• குவாண்டம் கணினி – விமர்சனம&#

    by  • June 21, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய புத்தகம் குவாண்டம் கணினி குறித்து டொராண்டோவிலிருந்து ஒலிபரப்பாகும் கனேடியத் தமிழ் வானொலியில் திரு கலைப்பிரியன் அவரகள் ஒரு விமர்சனத்தை வாசித்தார். இதன் ஒலிவடிவத்தை இங்கே வெளியிடுகிறேன்

    கலைப்பிரியனின் விமர்சனம் .

    வாரம்தோறும் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் புத்தகம், திரைப்படம், நிகழ்வுகள் இவற்றின் மீதான விமர்சங்களை வாசிக்கிறார்கள். கனேடியத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும் பல நல்ல நிகழ்ச்சிகளுள் இதுவும் ஒன்று.

    ஒலிக்கோப்பு எம்பி3 வடிவில் இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கான இந்த விமர்சனக் கோப்பின் நீளத்தை ஒரு பாடல் அளவில் இருக்குமாறு தயாரித்திருக்கிறேன். சிக்கல்கள் இருந்தால் சொல்லவும்.

    0 Responses to குவாண்டம் கணினி – விமர்சனம&#

    1. sundaravadivel
      June 22, 2004 at 8:55 am

      கலைப்பிரியனின் விமரிசனம் தெளிவாகவும் சுவைபடவும் இருக்கிறது. உங்களைப் போன்றோரிடமிருந்து வினைத்திட்பத்தைக் கற்க வேண்டும்!

    2. Radhakrishnan
      June 22, 2004 at 3:50 pm

      நிறைகளைப் பாராட்டியதோடு நிற்காமல் குறைகளையும் சுட்டிக்காட்டி நல்லதொரு விமர்சனத்தை அளித்துள்ளார். தமிழக வானொலிகளும் இதுபோன்று உருப்படியான நிகழ்ச்சிகள் செய்ய முயற்சிக்கலாம்.

    3. Arul
      June 23, 2004 at 11:12 pm

      Off-topic: You’ve got Mail :)

    4. ஜெ. உமா &#
      July 3, 2004 at 1:39 pm

      சுமார் மூன்று நாள்களுக்கு முன் தான் விமர்சனத்தைப் பதிவிறக்கம் செய்து கேட்டேன். நிகழ்ச்சியும் அற்புதம். விமர்சனமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

    5. வெங்க&#297
      July 4, 2004 at 11:51 pm

      உமா மஹேஸ்வரன் – நன்றி. இங்கே எங்கள் வானொலியில் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. (அதனால் டொராண்டோ வாழ் இந்தியத் தமிழர்கள் அதைக் கேட்பதில்லை).

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *