• நாஸாவின் அதிவேக ஸ்க்ராம்

    by  • March 28, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    nasa_scramjet.png நேற்றைய சோதனையோட்டத்தில் நாஸாவின் புதிய விமானம் X43-A மாக் 7 வேகத்தைத் தொட்டிருக்கிறது . இதுதான் இதுவரை பறந்த விமானங்களிலேயே அதிக வேகம். ஒலியின் வேகத்தை ஒரு மாக் என்று சொல்வார்கள். இது நிமிடத்திற்கு 340 மீட்டர். (340 m/sec). மாக்-7 என்றால் ஒலியின் வேகத்தைப்போல ஏழு மடங்கு என்று பொருள்படும். இந்த வேகத்தில் ஒரு மணிக்குக் கிட்டத்தட்ட 8000 கிலோமீட்டர்கள் பயணிக்கமுடியும். அதாவது புது தில்லியிலிருந்து நியூயார் நகருக்கு முக்கால் மணிநேரம்தான் பயணம்.

    இந்த விமானம் ஸ்க்ராம்ஜெட் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்தது. இதைப்பற்றிய என்னுடைய தொழில்நுட்ப விளக்கத்தைப் பழைய வலைக்குறிப்பில் தந்திருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிக்கல்க்-கோபால்ட் உலோகக் கலவை அடிப்படையிலான ஸ்க்ராம்ஜெட் விமானத்தை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்தது. மாக்-5 வேகத்தில் பறந்த அந்த இந்தியவிமானம் உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பம் ஒரு சில நாடுகளில் மாத்திரம்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவகையில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா நாடுகள் ஸ்க்ராம்ஜெட் சோதனைகளை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கின்றன. இவற்றில் நேற்று பறந்த நாஸாவின் X43-A தான் அதி உன்னதமானது.

    0 Responses to நாஸாவின் அதிவேக ஸ்க்ராம்

    1. செல்வ&#299
      March 29, 2004 at 6:14 pm

      >>இது ***நிமிடத்திற்கு*** 340 மீட்டர். (340 m/sec).

      வினாடிக்கு என்று இருந்திருக்க வேண்டும்.

    2. venkat
      April 3, 2004 at 8:31 pm

      செல்வராஜ் – பிழையைச் சுட்டியதற்கு நன்றி. கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *