• Archive for May, 2004

    புத்திசாலி செருப்பு

    by  • May 11, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது செருப்பே புத்திசாலியாகிவிட்டது. நேற்றைக்கு டிஸ்கவரியில் அடிடாஸின் புதிய காலணியைப் பற்றிய விளக்கத்தைப் பார்த்தேன். உலகிலேயே முதன் முறையாக நுண்செயலி பொருத்தப்பட்ட காலணியை அடிடாஸ் வடிவமைத்திருக்கிறது. ஏன் நுண்செயலி; ஓடும் பரப்புக்கு ஏற்றபடி (தார் ரோடு, மண் தரை, புல்வெளி) உங்கள் காலின் அழுத்தம் மாறுபடும் அடிடாஸின் இந்தக் காலணியிலிருக்கும் பாலிமர் நுரைப்பஞ்சுகளின் அழுத்தம் மற்றும் தகவுதிறன் முதலாம் அடியில் கணக்கிடப்பட்டு, கால் அடுத்ததாகத் தரையில் பாவுவதற்கு [...]

    Read more →

    ஆ(த்)ந்திர அலை

    by  • May 11, 2004 • பொது • 0 Comments

    ஆந்திரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாயுடுகாருவின் தெலுகுதேசம் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸின் கூட்டணி 226 இடங்களைப் பெற தெலுகுதேசம்-பிஜேபி கூட்டணி 49 இடங்களையே பெற்றிருக்கிறது. தெலுகு தேசத்தின் வரலாற்றிலேயே இது மோசமான தோல்வி. வெளிநாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவனுக்கு மிகவும் அதிர்ச்சி தரும் முடிவு இது. காரணம், நாயுடு வந்தபின் ஆந்திராவில் பாலும் தேனுமாக ஓடுகிறது என்றும் அந்தப் பாலாற்றின் தேனாற்றின் மீது அழகிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு ஹைதராபாத் மிளிர்கிறது என்றும் பத்திரிக்கைகள் எழுதித் தள்ளினார்கள். இவை [...]

    Read more →

    Software localization and programmer opportunities :)

    by  • May 7, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    வழக்கம்போல, பல நாட்கள் கழிந்தபின்னர்தான் பார்க்கக் கிடைத்தது பாஸ்டன் பாலாஜி அவருடைய வலைக்குறிப்பில் 7-ஜிப் தமிழாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய நண்பர் திரு ஆனந்த் சங்கரன் என்பவர் அவருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் . வழக்கமாக இது வெட்டி வேலை என்றுதான் சொல்வார்கள், ஆனால் திரு ஆனந்த் இது விபரீத வேலை (இப்படியே போனால் தமிழர்கள் கொடி நாட்டுவதைக் குறைத்துவிடுவார்கள்,…) என்று சொல்லியிருக்கிறார். தற்பொழுதுள்ள கல்வியில் உலகம் முழுவதும் ஏற்கப்பட்ட ஒரே துறை கணிணி துறை. மற்ற [...]

    Read more →

    எள்ளிருக்கும் இடமின்றி…

    by  • May 3, 2004 • இலக்கியம் • 0 Comments

    சமீபத்தில் படித்த உரைநடைகளுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றை இங்கே இடுகிறேன். எழுதியவர் என்னுடைய நெருங்கிய நண்பர் செல்வம் அருளானந்தம் (டொராண்டோவிலிருந்து வெளிவரும் காலம் சிற்றிதழின் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பதிப்பாசிரியர்). எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி செல்வம் அருளானந்தம் “சண்டியன் ஆரோக்கிய நாதனை நான் கொன்டுட்டன்… என்னைக் கொண்டுபோய் ஒருக்கால் பொலிஸ் ஸ்டேசனில விட்டுவிடு”- ஒல்லியன் யேசுமணி இரத்தம் தோய்ந்த சேட்டுடன் நின்று நடுங்கிக் கொண்டிருந்தான். “என் மகளே பொன்மகளே, என் இப்பரச [...]

    Read more →