• மறு வருகை

    by  • October 17, 2004 • பொது • 3 Comments

    கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு…

    யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நான் காணமல் போய் இரண்டு மாதங்கள் ஆகப் போகின்றன. இடையில் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன (இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னால்…). மாற்றமில்லாமல் நடந்துகொண்டிருந்த ஒரெ விஷயம் – எந்தக் கேள்வியைக் கேட்டாலும் புஷ்-கெர்ரி இருவரும் தங்களுடைய வழமையான (கேள்விக்குச் சம்மந்தமில்லாத) பதில்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததுதான்.

    இப்பொழுது மீண்டு(ம்) வந்திருக்கிறேன். நான் காணமல் போனதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் “என்னய்யா, ஆளக் காணும்” என்று சிலர் கேட்டார்கள். வேறு சிலர் பொதுவிடங்களில் நான் காணமல்போனதை பற்றி பேசிக் கொண்டார்கள். இவர்களுடைய அக்கறைகளுக்கு நான் என்றும் நன்றியுள்ளவன்.

    இனி (முடிந்தவரை) தொடர்ந்து எழுத உத்தேசம்.

    பி.கு: நேற்று நள்ளிரவில் வலையிலிட்ட மேற்படி குறிப்பு என்னுடைய தரவுத்தளம் மாற்றியமைக்கப்பட்டதில் காணமல் போய்விட்டது. இப்பொழுது நிரலியை மீட்டுருவாக்கி திரும்பத் தொடர்கிறேன். (அங்கே கருத்து எழுதிய காசிக்கும், அருளுக்கும் நன்றிகள். உங்கள் கருத்துகள் தரவில் இல்லை – மன்னிக்கவும்).

    3 Responses to மறு வருகை

    1. October 18, 2004 at 12:00 am

      வெங்கட்: Please remove "align=justify" – it kills the presentation in Firefox.

    2. காசி
      October 18, 2004 at 2:12 pm

      வெங்கட்,

      செய்தியோடையில் சிக்கல்: இங்கே பாருங்க:
      http://feeds.archive.org/validator/check?url=http://www.domesticatedonion.net/blog/xml-rss2.php…

      இதுக்கு ஒரு தீர்வு இங்கே பாருங்க:
      http://www.mugunth.tamilblogs.com/?itemid=29…

      எனக்கு உங்க புது மின்னஞ்சல் முகவரி வேணும்.

      kasi at thamizmanam.com க்கு அனுப்பமுடியுமா?

    3. October 19, 2004 at 9:42 am

      பத்ரி, வழக்கம் போல பழைய theme ஒன்றை எடுத்து அதிலிருந்து சமைத்ததுதான் இந்த autumn theme. (நன்றாக இருக்கிறதா?). எனவே, ஒவ்வொரு பிரச்சனையாகக் கவனிக்கிறேன். முதலில் நீங்கள் சொன்னதைச் சரி செய்திருக்கிறேன். ஃபயர்ஃபாக்ஸில் இப்பொழுது சரியாக வருகிறது. நன்றி. (நியூக்ளியஸ் எனக்குப் புதிது).

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *