• சுஜாதாவும் தமிழ் லினக்ஸ்-

    by  • January 28, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    தங்கள் à®´-கணினி திட்டத்தைப்பற்றி சுஜாதா மீண்டும் ஆனந்தவிகடனில் பறைசாற்றியிருக்கிறார்.

    அதில் ஒன்று தன்னிச்சையாகத் துவங்கிய à®´ கணினித் திட்டம். இதன் கீழ் லினக்ஸ் சார்ந்த மென்பொருளான கே.டி.இ. என்னும் மேல்மேஜை கணிப்பொறி சூழலை, ஓப்பன் சோர்ஸ் இலவச மென்பொருளாகக் கொடுக்கும் திட்டம் நிறைவு பெற்றது. ஆர்வமுள்ள பல மாணவ மாணவியர் கலந்துகொண்டு ஓப்பன் ஆ·à®ªà®¿à®¸à¯, கே.டி.இ. என்னும் மேல்மேஜை சூழல்களைத் தமிழில் கொண்டுவந்து விட்டனர்!

    எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவியரும் லயோலா கல்லூரி மாணவர்களும் சில தனியார் வலர்களும் சேர்ந்து கூட்டு முயற்சி யாக, ஏறக்குறைய எண்பதாயிரம் சொற்றொடர்களைத் தமிழ்ப்படுத்தி வலையில் உலவவிட்டு உலகுக்கு அளித்து விட்டனர்.

    இன்று ஆங்கிலமே தெரியாத ஒருவர் கணிப்பொறியைத் துவக்கி, முழுவதும் தமிழிலேயே மின்அஞ்சல் அனுப்ப முடியும். வலையில் உலவ முடியும். சொல் தொகுப்பு செய்து, தமிழில் கதை, கட்டுரைகள் எழுத முடியும்.

    தமிழிலேயே தகவல் தளங்களை அணுக முடியும். படம் வரைய முடியும். படம் காட்ட முடியும். மைக்ரோசா·à®ªà¯à®Ÿà¯à®Ÿà®¾… யாரது? நாங்க லினக்ஸ§à®™à¯à®•!

    யுழரு கணினிக் குழு இந்தத் தமிழ் மேஜை தளத்தைச் சென்னையில் ஒருநாள் கருத்தரங்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழுக்கு அர்ப்பணிக்கப் போகிறது. இதற்கு தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உதவி செய்தது.

    சசிதர், சிவா, ஜெயராதா, லீனா சாந்தகுமார், சந்த்ரன் போன்ற வர்களின் ஆர்வத்திலும் கம்மியில்லை. நான் என்ன செய்தேன்?

    என் ஜாதக ராசிப்படி, பின் கையைக் கட்டிக் கொண்டு எல்லாம் சரியா இருக்கா?ரு என்று கல்யாணச் சாப்பாட்டின்போது ஒருவர் விசாரிப் பாரே… அதுபோல், அந்த அழகான இளைஞர்களைச் சந்தித்து விசாரித்தேன்.

    சில சிக்கலான ஆங்கிலச் சொற்களை எளிமையாகத் தமிழ்ப் படுத்தினேன். சொன்னேனே… இதனை இதனால் இவர் முடிக்கும் என்றாய்ந்து… அதனை அவர்கண் விட்டேன்!

    பல முறை நேரடியாக எழுதியும், அவர்கள் குழுவினர் மூலமாகத் தெரியப்படுத்தியும் இன்னும் அவருக்கு ஒற்றை வரி முன்னோடிச் சாதனைகளைப் பற்றி எழுத மனது வரவில்லை. நான் மிகுந்த தயக்கத்தோடு எழுதிய அறிவுத் திருட்டு என்ற வார்த்தைமீது எனக்கு இப்பொழுது முழுமையாக நம்பிக்கை வரச் செய்திருக்கிறார்.

    இது தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் திட்டம், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அவர் செய்துகொடுக்கும் காரியமல்ல. இதில் பல தமிழக இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மாயையில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். பிறருடைய உழைப்பைத் தங்களுடையதாக உயர்த்திப் பிடித்துக்கொள்ளலாம் என்று தமிழ் நாட்டின் முக்கிய அறிவுஜீவிகளுள் ஒருவர் என்று அறியப்படுபவர் அந்த இளைஞர்களுக்குச் சொல்லித் தருகிறார்.

    தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டியும் ஒரு வார்த்தை எழுத மறுப்பதை என்ன சொல்ல முடியும்?

    இரண்டே இரண்டு வார்த்தைகள்தான் மனதுக்குத் தோன்றுகிறது; அகங்காரம், சிறுமை.

    0 Responses to சுஜாதாவும் தமிழ் லினக்ஸ்-

    1. dyno
      January 28, 2004 at 9:12 pm

      I cannot get to the link you provided!?

      http://www.vikatan.com/av/2004/feb/01022004/av0906.shtml

    2. prabhu
      January 28, 2004 at 11:18 pm

      நேற்று பாலிடிக்ஸ் என்ற தவறான வார்த்தையை உபயோகித்து விட்டேன். நான் கூற வந்தது, சுஜாதாவின் மீதான உங்களது குற்றச்சாட்டுகள் எனக்குப் புரியவில்லை என்பதை. புரியவில்லை என்பதை விட நான் ஆழ்ந்து படிக்கவில்லை என்பதுதான் காரணம். தொடர்ந்து படித்து வந்தால் படிப்படியாக எனக்கு விளங்கலாம்…மற்றபடி உங்களது நேர்மையில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. நியூட்டனைப் பற்றி எழுதியது, ஒரு தகவலை பறிமாறிக் கொள்ளவே! மற்றபடி இங்கும் யாரும் நியூட்டன் இல்லை என்பதை நான் அறிவேன்.

    3. Hari Krishnan
      January 29, 2004 at 2:26 am

      நீங்கள் சொல்லியிருப்பதில் எந்தத் தவறும் இல்லை வெங்கட். இணையத்தில் நான் நுழைவதற்கு முன் இப்படி யாராவது சொல்லியிருந்தால் எனக்குக் கோபம் கூட வந்திருக்கலாம். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் அதிகமாகத் தமிழ் லினக்ஸ¤à®•்கு உங்களைப் போன்றவர்கள் செய்துவரும் தொண்டுக்கு உரிய இடத்தைக் களவாடுவது என்பது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சுஜாதா இப்படி நடந்துகொள்கிறார் என்பது வியப்பை மட்டுமல்ல; கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

    4. ismail kani
      January 29, 2004 at 4:40 am

      நண்பர் ஆசிப் மீரான் தமிழ் உலகம் மடற்குழுவிற்கு அனுப்பியிருந்த மடலை (sujatha vs. linux) சுஜாதாவின் மின் அஞ்சலுக்கு(writersujatha@eth.net) forward செய்துள்ளேன்.

      இஸ்மாயில் கனி

      சவுதி அரெபியா

    5. வாசன்
      January 29, 2004 at 9:48 am

      பீரிட்டெழு (spontaneity) உணர்ச்சிகளால் சொல்லவில்லை.யாராவது இந்திய சஞ்சிகைளில் (விளம்பரம்?) இது பற்றி வெளிகொணர விரும்பினால்,நான் உதவலாம்.

    6. raviaa
      January 31, 2004 at 3:14 am

      “பிட்சா சாப்பிடுவனுக்கு பொங்கள் எதற்க்கு” என்று எழுதினால் வெகுசன பத்திரிக்கைகள் பெரிய சர்ச்சையாக வெளியிடுவார்கள். மேலும் சுஜாதா அவர்களுக்கு ஒரு மூலதானம். பகைத்துக் கொள்ளமாட்டர்கள்.

    7. raviaa
      January 31, 2004 at 3:16 am

      “À¢ðº¡ º¡ôÀ¢ÎÅÛìÌ ¦À¡í¸û ±¾üìÌ” ±ýÚ ±Ø¾¢É¡ø ¦ÅÌºÉ Àò¾¢Ã¢ì¨¸¸û ¦Àâ º÷¡¸ ¦ÅǢ¢ÎÅ¡÷¸û. §ÁÖõ ̓¡¾¡ «Å÷¸ÙìÌ ´Õ ãľ¡Éõ. À¨¸òÐì ¦¸¡ûÇÁ¡ð¼÷¸û.

    8. முத்த&#300
      January 31, 2004 at 5:17 pm

      இதையெல்லாம்படித்தபின்னர் எனக்கு சுஜாதா மீது இருந்த அபிப்பிராயமே போய்விட்டது ..

    9. zimblee raja
      March 14, 2004 at 4:02 am

      முத்து,

      வெங்கட்டின் வலைப்பூவை தொடர்ந்து படித்துவந்தால் (அல்லது இப்போதும் அதன் archiveகளைப்பார்க்கலாம்) அவரது குரலில் தனது பங்களிப்பை அங்கீகரிக்கவில்லை என்கிற ஆதங்கமே மேலோங்கியிருப்பது புரிந்திருக்கும். ஆத்திரம் என்றுகூட சொல்லலாம். ஆத்திரக்காரனுக்கு ஏதோ சொல்வார்கள், அதுபோல் பேசுகிறார். ஒவ்வொருமுறை இவர் “சிறுமைகண்டு” சீறும்போதும் அவரது இயலாமையும் ஆத்திரமும் கண்டு பச்சாதாபம் மட்டுமே பட்டுக்கொண்டு உச்சுக்கொட்டிவிட்டு சென்றுவிடுவேன். ஆனால் இதைப்(போய்) படித்துவிட்டு சுஜாதாமேல் இருக்கிற அபிப்ராயத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள முற்படுவது வியப்பை அளிக்கிறது.

      சுஜாதா பற்றிய ஒருவரின் அபிப்ராயம் அவர் எழுத்துக்களால் மட்டும் விதைக்கப்பட்டது அல்ல. அவரது தமிழ்+கணினி என்ற இந்த கூட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான். வெறும் சும்மா எழுத்தாளர் என்ற பெருமையில் பேசவில்லை அவர். எழுத்துரு தரப்படுத்தல் முயற்சிகளில் ஆரம்பகாலத்திலிருந்தே பங்களித்துக்கொண்டிருப்பவர். வெ(று)ங்கட்டுகளால் இவர் புகழ் மங்கப்போவதில்லை. இருந்தாலும் சத்தம் போட்டு பேசுவதுமட்டுமே சாசுவதமாகிவிடக்கூடாது என்று எழுதுகிறேன்.

      ராஜா / மருதூர்

    10. மோகன&#302
      April 20, 2004 at 4:06 am

      நான் கூட இதற்கு முன் சுஜாதாவை பெரிய ஜீனியஸ் என்னு நினைத்திருந்தேன். ஏன் இவ்வாறு செய்தார்? இது ஒரு பெரிய மனிதருக்கு அழகா என்று எண்ணத் தோன்றுகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *