Archive for January, 2004

Tamil Linux – More Questions/Answers -3

டைனோவுக்கும் எனக்கும் ராயரில் நடந்த அடுத்த பரிமாற்றம்.
டைனோபாயின் கடிதத்தை இந்தச் சுட்டியில் காணலாம்: http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/5553


Tamil Linux – More Questions/Answers – 2

டைனோவுடன் தொடர்ந்த விவாதத்தின் அடுத்த பகுதி,
திரு டைனோவின் சம்பந்தமான மடலை ராயர் காபி கிளப்பில் காணலாம்;
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/5524


Tamil Linux – More questions, more answer

தமிழ் லினக்ஸ் தொடர்பாக நான் எழுதியிருந்தவைகளைப் பற்றி திரு. டைனோ என்பவர் ராயர் காபி கிளப்பில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அந்தக் கேள்விகளும் என் விளக்கங்களும்.
Here is the reference for Dyno’s posting :
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/5500


சுஜாதாவும் தமிழ் லினக்ஸ்-

தங்கள் à®´-கணினி திட்டத்தைப்பற்றி சுஜாதா மீண்டும் ஆனந்தவிகடனில் பறைசாற்றியிருக்கிறார்.

அதில் ஒன்று தன்னிச்சையாகத் துவங்கிய ழ கணினித் திட்டம். இதன் கீழ் லினக்ஸ் சார்ந்த மென்பொருளான கே.டி.இ. என்னும் மேல்மேஜை கணிப்பொறி சூழலை, ஓப்பன் சோர்ஸ் இலவச மென்பொருளாகக் கொடுக்கும் திட்டம் நிறைவு பெற்றது.


இன்றைய வைரஸ் – மை_டூம்

இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் என்னுடைய நிறுவனத்தின் பலகணினிகள் சமீப நாட்களில் நிகழ்ந்தவற்றுள்ளே மிகவும் மோசமான வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன. தெரிந்தவர்களிடமிருந்தும், தெரியாதவர்களிடமிருந்தும் மின்னஞ்சல் மழையாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. முகந்தெரியாவதர்களிடமிருந்து மின்னஞ்சல் வரும்பொழுது சும்மா வருவதில்லை; கூடவே பொதியாக இணைப்புகளையும் சுமந்து வருகிறது. zip, exe, pif போன்ற பல்வேறு இணைப்புகளுடன் வரும் இந்த வைரஸ் மை_டூம்,(MyDoom) நோவார்க், (Novark) என்று பல பெயர்களையும் கொண்டது. இது எப்படிப் பரவுகிறது, என்ன செய்கிறது போன்ற விபரங்கள்; [...]


சர் பில் கேட்ஸ்

சம்பந்தமில்லாத இன்னொரு விருதுச் செய்தி; பில் கேட்ஸ்க்கு “நைட் ஆ·à®ªà¯ தி பிரிட்டிஷ் எம்பயர்” என்று சொல்லப்படும் உயரிய விருதை பிரிட்டிஷ் அரசியார் வழங்கியிருக்கிறார். பிரிட்டனின் வர்த்தகத்தை முன்னேற்றியதற்காக இந்த விருது கேட்ஸ்க்கு வழங்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னால் ரோலிங் ஸ்டோன்ஸ் ராக் குழுவின் மிக் ஜாகருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. சமீப காலத்தில் ராணியார் நைட் விருதுகளைத் தாராளமாக அள்ளி வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட போப் [...]


பா.ராகவனுக்கு பாரதீய பாஷா &#

நண்பர் பா.ராவுக்கு பாரதீய பாஷா பரிஷத் விருது கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் உள்ளிட்ட சில முக்கிய எழுத்தாளர்களின் குழுவில் நண்பர் பா.ராவும் இடம்பெறுவது சந்தோஷமளிக்கிறது. ஒரு விதத்தில் இந்த விருதைப்பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு முன்னதாக நான் அறிந்துகொண்டிருக்கிறேன், ஆனால் இதை வலையில் பதிவு செய்வதில் பத்ரி முந்திக்கொண்டுவிட்டார் (செய்தி கிடைத்த நேரத்தில் பத்ரி அவருடன் இருந்திருக்கிறார். நானோ உலக உருண்டையின் மறுபக்கத்தில்).
பாராட்டுக்கள்.


தமிழில் RSS செய்தியோடை

இந்த சுஜாதா-தமிழ்லினக்ஸ் விவகாரம் நிறையவே என்னுடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சுகின்றது. இன்னும் அதில் எழுத வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. என்றாலும், அயர்வுதான் மிஞ்சுகிறது. கொஞ்சம் ஒத்திப் போட்டுவிட்டுப் பிற விஷயங்களைக் கவனிக்கலாம் என்று எண்ணம். நாளை காலை உள்ளூர் தொலைக்காட்சியில் என்னுடைய வழக்கமான அறிவியல் நிகழ்ச்சிக்காக செவ்வாய் கிரகத்தைப் பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்புகளை ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அளவுக்கு அதிகமாக வேலை குவிந்தால் என்ன ஆகும்?
பல நாட்களாக நண்பர் தங்கமணியின் [...]


புத்திசாலிகளுக்கான கடிகĬ

இங்கே இருப்பது கடிகாரம், இதில் மணி 10:48:36 ஆகிறது.
எப்படி இதைப் படிப்பது என்று சொல்லுங்களேன்.


மைக்ரோஸாப்ட் – விடலை விளைய&#

கேட்பதற்குச் சிரிப்பை வரவழைக்கக் கூடும். ஆனால் இது பகடி இல்லை; நடந்திருக்கிறது. வான்கூவர், கனடாவில் வசிக்கும் மைக் ரோ (Mike Rowe) என்னும் பதினேழு வயதுச் சிறுவனை உலகின் மாபெரும் நிறுவனமான மைக்ரோஸாப்ட் நீதிமன்றத்திற்கு அழைத்திருக்கிறது.
காரணம். அவனுடைய பெயரில் அவனாகவே வடிவமைத்துக் கொண்ட (MikeRoweSoft.com) என்னும் இணைய தளம்.
microsoft.com என்னும் தங்களுடைய முதன்மை இணைய தளத்தின் உச்சரிப்பையட்டி இது அமைந்திருப்பதாகவும் இதனால் தங்களுடைய வாடிக்கையாளர்கள் குழம்பிப் போகக்கூடும் என்றும் மைக்ரோஸாப்டின் கனேடிய வழக்கறிஞர்கள் சிறுவனுக்கு அனுப்பிய [...]