கனேடியத் தேர்தல் – முதல் மு&

canada_flag.pngஇன்றைக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்து அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுகள் வரத்தொடங்கிவிட்டன. கிழக்கே நியூபந்ட்லாண்ட் (Newfoundland) மாநிலத்திலிருந்து மேற்கே பிரிட்டிஷ் கொலம்பியாவரை பரந்து விரிந்த கனடாவின் கிழக்குக் கோடிக்கும் மேற்குக் கோடிக்கும் இடையே மூன்றரை மணி நேர வித்தியாசம் இருக்கிறது. இதைத் தேர்தலில் சரிசெய்வதற்காக கிழக்கே காலை ஒன்பது மணி தொடங்கி இரவு ஒன்பது மணிவரை வாக்கெடுப்பும், மேற்கே காலை ஆறுமணி தொடங்கி மாலை ஆறு மணிவரை வாக்கெடுப்பும் நடக்கிறது. இதனால் கனேடியர்கள் அணைவரும் ஒரேசமயத்தில் ஓட்டெடுப்பில் கலந்துகொள்கிறார்கள்.

ஓட்டெடுப்பு முடிந்த அடுத்த அரைமணி நேரத்தில் முடிவுகள் தெரியத்தொடங்கும். இன்னும் முக்கிய மாநிலங்களான ஒன்டாரியோ, க்யூபெக் இரண்டிலும் வாக்கெடுப்பு முடிய ஒரு மணி நேரமிருக்கிறது. இந்த நிலையில் அட்லாண்டிக் பிரதேசங்களின் முடிவுகள் முழுமையாக கிடைத்துவிட்டன. இந்த நிலையில் நிலவரம்;

மொத்தம் – 32
லிபரல் – 22
கன்ஸர்வேடிவ் – 7
புதிய ஜனநாயகக் கட்சி – 3

இந்த முடிவுகளை வைத்துக்கொண்டு லிபரல்கள் வெற்றிபெறுவார்கள் என்று கணிப்பது கஷ்டம் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் கிழக்கு மாநிலங்கள் எப்பொழுதுமே லிபரல்கள் வசம்தான். லிபரல்கள் தொகுதிகளைக் கணிசமாகக் கைப்பற்றினாலும் அவர்கள் மொத்த வாக்கு கடந்த தேர்தல்களைக் காட்டிலும் 7% குறைந்துபோயிருக்கிறது. கண்ஸர்வேடிவ்களுக்கும் மொத்தத்தில் இழப்புதான். புதிய ஜனநாயகக் கட்சி கடந்த தேர்தலைக்காட்டிலும் ஒரு இடத்தைக் குறைத்துப் பெற்றிருந்த பொழுதும் மொத்த வாக்குகளில் அதன் விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

இதையே வழிகாட்டியாகக் கொண்டால், லிபரல்களில் இடங்கள் மொத்தத்தில் குறைந்துபோக, புது ஜனநாயகக் கட்சியின் துணையுடன் சிறுபாண்மை ஆட்சியில் வருவார்கள் என்று தோன்றுகிறது.

பல கருத்துக் கணிப்புகள் கன்ஸர்வேடிவ் கட்சிதான் சிறுபாண்மை ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தபொழுதும் எனக்கென்னமோ லிபரல்கள் இழுத்துப் பரித்துக்கொண்டு வந்துவிடுவார்கள் (வரவேண்டும், நான் லிபரல் ஆதரவு :) ) என்று தோன்றுகிறது).

Popularity: 3% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

No comments yet.

Leave a comment

(required)

(required)