• ட்சூனாமி – கனடாவிலிருந்து உதவி அதிகரிக்கிறது

    by  • December 30, 2004 • பொது • 3 Comments

    ட்சூனாமியின் அழிவு ஏற்பட்டவுடன் கனடா ஒரு மில்லியன் டாலர் அறிவித்தது. இதற்கு இங்கிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தன. அந்த ஒரு மில்லியன் அனுப்பப்படும்பொழுது நான்கு மில்லியன் ஆனது. இந்த அழிவு நேர்ந்த சமயத்தில் பிரதமர் பால் மார்ட்டின் உட்பட பல அரசுத்துறைத் தலைவர்கள் கிறிஸ்துமஸ்-பனிக்கால விடுமுறையில் இருந்தனர். நேற்று இவர்களில் பலர் திரும்பி வந்தவுடன் கனடாவின் உதவித்தொகை மொத்தம் நாற்பது மில்லியனாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

    சற்று நேரத்திற்கு முந்தைய தகவலின்படி கனடா உதவி தரும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. இதுவரை நாடுகளின் உதவி பின்வருமாறு:

    உலக வங்கி 250 மில்லியன்
    ஐக்கியக் குடியரசு 96 மில்லியன்
    ஐரோப்பிய ஒன்றியம் 44 மில்லியன்
    அமெரிக்கா 35 மில்லியன்
    கனடா 33 மில்லியன்
    ஜப்பான் 30 மில்லியன்
    ஆஸ்திரேலியா 27 மில்லியன்
    பிரான்ஸ் 20.4 மில்லியன்
    டென்மார்க் 15.6 மில்லியன்
    சௌதி அரேபியா 10 மில்லியன்

    நேற்று மதியம் வாக்கில் பல உள்ளூர் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கனடாவின் நான்கு மில்லியன் டாலர் உதவி கேவலமானது என்று பலரும் ஆத்திரத்துடன் கூறினார்கள். ஒருவர் சமீபத்தில் நடந்த உக்ரெய்ன் மறுதேர்தலைப் பார்வையிட கனடா செய்த செலவுடன் ஒப்பிட்டு இதைக் குறை கூறினார்கள் (நினைவில் கொள்ளவும் கனடாவில் நான்காவது பெரிய குடிவரவு இனம் உக்ரேனிய இனம். இவரக்ள் இங்கு அரசியல் ரீதியாக மிக மிக செல்வாக்குள்ளவர்கள்). மறுபுறத்தில் தமிழ் தன்னார்வலர்கள், அரசியல் தொடர்புள்ளவர்கள் போன்றவர்கள் நிலையை அரசிடம் எடுத்துச் சொல்லி முறையிட்டார்கள். தாமதமின்றி நிதியமைச்சர் உடனே இன்னும் 36 மில்லியன் (மொத்தம் 40 மில்லியன் டாலர்கள்). இன்று மதியம் எங்கள் உள்ளூர் முதலமைச்சர் டால்டன் மெ-கின்டி மாநில அரசின் சார்பில் ஒரு மில்லியன் அறிவித்தார். தொடர்ந்து அல்பர்ட்டா மாநிலம் இன்னொரு ஒரு மில்லியன் சேர்க்க இப்பொழுது கனடாவின் அரசுசார் உதவி 42 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. தேசிய உற்பத்தி விகிதம் ரீதியாகப் பிற நாடுகளுடன் ஒப்பிட பிரிட்டிஷ்க்கு அடுத்தபடி தாராளமாக கனேடிய அரசு உதவுகிறது.

    கவனிக்கவும்; இது அரசு ரீதியான உதவிதான். தனியார், தன்னார்வலர்கள் பிற நாடுகளில் நன்றாக ஆதரவளித்து வருகிறார்கள். உதாரணமாக பிரிட்டனில் தனியார் உதவி இன்னும் அதிகம். அமெரிக்கர்களும் தனி மனிதர்களாக நன்றாக உதவி வருகிறார்கள். தனியார் நிறுவனங்களில் முக்கிய பங்களிப்பாளர்கள் பின்வருமாறு;

    ஃபைஸர் (மருத்துவ நிறுவனம்) – 10 மில்லியன் (பணமாக)
    ஃபைஸர் (மருத்துவ நிறுவனம்) – 25 மில்லியன் (மருந்துப் பொருட்களாக)
    ஜே.பி மார்கன் சேஸ் (நிறுவனம்) – 3 மில்லியன்
    ஜே.பி. மார்கன் சேஸ் (ஊழியர்கள்) – 3 மில்லியன்
    ஜான்ஸன் – ஜான்ஸன் (மருத்துவம்) – 2 மில்லியன்
    வோடோஃபோன் (தொலைத்தொடர்பு) – 2 மில்லியன்
    பிரிட்டிஷ் கால்பந்தாட்ட லீக் அமைப்பு – 2 மில்லியன்
    ஐஎன்ஜி (வங்கிகள் குழுமம்) 1.5 மில்லியன்

    இங்கே கனடாவில் ட்சூனாமி உதவிக்குப் பணம் தரும் கனேடியர்களுக்கு வருமான வரிச் சலுகை அறிவிக்கச் சொல்லி அரசை வற்புறுத்தி வருகிறார்கள். இது கொஞ்சம் சிக்கலான விஷயம், ஆனால் அரசு துணிந்து இதை அறிவித்தால் இங்கு தனியார் மற்றும் நிறுவனம் சார் உதவிகள் பெருகும். பொதுவில் கனடாவில் பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு உதவி செய்யத் தயாராக இருப்பது வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் தெரிகிறது. பலரும் மனம் நெகிழ்ந்து பேசுகிறார்கள்.

    ஒரு முக்கிய விபரம் – கனடாவின் உதவில் கணிசமான பங்கு இலங்கையைச் சென்றடையும். சொல்லப்போனால் கனடாவின் மருந்து மற்றும் நீர் சுத்திகரிப்புப் பொருட்கள் தாங்கிய முதல் விமானமே இலங்கைக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது.

    3 Responses to ட்சூனாமி – கனடாவிலிருந்து உதவி அதிகரிக்கிறது

    1. ரோஸாவசந்த்.
      December 30, 2004 at 9:43 pm

      //ஒரு முக்கிய விபரம் – கனடாவின் உதவில் கணிசமான பங்கு இலங்கையைச் சென்றடையும். சொல்லப்போனால் கனடாவின் மருந்து மற்றும் நீர் சுத்திகரிப்புப் பொருட்கள் தாங்கிய முதல் விமானமே இலங்கைக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது. //
      ஆனால் இது தமிழ் பகுதிகளுக்கு போய் சேருவது பற்றிய நம்பிக்கையின் அளவு பூஜ்யத்தின் மிக அருகில்.

      //ங்கே கனடாவில் ட்சூனாமி உதவிக்குப் பணம் தரும் கனேடியர்களுக்கு வருமான வரிச் சலுகை அறிவிக்கச் சொல்லி அரசை வற்புறுத்தி வருகிறார்கள்.//

      இப்படி ஏதாவது நடந்து, தனியார் உதவிகள் பெருகினால், TRO போன்றவை மூலம் ஏதாவது நடக்ககூடும் என்று தோன்றுகிறது

    2. December 30, 2004 at 9:49 pm

      இல்லை, வஸந்த். இங்கே கனடாவில் இலங்கை என்றால் தமிழர்கள்தான். சிங்களவர்கள் ஜனத்தொகை 25:1 என்ற விகிதத்தில் இருக்கும். எனவே, அரசை லாபி செய்பவர்கள் எல்லாம் தமிழர்கள்தான். இங்கே சிங்கள்வர் என்ற பேச்சே கிடையாது. இலங்கை==தமிழ்.

      என்னுடைய நம்பிக்கை, கனடாவின் டாலரில் எழுபது செண்ட் தமிழ் பகுதிகளுக்குத்தான் போகும்

    3. ரோஸாவசந்த்
      January 1, 2005 at 5:36 am

      அன்புள்ள வெங்கட், இப்போதுதான் உங்கள் பதிலை பார்த்தேன். தமிழ் பகுதிகளுக்கு செல்லபடும் நிவாரண உதவிகளை, ராணுவத்தினரும், மற்றவர்களும், சிங்கள பகுதிக்கு திசைதிருப்புதல் என்று பல செய்திகளின் அட்ப்படையிலேயே சொன்னேன். கனடாவில் இலங்கை=தமிழ் என்று நீங்கள் சொல்வது உண்மையாய் இருக்கலாம். ஆனால் உதவி என்று வ்ரும்போது அது ஒரு அங்கீகரிக்கபட்ட அரசாங்கமான இலங்கை அரசாங்கத்திடம்தானே போய் சேரும். அவர்களின் பாகுபாடு குறித்தே குற்றசாட்டுகள்.

      எனினும், நான் நம்புவதும் கிடைக்கும்செய்திகளும், பொய்த்து, நீங்கள் சொல்வது நடந்தால், அதைவிட நல்லவிஷயம் வேறில்லை.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *