• Archive for April, 2004

    பார்த்தவரை போதாது

    by  • April 29, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    விழித்திரையில் லேசர் அலகி மூலம் கூடுதல் படங்கள் மைக்ரோவிஷன் என்ற நிறுவனம் நாம் கண்ணால் காணும் காட்சிகளுடன் கூடவே, மேலதிக விபரங்களையும் விழித்திரையில் நேரடியாகச் சேர்க்கும் கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. உதாரணமாக, நாம் ஒரு காரின் இயந்திரத்தைப் பார்க்கிறோம். அதிலிருக்கும் பாகங்களின் வடிவமைப்பு மற்றும் பெயர் அத்துடன் கூடவே காட்டப்பட்டால் எப்படியிருக்கும். இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரியவேண்டுமா, மருத்துவர் ஒருவரின் குடலைத் திறந்து சிகிச்சை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, குடலில் இருக்கும் புற்றுநோயை நீக்கும் அறுவை. [...]

    Read more →

    தலாய் லாமாவிற்கு முனைவர் 

    by  • April 28, 2004 • கனடா • 0 Comments

    நான் வேலை செய்யும் டொராண்டோ பல்கலைக்கழகம் நேற்று நடந்த விழாவில் தலாய் லாமாவிற்கு சட்டத்துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவருக்கு பட்டம் சூட்டுபவர் எங்கள் வேதியியல் பேராசிரியர் ஜான் பொலானி இவர் 1986ஆம் வருடத்தின் நோபல் வேதியியல் பரிசைப் பெற்றவர். பேராசிரியர் பொலானி அறிவியலில் மாத்திரமல்லாது அமைதிப்பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய நோபல் பரிசுத் தொகையைக் கொண்டு பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர். திரு தலாய் லாமாவிற்குப் பட்டம் சூட்ட எல்லா வழிகளிலும் தகுதியானவர். டொராண்டோ [...]

    Read more →

    நிறவெறி

    by  • April 27, 2004 • கனடா • 0 Comments

    உங்களில் எத்தனைபேர் நிறவெறியை நேரடியாக அனுபவத்திருக்கிறீர்கள். எனக்கு அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது. எத்தனையோ முறை வேலையிடத்தில் இது கண்ணுக்குத் தெரியாமல் வியாபித்திருக்கும். உதாரணமாக, நீங்கள் எதையோ சாதித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு உங்கள் அதிகாரி முன்னால் போய் நிற்பீர்கள், அவர் “ம்” என்று ஒற்றை எழுத்தில் பதில் சொல்வார். மறுநாள் உங்கள் சக ஊழியர் ஒன்றுமில்லாத விஷயத்திற்குக் காலரைத் தூக்கிக் கொள்ள உடனே அதே அதிகாரி, அவரை தன் தோள்மீது உயர்த்தி வைத்து, அதை இன்னும் பாராட்டிக் கொண்டாடுவார். சிலசமயம் [...]

    Read more →

    கடிதம்

    by  • April 25, 2004 • இலக்கியம் • 0 Comments

    கிடைக்கப் பெற்றேன் அத்தனை வெளுப்பில் காகிதம் எங்கே வாங்குகிறாய்? அச்சு நேர்த்திதான்; வெட்டியட்டிய வண்ணப்படமும் அழகாகத்தான் இருக்கிறது எழுத்துப் பிழை எதுவுமில்லை கணினியில் புதிதாக இலக்கணத் திருத்தி இணைத்திருக்கிறாயா? கசியும் அந்தப் பேனாவை இன்னும் வைத்திருக்கிறாயா?

    Read more →

    அப்பன் பெயர் தெரியாத குழந

    by  • April 23, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    வழக்கமாக சாக்கடை ஓரத்தில் கண்டெடுக்கப்படும், சேரியில் வளரும், ஐந்து வயதில் பீடி பிடிக்கும்,… மொத்தத்தில் புதிய பாதை பார்த்திபனைப் போல இருக்கும். இதுதான் காலம் காலமாக நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் இந்த சமூகத்தில் அப்பன் பெயர் தெரியவேண்டியது மிகவும் அவசியம். இனி… இரண்டு அம்மாக்கள் சேர்ந்து ஒரு குழந்தையை உருவாக்க முடியும். ஆண்களே தேவையில்லை இந்த உலகில்? ஆச்சரியமாக இருக்கிறதா? சமீபத்தில் இது எலிகளில் சாத்தியமாகியிருக்கிறது. கவனிக்கவும். இதற்குத் தேவை இரண்டு அம்மாக்கள். எனவே இது நகலாக்கம் [...]

    Read more →

    அது

    by  • April 18, 2004 • இலக்கியம் • 0 Comments

    காணக்கிடைக்காதது கையிலடங்கா அது நிறமின்றி உருவின்றி ஒலியின்றி கரங்களும் கால்களுமின்றி எங்கனும் பரவி என்றும் நிலைபெற்று எள்ளவிற்க் குறையாகி எல்லாமுந் தானாகி பகுக்கவியலாது உணரக் கிடைக்கும் நூலம்படையிழுத்துப் பரவி வெளி நிறைத்து மையமமருஞ் சிலந்தியாய் மண்ணில் துளிர்த்தெழும் தாவரமாய் மனிதனில் முளைக்கும் ரோமமுந் தானாய் அழிவெதனுக்குண்டு? எல்லாமும் ஆதியும் அந்தமும் அற்புதமும் அதுவே யாம் முண்டகோபநிஷத் (அத்:1, பகுதி:1, செய்யுள் 6,7)

    Read more →

    This site’s blacklist

    by  • April 16, 2004 • பொது • 0 Comments

    Here is a copy of this site’s blacklist. This is autogenerated by a perl script that controls my blog engines comments and will be updated everytime I add entires to that. I will be making this available permanently in the right column here. The idea is to motivate people to implement similar spam control (those [...]

    Read more →

    புத்தக வெளியீடு

    by  • April 14, 2004 • இலக்கியம் • 0 Comments

    காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது டொராண்டோ நகர் தமிழ் எழுத்தாளர்களின் ஐந்து புத்தகங்கள் வெளியீடும், விமர்சனங்களும். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், அறிவியல் கட்டுரைகள் என ஐந்து வேறு புத்தகங்கள் ஒரே நிகழ்வில் வெளியிடப்பட இருக்கின்றன.

    Read more →

    சில விளக்கங்கள்

    by  • April 13, 2004 • பொது • 0 Comments

    செய்யும் தொழிலும் – விருப்பங்களும் குறித்த சில விளக்கங்கள் என்னுடைய இடுகையில் நான் வரம்பு மீறியிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. நேற்றைக்கு சுந்தர் அவருடைய வலைக்குறிப்பில் “இந்த வார ஸ்பெஷல் – கும்மோணம் கொத்துபரோட்டா” என்ற தலைப்பில் நான் அவருடைய தனிக்கருத்தை விமர்சித்ததால் சேதாரப்பட்டிருப்பதாக விளக்கியிருக்கிறார். என்னுடைய இடுகையை மீளவாசித்தால் குழப்பம் எனக்குப் பிடிபடுகிறது.

    Read more →

    சங்கம்

    by  • April 13, 2004 • பொது • 0 Comments

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழில வலைக்குறிப்புகள் (blogs, weblogs) பிரபலமடைந்து வருகின்றன. கிட்டத்தட்ட இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட வலைக்குறிப்புகள் இப்பொழுது வழமையாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சில வலைக்குறிப்புகளில் தினம் பலதடவைகள் எழுதப்படுகின்றன. வலைக்குறிப்புகளின் பிரபலம் அதை ஆக்கபூர்வமான முறைகளில் பயன்படுத்துவதைக் குறித்த விவாதங்களை பல்வேறு தளங்களில் தோற்றுவித்திருக்கின்றது. மதுரைத் திட்டம், முதுசொம் போன்ற தன்னார்வத் திட்டங்களுக்கு வலைக்குறிப்புகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

    Read more →