Archive for June, 2004

கனேடியத் தேர்தல் – தலைவர்க&#

நள்ளிரவு நிலவரம்
லிபரல் – 130 (6)
கன்ஸ்ர்வேடிவ் – 85 (7)
ப்ளாக் க்யூபெக்வா – 53 (2)
புது ஜனநாயகம் – 18 (5)
சுயேச்சை – 1
_ _ _
பெரும்பாலும் எந்த மாறுதல்களும் இல்லை. கன்ஸர்வேடிவ் எதிர்பார்த்ததைப் போலவே பசிபிக் மாநிலங்களில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது.
தலைவர்களில் இருவர் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஒருவர் எளிதாக வெற்றி பெற்றிருக்கிறார். ஒருவர் தலை தப்பித்தது.
பால் மார்ட்டின் (லிபரல்) – பிரெஞ்சு பேசும் க்யூபெக் மாநிலத்தில் மாண்ட்ரியல் நகரில் லா-சால்லே-ஏமார் [...]


கனேடியத் தேர்தல் – முழு நில&

இப்பொழுது மணி இரவு 11:20 ஆகிறது ஒண்டாரியோ, க்யூபெக், தொடங்கி அல்பெர்ட்டா வரை வாக்கெடுப்பு முடிந்து இரண்டு மணி நேரம் ஆகப்போகிறது. முடிவுகள் பெரும்பாலும் வெளிவந்துவிட்டன.
மொத்த இடங்கள் – 308
லிபரல் – 123 (14 தொகுதிகளில் முன்னணி)
கன்ஸர்வேடிவ் – 82 (12)
ப்ளாக் க்யூபெக்வா – 51 (3)
புது ஜனநாயகம் – 17 (5)
சுயேச்சை – 1
பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 155 இடங்கள் தேவை. இந்த நிலையில் லிபரல்களுக்கு 137 இடங்கள் கிடைக்கவிருக்கிறது. கன்ஸர்வேடிவ் கட்சிக்கு [...]


கனேடியத் தேர்தல் – முதல் மு&

இன்றைக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்து அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுகள் வரத்தொடங்கிவிட்டன. கிழக்கே நியூபந்ட்லாண்ட் (Newfoundland) மாநிலத்திலிருந்து மேற்கே பிரிட்டிஷ் கொலம்பியாவரை பரந்து விரிந்த கனடாவின் கிழக்குக் கோடிக்கும் மேற்குக் கோடிக்கும் இடையே மூன்றரை மணி நேர வித்தியாசம் இருக்கிறது. இதைத் தேர்தலில் சரிசெய்வதற்காக கிழக்கே காலை ஒன்பது மணி தொடங்கி இரவு ஒன்பது மணிவரை வாக்கெடுப்பும், மேற்கே காலை ஆறுமணி தொடங்கி மாலை ஆறு மணிவரை வாக்கெடுப்பும் நடக்கிறது. இதனால் கனேடியர்கள் அணைவரும் ஒரேசமயத்தில் [...]


அமெரிக்கா – இன்னமொரு சகாப்&#

நேற்று அறிவிக்கப்பட்ட அமெரிக்கா ராணுவ முடிவின்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களோடு தோள்கொடுத்துப் போரிட்ட ஆறு கனேடியர்களின் மீது விமான குண்டுகளை ஏவிக் கொலை செய்த அமெரிக்க ராணுவ வீரருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. தொடர்ச்சியாக அமெரிக்கர்களைத் தவிர்த்த பிற உயிர்களுக்கு (அது நட்புபாராட்டும் அண்டை நாடாக இருந்தாலும்கூட) அமெரிக்கர்களால் எந்தவிதமான மதிப்பு தரப்படுகிறது என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் அரக்கத்தனத்தைப் புரிந்துகொள்ள நாம் செப்டம்பர் 11க்குப்பின்-ஆப்கானிஸ்தானுக்குப் போகவேண்டும். 18 ஏப்ரில் 2002. ஆப்கானிஸ்தானில் கனேடியர்கள் “தீவிரவாதத்திற்கு [...]


கடவுள் பாதி, மிருகம் பாதி

பல சமயங்களில் நம்பமுடியாத விஷயங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் டொராண்டோ நகரில் ஒரு மாபெரும் துக்க தினமாக மாறியிருக்கவேண்டியது ஒரு நாயினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
கனடாவின் கிழக்கு மாநிலமான நியூ ப்ரன்ஸ்விக்கிலிருந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் ஒரு கார் நிறைய ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஏற்றிக்கொண்டு டொராண்டோ நகருக்கு வந்திருக்கிறான். இலக்கு எதுவுமில்லாமல் பொதுமக்கள் சந்தோஷமாக இருக்கும் கூட்டத்திற்குச் சென்று பலரையும் சுட்டுத்தள்ளும் உத்தேசம் அவனுக்கு இருந்திருக்கிறது. நகரின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஒரு பூங்காவிற்குச் சென்று தன்னுடைய துப்பாக்கிகளில் [...]


குவாண்டம் கணினி – விமர்சனம&#

என்னுடைய புத்தகம் குவாண்டம் கணினி குறித்து டொராண்டோவிலிருந்து ஒலிபரப்பாகும் கனேடியத் தமிழ் வானொலியில் திரு கலைப்பிரியன் அவரகள் ஒரு விமர்சனத்தை வாசித்தார். இதன் ஒலிவடிவத்தை இங்கே வெளியிடுகிறேன்
கலைப்பிரியனின் விமர்சனம் .
வாரம்தோறும் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் புத்தகம், திரைப்படம், நிகழ்வுகள் இவற்றின் மீதான விமர்சங்களை வாசிக்கிறார்கள். கனேடியத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும் பல நல்ல நிகழ்ச்சிகளுள் இதுவும் ஒன்று.
ஒலிக்கோப்பு எம்பி3 வடிவில் இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கான இந்த [...]


வெ.சா. விருது விழா

இந்த வார திண்ணை மின்னிதழில் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் விமர்சகர் வெங்கட் சாமிநாதனுக்கு இயல்விருது வழங்கும் விழாவைப் பற்றிய என்னுடைய கட்டுரை வெளியாகியிருக்கிறது.
திண்ணையில் படங்களைப் பற்றி நான் அனுப்பியிருந்த தகவல் முழுமையாக சேர்க்கப்படவில்லை. முதலாவது படத்தில்;
இடமிருந்து வலம் : காலம் ஆசிரியர் செல்வம், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், வெங்கட் சாமிநாதன், பேரா. செல்வா கனகநாயகம், எழுத்தாளர் மகாலிங்கம்.
இரண்டாம் படத்தில், வெங்கட் சாமிநாதனும், டொராண்டோ பல்கலைக்கழக ஆசியப் பிரிவின் இயக்குநர் பேரா. மைக்கேல் டானலியும்.
* [...]


கனேடியத் தேர்தல் – 2

இதன் முதலாம் பாகம்
கனடாவின் தற்பொழுது நான்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன (பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 12 இடங்களாவது பெற்றிருக்க வேண்டும்). இவற்றைத் தவிர அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகளும் உண்டு (உதாரணமாக, பசுமைக் கட்சி (Green Party). எந்தக் கட்சிச் சார்புமின்றி சுயேச்சையாகவும் போட்டியிடலாம்.

1. லிபரல் கட்சி (Liberal Party)

முன்னிருத்தப்படும் பிரதமர் : பால் மார்ட்டின் (Paul Martin)

கனடாவின் தற்பொழுதைய ஆளூம் கட்சி; கலைக்கப்படும் பாராளூமன்றத்தில் அமோக பலம் பெற்றது. இவர்களுடைய கொள்கைகளை [...]


கனேடியத் தேர்தல் – 1

நடந்து முடிந்த இந்தியத் தேர்தல் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் இரண்டுக்கும் இடையே கனடாவில் தேர்தல் வருகிறது. வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலைப்பற்றி கனேடியரல்லாதவருக்கான அறிமுகம் இது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சனைகள், எதிர்ப்பார்ப்புகள், முக்கியமாக இதில் புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன என்பதைப் பற்றி எழுத உத்தேசம். பொதுவாக கனடாவைப் பற்றி பிற நாட்டு பத்திரிக்கைகள் அதிகம் எழுதுவதில்லை. மிகவும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் நடக்கும் இந்த நாட்டில் பிரச்சனைகள் குறைவு. [...]


நிறக்குருடு – தகவமை ஒளியிய&#

என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்தில் வருங்காலத்தில் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்றாக தகவமை ஒளியியலைப் (Adaptive Optics) பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சாதாரணமாக நல்ல பார்வை உள்ளவர்களுக்கும் தகவமை ஒளியியல் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளைத் தருவதன் மூலம் அவருடைய பார்வைய உயர்த்த முடியும் என்பது ‘அதிபார்வை’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையின் முக்கிய தகவல். அதாவது, இது நாள் வரை நாம் இயற்கையாக மனிதனின் பார்வைத் திறன் என்று அறிந்திருந்ததை இன்னும் கொஞ்சம் [...]