தலாய் லாமாவிற்கு முனைவர்
by வெங்கட் • April 28, 2004 • கனடா • 0 Comments
நான் வேலை செய்யும் டொராண்டோ பல்கலைக்கழகம் நேற்று நடந்த விழாவில் தலாய் லாமாவிற்கு சட்டத்துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
அவருக்கு பட்டம் சூட்டுபவர் எங்கள் வேதியியல் பேராசிரியர் ஜான் பொலானி இவர் 1986ஆம் வருடத்தின் நோபல் வேதியியல் பரிசைப் பெற்றவர். பேராசிரியர் பொலானி அறிவியலில் மாத்திரமல்லாது அமைதிப்பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய நோபல் பரிசுத் தொகையைக் கொண்டு பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர். திரு தலாய் லாமாவிற்குப் பட்டம் சூட்ட எல்லா வழிகளிலும் தகுதியானவர்.
டொராண்டோ பல்கலைக் கழக ஊழியன் என்றமுறையில் எனக்கு பெரும் மனநிறைவைத் தருகின்ற செய்தி இது.