• Archive for February, 2004

    மூன்றாவது வலை – 4

    by  • February 29, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    (இந்தத் தொடரில் இன்னும் ஒன்றிரண்டு கட்டுரைகள் கழித்து பின்தொடர்தல் பற்றி எழுத வேண்டும். இந்த சமயத்தில் பத்ரி அவருடைய வலையில் பின்தொடரும் வசதியை உண்டாக்கியிருக்கிறார். உதாரணத்துக்குப் பயன்படுத்த சரியான வாய்ப்பு!) இந்தப் பகுதியில் ஆர்எஸ்எஸ் செய்தியோடை எப்படி தொழிற்படுகிறது என்று பார்க்கலாம். என்னுடைய வலைக்குறிப்பில் Syndicate this site (XML) என்று ஒரு இணைப்பு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். என்னுடைய வலையில் நான் குறித்தவுடன், என்னுடைய நிர்வாக நிரலி, மூவபிள்டைப் என்னுடைய வலைக்குறிப்பை இற்றைப்படுத்தும் அதே நேரத்தில் வேறு [...]

    Read more →

    ஜாவா-வைத் திறத்தல்

    by  • February 28, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சன் மைக்ரோஸிஸ்டத்தின் ஜாவா திறமூலம் ஆக்கப்படுமா? தற்சமயம் கணினி உலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் கேள்விகளில் இதுவும் ஒன்று. பல மாதங்களாகவே இது அவ்வப்பொழுது தலைகாட்டிவிட்டு அமிழ்ந்து போகும் கேள்விதான். என்றாலும் இப்பொழுது இந்தக் கேள்வி மிகவும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. வழக்கம்போல் திறமூல போதகர் எரிக் ரேமண்ட்-தான் இந்தக் கேள்வியை எழுப்பினார். சில நாட்களுக்கு முன்னால் அவருடைய திறமூலப் பக்கங்களில் “ஜாவாவைத் திறந்துவிடுங்கள்” என்று தலைப்பிட்டு சன் மைக்ரோஸிஸ்டத்திற்கு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டார். இது வழக்கமாக திறமூலப் [...]

    Read more →

    Free Software and Open Source

    by  • February 27, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சமீபகாலத்தில் பலரும் பரிவூற்று, திறவூற்று போன்ற சொற்களை Free Software, Open Source இவற்றைக்குறிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். ரிச்சர்ட் ஸ்டால்மான் (Free Software), மற்றும் எரிக் ரேமண்ட் (Eric Reymond) இவர்களின் வரையறைகளைப்படித்தவர்களுக்கு இந்த மொழியாக்கங்கள் சரியில்லை என்பது எளிதில் தெரியும். தளையறு மென்கலன், திறந்த ஆணைமூலம் இரண்டு வார்த்தைகளும் என்னால் உருவாக்கப்பட்டவை. நான் கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கட்டுரைகள், தொழில்நுட்ப விளக்கங்கள், பயனுதவிக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் இவற்றைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன். பரிவூற்று, திறவூற்று [...]

    Read more →

    பிபிஸி – நேரடிவலை

    by  • February 26, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    தொழில்நுட்பத்தை எப்படித் தடுக்கக்கூடாது என்பதற்கு அமெரிக்காவில் இசைவணிகர்கள் மற்றும் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் மிகச்சிறந்த உதாரணங்களாக இருந்துவருகின்றன. உதாரணங்களாக, எம்பி3 வடிவ இசைக்கோப்புகளுக்கு அமெரிக்க இசைவணிகர்கள் எப்படியெல்லாம் தடைபோட முயற்சித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல டிவிடியில் சங்கேதங்களைத் தகர்த்த ஒருவர் அதைப்பற்றி சொல்லப்போக அவர்மீது வழக்கு தொடரப்பட்டு அவர் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டார் என்பதும் வரலாறு (தரக்குறைவான சங்கேதங்களைத் தயாரித்துவிட்டு, அதை யாரவது தகர்த்தால் அவர் குற்றவாளி என்பதுபோல நடத்தும் பம்மாத்துகள் தொழில்நுட்பத்தை எந்த அளவிலும் [...]

    Read more →

    என்னுடைய பிபிஸி பேட்டி

    by  • February 24, 2004 • பொது • 0 Comments

    இன்று காலை நான் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிபிசி தமிழோசையின் அறிவியல் பகுதிக்காக லினக்ஸ், திறந்த மூலநிரல்கள் பற்றியும், நம் சமூகத்திற்கு இதன் அவசியங்களைப் பற்றியும் ஒரு பேட்டி அளித்தேன். முடிவில் தமிழில் லினக்ஸ் வளர்ச்சி குறித்தும் சில வார்த்தைகள் சொல்லமுடிந்தது. குறுகிய அவகாசத்தில் எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் பேசியது. ஓரளவுக்குச் சரியாகவே வந்திருக்கிறது என்று நம்புகிறேன். இதன் ஒலி வடிவத்தை என்னுடைய வழங்கியிலிருந்து எம்பி3 வடிவில் கேட்கமுடியும். பிபிசியின் முழு நிகழ்ச்சிகளையும் அவர்கள் தளத்திலிருந்து நேரடியாகக் கேட்கலாம். [...]

    Read more →

    மூன்றாவது வலை – 3

    by  • February 22, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இணையத்தின் ஆரம்பகாலங்களில் வலைத்தளங்கள் தனிப்பட்ட தங்கள் இருப்புக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளித்து வந்தன. இந்த இடத்தின் இணையம் என்ற சொல்லையும் வரையறுப்பது நல்லது. முதன் முதலில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும், இராணுவ ஆராய்ச்சிக்கூடங்களும் தங்கள் கணினியை ஒன்றுடன் ஒன்று பிணைக்கத்தொடங்கின. அப்படி இணைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் Internet என்று அழைக்கப்பட்டது. தமிழில் இதற்குச் சரியான பெயர் சூட்டப்படவில்லை. 1998-99 வாக்கில் இவற்றைபற்றி எழுதும்பொழுது இன்டர்நெட் என்ற சொல்லுக்குத் தமிழினையாக “ஊடுவலை” என்ற சொல்லை முன் வைத்தேன். ஆனால் [...]

    Read more →

    மூன்றாவது வலை – 2

    by  • February 21, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய மூன்றாவது வலை-1 குறித்து இந்த வார வலைப்பூவில் ஐகரஸ் பிரகாஷ் தன்னுடைய கருத்தை எழுதியிருக்கிறார். பின்தொடர்தல் (trackback) போன்ற வலைக்குறிப்பு சாத்தியங்களை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவே, அங்கே எழுதியதற்கு இங்கே கருத்து எழுத வேண்டியிருக்கிறது. பிரகாஷ் சொல்லியது; இது போன்ற ஒரு சக்தி மிகுந்த ஊடகத்தை, ” எண்ணங்களைப் பதிவு ” செய்வது என்ற ஒரு குறுகிய நோக்கத்தில் கட்டிப் போடுதல் தகுமா? எண்ணங்களைப் பதிவு செய்தல் என்பது தவறான ஒன்றல்ல. ஆனால், [...]

    Read more →

    கன்னட வீரசைவ வசனங்கள் – 2

    by  • February 21, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    அக்கமஹாதேவி திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மறுத்து நிற்கும் தன்னைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் அக்கமஹாதேவி இப்படிச் சொலிகிறாள்; மலடி தாய்மைய அறிவாளோ? வளர்ப்புத்தாய் அன்பை அறிவாளோ? வலியின் கொடுமையை வலியற்றவன் அறிவானோ? சென்னமல்லிஹார்ச்சுனன் என்னை ஆட்கொண்டு நடம்புரிகிறான் என்பதை நீங்கள் எப்படி உணர்வீர்கள் தாய்மார்களே? (மொழியாக்கம்: பாவண்ணன்)

    Read more →

    பிரபஞ்ச விளையாட்டு

    by  • February 21, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஒரு பெரிய பார்ட்டி அதுலேந்து ஒரு சின்ன பார்ட்டி தனியா கழட்டிக்கிட்டுப் போவுது. அப்புறமா பெரிய பார்ட்டி அதுக்கு இருக்குற பலத்த வச்சு சின்னப்பார்ட்டிய இழுக்குது. சின்ன பார்ட்டி பெரிய பார்ட்டிக்கிட்ட வர்ற சமயத்துல அது சுக்கு நூறா செதறிப்போவுது. அதுல கொஞ்சத்த பெருசு தின்னு ஏப்பம் உடுது; செரிக்காமப் போனதெல்லாம் துப்புது. கொஞ்ச நேரத்துல பெரிய பார்ட்டி சின்ன பார்ட்டி எல்லாம் ஒன்னா மாறிப்பூடுது. கிட்டத்தட்ட அடுத்து இந்தியாவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பார்ட்டி [...]

    Read more →

    கன்னட வீரசைவ வசனங்கள் -1

    by  • February 18, 2004 • இலக்கியம் • 0 Comments

    பெங்களூரில் படிக்கும் காலத்தில் கன்னட நண்பர்களின் உதவியுடன் வீரசைவ வசனங்களுக்கு அறிமுகம் கிடைத்தது. (குறிப்பாக சேஷாத்ரி, நான் இளையராஜாவைத் சிலாகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் ஜி.கே வெங்கடேஷை சிலாகித்துக் கொண்டிருந்தான், இது எங்களிடையே பலத்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அவன் மாஸ்திக்கும், அரவிந்த் மாளஹத்திக்கும் அறிமுகம் தரத் தயாராக இருந்தபொழுது எனக்கு சமகால கன்னட இலக்கியத்தின் வீச்சு பிடிபடாமல் இருந்திருக்கிறது. இப்பொழுது அவன் விட்டுப்போன ராஜாவையும், நான் விலகிப்போன மாஸ்தியையும் பற்றி புலம்பிக்கொண்டிருக்கிறோம்). பழைய நினைவுகளிலிருந்து கிளம்பும் தகவல்களுடன், [...]

    Read more →