• Archive for April, 2004

    செய்யும் தொழிலும்-விருப்

    by  • April 11, 2004 • பொது • 0 Comments

    பொதுவில் நிறைய வலைக்குறிப்புகள் இருப்பதால் என்னால் விரும்பிய அளவிற்கு எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்க முடிவதில்லை. அதன் மேலும், ஒப்புக்கொண்டபடி தமிழில் பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்த விஷயங்களை ஒரே இடத்தில் அலச ஒரு தளம் அமைக்கும் பணியும் இருப்பதால் இப்பொழுதெல்லாம் நிறைய பேர் வீட்டுக்குப் போக முடியவில்லை. இன்றைக்கு கொஞ்சம் போஸ்ட்ந்யூக் வேலைகளுக்கிடையே சுந்தரின் என் மூக்கு தளத்தைப் பார்க்க முடிந்தது. துறைசார் பதிவுகளையும்/ அலசல்களையும் பற்றிய அவருடைய குறிப்பை பார்க்க நேர்ந்ததில் வியப்புதான் மேலிட்டது. தலைப்பிலேயே [...]

    Read more →

    புத்தகத்திற்கு வலைப்பக்Ĩ

    by  • April 11, 2004 • பொது • 0 Comments

    சமீபத்தில் வெளியான என்னுடைய புத்தகத்திற்காக வலைப்பக்கங்களை உருவாக்கி வருகிறேன். என்னுடைய இந்த புத்தகம் அறிவியல் தொடர்பானது, இதன் வாசிப்பு பல சந்தேகங்களைத் தரும் என்று நம்புகிறேன். அந்த சந்தேகங்கள் மேலதிகத் தகவல்களைத் தேடிச்செல்ல உங்களைத் தூண்டினால் அது எனக்குக் கிடைத்த வெற்றி என்று நிம்மதியடைவேன். இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கமே அதுதான். (நானாகப் படைப்பாளி என்றெல்லாம் இறுமாந்து கொள்ளும் நேரம் என் கவிதை/கதை தொகுப்புகள் வெளிவரும் நாளாக இருக்கும்). இந்தப் பக்கங்களில் கூடுதல் தகவல்கள், தொடர்புள்ள புத்தகங்கள், [...]

    Read more →

    கண்ணில் தெரியும் கதைகள்

    by  • April 9, 2004 • நகைச்சுவை • 0 Comments

    நம்ப ஊர்ல நகை நட்டு(!) எங்கெல்லாம் போட்டுப்பாங்க? ஓட்டை போடாமல் அப்படியே ‘அணிந்து கொள்ளும்’ மோதிரம், அட்டிகை, ஒட்டியாணம், போன்றவற்றை விட்டுவிடலாம். எனக்குத் தெரிந்து காதில், மூக்கில்தான் ஓட்டைபோட்டு நம் ஊரில் மாட்டிக் கொள்வார்கள். நம்மூரில் பார்த்த அதிகபட்ச சிக்கல்கள் செட்டிநாட்டு ஆச்சிகள் காதில் தொங்கும் பாம்படமும், அந்தப் பாம்படத்தால் தொங்கும் காதுகளும்தான். மேற்கத்திய நாடுகளில் உடலில் துளையிட்டுக்கொள்வது ஒரு கலையாகக் கருதப்படுகிறது. நான் கிளாஸ்கோவில் (ஸ்காட்லாந்து) வசிக்கும்பொழுது தினசரி நானும் என் மனைவியும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் [...]

    Read more →

    என் அறிவியல் கட்டுரைத் தொ

    by  • April 5, 2004 • பொது • 0 Comments

    நேற்று இரவு தமிழினி பதிப்பகத்திலிருந்து என்னுடைய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவந்திருப்பதாகப் பதிப்பாளர் திரு வசந்தகுமார் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை. நான் இன்னும் புத்தகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் நண்பர் பா.ரா சேலத்தில் விற்பனையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார். குவாண்டம் கணினிகள் : அறிவியல் கட்டுரைகள் தமிழினி பதிப்பகம், 144 பக்கங்கள், விலை ரு.55 (இந்தியாவில்) கட்டுரைகள் கிட்டத்தட்ட் மூன்றாண்டு கால இடைவெளியில் எழுதப்பட்டவை. இன்றைக்கு அறிவியல்/தொழில்நுட்பம் இவற்றில் மிக முக்கியமானவை என்று கருதப்படுபவனவற்றுள் [...]

    Read more →

    பல்துறை விவாத மன்றம்

    by  • April 5, 2004 • பொது • 0 Comments

    துறை சார்ந்த / ஒரு துறையில் ஆர்வமுள்ளவர்கள் ஒன்றிணைந்து துறைகளுக்கென வலைக்குறிப்புகளை உண்டாக்குவது பற்றிய விவாதம் இந்த வார வலைப்பூ ஆசிரியர் சுந்தரவடிவேல் முன்னிருத்த இப்பொழுது சூடு பிடித்துள்ளது. இது பற்றிய என் கருத்து, ஒரு பின்னூட்டத்தின் அளவிலும் பார்க்க நீண்டுவிடும் என்பதாலும் இதில் நான் சில அடிப்படைக் கருத்துக்களையும் மாதிரிகளையும் முன்வைக்கவிருப்பதாலும், இதைத் தனிக்குறிப்பாக எழுதுகிறேன்.

    Read more →

    சன்னலும் சூரியனும் சமரசம

    by  • April 3, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    வைரமுத்துத்தனமான இந்தத் தலைப்பின் அடிப்படைச் செய்தி என்னைச் சற்றே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நேற்றைய ஒப்பந்தப்படி சன் மைக்ரோஸிஸ்டமும் – மைக்ரோஸாப்டும் தங்களுக்குள்ளே இருக்கும் பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். மைக்ரோஸாப்ட் 2 பில்லியன் டாலர்கள் கொடுத்து சன்-னைச் சமாதானப்படுத்தியிருக்கிறது. இது வழக்கமான வர்த்தகச் சமாச்சாரமாக எனக்குத் தோன்றவில்லை. பல காரணங்கள் இருக்கின்றன.

    Read more →

    சோனியின் மின்புத்தகம்

    by  • April 2, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஆறு மாதங்களுக்கு முன்னால் மின்மசி (e-Ink) ஒன்றைப்பற்றிய வலைக்குறிப்பை எழுதியிருந்தேன். ஈ-இங்க் என்ற நிறுவனத்தின் கண்டுபிடிப்பான அதில் இருந்த சில தொழில்நுட்பச் சிக்கல்களையும் காட்டியிருந்தேன். அந்த வலைக்குறிப்பு மின்துளைபரவல் (electrophoresis) என்னும் நுட்பத்தின் அடிப்படையிலான மின்மசி மூலம் அந்தச் சிக்கல்கள் எப்படிச் சமாளிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியது. நேற்றைக்கு (நிச்சயம் இது ஏப்பிரல் 1 சமாச்சாரம் இல்லை), சோனி நிறுவனம் இந்தத் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான புதிய மின்புத்தகக் கருவியை ஜப்பானில் சந்தைப்படுத்தத் தயாராகியிருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இதன் [...]

    Read more →