• தோஷிபாவின் சிறிய கடினவட்

    by  • January 8, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    toshiba_HDD.pngஇன்றைய செய்தி வெளியீட்டில் தோஷிபா 0.85 அங்குல அளவிற்கு கடினவட்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

    எனக்குப் பல நாட்களுக்கு முன்னரே இதன் வருகை ஒரளவிற்குத் தெரிந்திருந்தாலும், இவ்வளவு சீக்கிரமாக இது வந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டிலிருந்து நான்கு கிகா பைட்வரை திறனுள்ள இந்த கடினவட்டுக்கள் பல சாதனங்களின் அமைப்பையும், பயனையும் மாற்றியமைக்கும். எல்லாவற்றிலும் மிக முக்கியமாக கையளவு எம்.பி3 இயக்கிகள், செல்பேசிகள், கைக்கணினிகள். அதிக சேமிப்புத் திறன் கிடைப்பதால் இவை எல்லாமாக ஒன்று சேரும் ஒருங்கு கருவிகள் (Convergent devices) தயாரிப்பும் வளரத் தொடங்கும். மாபெரும் காந்தத்தடை (Giant Magnetoresistance) என்னும் இயற்பியலின் அடிப்படையிலானவை இதுபோன்ற சிறிய வட்டுக்கள். சமீப காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி கண்டிருக்கும் ஒரு துறை கடின வட்டுக்கள்.

    ஆப்பிளின் ஐபாட் இப்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கிறது. என்னுடைய கணிப்பில் ஐபாட் ஒரு மாபெரும் கொள்ளைத் திட்டம். அதே போலத் திறனுள்ளதை அதில் பாதி விலைக்கும் குறைவாக விற்க முடியும். உதாரணமாக, இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் என்னுடைய சோனி வாயோ மடிக்கணினியில் இருக்கும் 30 கிகாபைட் வட்டு போதவில்லை என்று புதிதாக (தோஷிபா) 60 கி.பை வட்டை வாங்கி மாற்றினேன். அப்பொழுது பழைய 30 கி.பை வட்டை என்ன செய்வது என்று நினைத்தபோது, USB Harddisk enclosure என்று ஒரு அமைப்பு $35 (கனேடியன்) டாலருக்கு வாங்கி அதில் பொருத்திவிட்டேன். இப்பொழுது சட்டைப் பையில் போட்டுக் கொண்டு செல்லத் தக்க ஒரு புறக் கடின வட்டு என்னிடமிருகிறது. ஆப்பிளின் ஐ-பாட் கருவியும் இதே போலத்தான் ஒரு சிறிய கடினவட்டும், கூடவே எம்பி3 இயக்கத் தேவையான அமைப்புகளும். 40 கி.பை (மடிக்கணினி) வட்டின் விலை $260, ஆனால் 40 கி.பை ஐ.பாடின் விலை, $700 (கனேடியன்).

    இந்த அளவிற்கு ஆப்பிள் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கக் காரணம், ஜப்பானியர்கள் இதுவரை இந்தச் சாதனத்தில் முழு முயற்சியுடன் இறங்காததே. இப்பொழுது தோஷிபா விரைவில் கடின வட்டின் அடிப்படையிலான எம்பி3 இயக்கியைத் தயாரிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறது. விரைவில் மற்ற ஜப்பானிய நிறுவனங்களும் இறங்கும். அப்பொழுது ஆப்பிளின் அராஜகத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும்.

    0 Responses to தோஷிபாவின் சிறிய கடினவட்

    1. prabhu
      January 9, 2004 at 7:09 am

      அட…இதையெல்லாம் படிக்கையில் எதையும் வாங்கவே துணிவு வரவில்லை. விசிடியிலிருந்து டிவிடி பிளேயருக்கு போகலாம் என்று நினைத்தால்…ஐந்து மடங்கு சேமிக்கும் திறன் கொண்ட டிவிடிக்கள் வருகிறாதாம். ஆனால், இந்த மடிக்கணணிகளில் விலையை குறைக்கக் கூடாதா?

    2. காசி
      January 9, 2004 at 10:57 pm

      மடிக்கணினி இந்தியாவுக்குள் வருவது சம்பந்தமாய் சிஅல சலுகைகள் அறிவிச்சிருக்காங்களே, அதனால் விலை குறையுமோ என்னவோ!

    3. முத்த&#300
      January 14, 2004 at 7:47 pm

      உலகத்துல இன்னும் என்னதான் நடக்குமுன்னு தெரியலை … எங்கயோ போயிட்டு இருக்குது ..

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *