய [...]

    Read more →

    ஐஐடிக்கள் – சில யோசனைகள்

    by  • July 19, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஐஐடிக்கள் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றாமல் போயிருக்கின்றன என்பதை இந்த வரிசையின் முதல் குறிப்பில் எழுதியிருந்தேன். தொடர்ந்து ஐஐடிக்களிடமிருந்து ஏன் நாம் நிறைய எதிர்பார்க்க வேண்டும் (அல்லது ஐஐடிக்களுக்கு இருக்கும் கடமைகள்) என்பதைப் பற்றி எழுதியிருந்தேன். இதில் அடுத்தபடியாக, ஐஐடிக்கள் ஏன் அவற்றின்மீதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதைப் பற்றி எழுதுவதாக இருந்தேன். ஆனால் தொடர்ந்தும் எதிர்மறையான விஷயங்களையே எழுதிக்கொண்டிருந்தால் அது என்னுடைய நோக்கத்தைத் திசை திருப்பிக் காட்டக்கூடும் என்று தோன்றுவதால். இனிமேல் சில குறிப்புகளுக்கு ஐஐடிக்களின் நிலைமையை முன்னேற்ற [...]

    Read more →

    ஐஐடிக்கள் – ரவி சீனிவாஸும் &

    by  • July 16, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடை கடந்து இரண்டு நாட்கள் ஐஐடி அலசலைப் பற்றிய கருத்தை ரவி சீனிவாஸ் இப்படி எழுதியிருக்கிறார்: வெங்கட் ஐ.ஐ.டிகள் குறித்த வெறுப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.அதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கங்கள்,காரணங்கள பொருத்தமாக இல்லை.தன் தரப்பினை நியாயப்படுத்த அவர் முன் வைத்துள்ள கருத்துக்களை என்னால் ஏற்க இயலாது. வெறுப்பினை மறைக்கும் முயற்சியாகவே இது தோன்றுகிறது. அவர் எழுதியுள்ளது போல் எழுதி இந்தியாவின் எந்த உயர் கல்விநிறுவனத்தையும் வீண் அல்லது தோல்வி என்று வாதிட முடியும்.குறைந்த பட்சம் ஒழுங்கான கேள்விகளையாவது அவர் கேட்டிருக்கலாம். [...]

    Read more →

    கும்பகோணம் தீ விபத்து

    by  • July 16, 2004 • பொது • 0 Comments

    இந்த வெள்ளியின் காலை அமங்கலமாக விடிந்திருக்கிறது. இன்றைக்குக் காலையில் நான் எழுந்தவுடன் கண்ணில் பட்ட முதல் செய்தி : கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் தீ விபத்தில் 75 மாணவர்கள் சாவு. இது கூகிள்நியூஸ் பக்கத்தில் முதல் செய்தியாக இருந்தது. அவரசம் அவசரமாகத் தேடிப்போய் விபரங்களைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே கனேடியத் தொலைக்காட்சியின் காலைச் செய்திகளில் இதைக்காட்டினார்கள். கண்டங்கள் விட்டுத் தள்ளியிருந்தாலும் கூக்குரல்கள் என் காதுகளைத் துளைக்கின்றன. செய்வதறியாது நெஞ்சை வலிக்கிறது. ஏன்? ஏன்? ஏன் இப்படியாக வேண்டும்? யார் செய்த [...]

    Read more →

    ஐஐடி – எதிர்பார்ப்புகள்

    by  • July 15, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    நேற்றைய எனது இடுகை சற்று திசை திரும்பியிருக்கிறது. பிரகாஷ் சொன்னதுபோல் நடந்த விவாதங்கள் என்னுடைய நீண்ட வலைக்குறிப்புக்குப் பெரிதும் சம்பந்தமில்லாமலேயே நடந்திருக்கிறது. ஆனாலும், நான் இதை வெட்டித்தனமாகக் கருதவில்லை. இதை நேரடியான முறைக்கு எடுத்துச் செல்லும் என் அடுத்த முயற்சி; நான் சொல்லியிருப்பதை முன்னொட்டி பிரகாஷ் கேட்டது உங்கள் மூலப்பதிவுக்கு மறுமொழியாக , நான் சொல்லவந்ததன் சாராம்சம் இதுதான், ” ஐஐடி என்பது ஒரு அட்டர் ·à®ªà¯à®³à®¾à®ªà¯à®ªà®¾à®© மாடல் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நிஜமாக அப்படித்தான் நினைக்கிறீர்களா? [...]

    Read more →

    ஐஐடி என்ற மாயை

    by  • July 14, 2004 • பொது • 0 Comments

    பத்ரியின் வலைப்பதிவில் The IITians புத்தகத்தைப் பற்றிய அவரது விமர்சனத்தை முன்னிட்டு ஐஐடிகளைப் பற்றி பரபரப்பான விவாதம் நடைபெறுகிறது. பத்ரி குறிப்பிட்டிருக்கும் அந்தப் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. எனவே அதைப் பற்றி கருத்து சொல்ல முடியவில்லை. அது எனக்குக் கிடைக்க நிறைய நாட்களாகும் என்று தோன்றுகிறது. நம்முடைய வழக்கப்படி இதையும் பார்ப்பனர்கள் பற்றிய அக்கப்போராக மாற்றிக்கொண்டிருக்கிறோம். சிலருக்கு எத்தனை முறை கேட்டாலும் “பார்ப்பான் ஒழிக” அலுப்பதில்லை. “தம்பி எங்க இன்னொரு தடவ ஒரக்க கத்திச் சொல்லு” [...]

    Read more →