கும்பகோணம் தீ விபத்து
by வெங்கட் • July 16, 2004 • பொது • 0 Comments
இந்த வெள்ளியின் காலை அமங்கலமாக விடிந்திருக்கிறது. இன்றைக்குக் காலையில் நான் எழுந்தவுடன் கண்ணில் பட்ட முதல் செய்தி : கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் தீ விபத்தில் 75 மாணவர்கள் சாவு. இது கூகிள்நியூஸ் பக்கத்தில் முதல் செய்தியாக இருந்தது. அவரசம் அவசரமாகத் தேடிப்போய் விபரங்களைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே கனேடியத் தொலைக்காட்சியின் காலைச் செய்திகளில் இதைக்காட்டினார்கள். கண்டங்கள் விட்டுத் தள்ளியிருந்தாலும் கூக்குரல்கள் என் காதுகளைத் துளைக்கின்றன. செய்வதறியாது நெஞ்சை வலிக்கிறது. ஏன்? ஏன்? ஏன் இப்படியாக வேண்டும்? யார் செய்த பிழை? யாரைச் சாடுவது? கையாலாகாத்தனம் என்னையே நொந்துகொள்ளச் செய்கிறது. இதன் வலி எனக்கு அதிகமாகவேயிருக்கிறது. காரணம், இது நான் சிறுவனாக இருந்தபொழுது வாழ்ந்த இடம். என் சக நண்பர்கள் அந்த வயதில் படித்த பள்ளிக்கூடம். அதன் எதிரிலிருக்கும் எங்கள் பள்ளி மைதானத்தில்தான் என்னுடைய ஒரு நாளில் அரைப்பொழுதுகள் கழிந்திருக்கின்றன. இதில் எத்தனைச் சிறுமியர் எனக்குப் பரிச்சயமான குடும்பங்களிலிருந்து வருகிறார்கள் என்பதை அறியேன். கும்பகோணத்தில் மையத்தில் இருக்கிறது இந்த சரஸ்வதி பாடசாலை வளாகம் (பெண்களுக்கு மாத்திரமானது). இந்த வளாகத்தினுள்ளே கிருஷ்ணா துவக்கப் பள்ளி (இருபாலரும்). எனக்கு நினைவிருக்கும் வரை இது இரண்டுமாடிக் கட்டிடம். பழையதுதான். படிக்கும் செய்திகள் இடப்பற்றாக்குறையின் காரணமாக துவக்கப்பள்ளி மொட்டைமாடியில் கூரையின் கீழே நடந்து வந்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்னர்தான் கூரை மாற்றப்பட்டிருக்கிறது. பிரிக்கப்பட்ட பழைய கூரைகள் பள்ளிச் சமையலறையையட்டி அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அதில் எழுந்த தீ கட்டிடக் கூரைக்குப் பரவியிருக்கிறது. தப்பிக்க ஒருவழியும் இல்லாமல் குழந்தைகள் கருகிப் போயிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவகையில் 1980களின் தொடக்கத்திலிருந்தே சரஸ்வதி பாடசாலை நிர்வாகத்தில் நிறைய குளறுபடிகள் இருந்தன. கும்பகோணத்திற்குள்ளே ச.பா தரம் குறைந்த பள்ளியாக அடையாளம் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் (1988 என்று நினைக்கிறேன்) பணப்பிரச்சனையின் காரணமாக இந்தப் பள்ளி ஒட்டுமொத்தமாக மூடப்படவிருந்தது. வழக்கம்போல் பள்ளிகளுக்கான தேவைகளின் காரணமாக தரக்குறைவான இடத்தில் இது தொடரப்பட்டிருக்கிறது. இப்பொழுதைய இந்த சோகத்திற்குப் பலரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான காரணங்களை பலவகைகளில் ஆராயலாம், ஆராய வேண்டும் (நான் சொல்வது வெறும் கண்துடைப்பான விசாரணைகள் அல்ல). எனக்கு உடனடியாகத் தோன்றுவது பள்ளிக்கூடங்களில் தென்னை, பனையோலைக் கூரைகளைத் தடைசெய்ய வேண்டும். நம்மூரில் தினசரி லாரி லாரியாக குடிநீருக்கான, கோக், பெப்ஸிக்கான பெட் போத்தல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை வாங்கும் திறனும் நம் மக்களுக்கு இருக்கிறது. இதுபோன்ற பாலிமரால் ஆன கூரைகளை, முடிந்தால் தீ பரவாத பண்புடன், செலவு குறைவாக உற்பத்தி செய்யமுடியும். இத்தகைய கூரைகளை பஸ் நிறுத்தங்களில் பார்க்கலாம். அதேபோல் தினசரி நாம் குடித்து விட்டுப்போடும் கோக் பெப்ஸி போன்றவை அடைக்கப்படும் அதே எடைகுறைந்த அலுமினியத்தாலான தடுப்புச் சுவர்களை அமைக்கலாம். அதுபோல கல்வி நிறுவனங்களில் தீயணைப்புச் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம். நான் சொல்லும் பாலிமர் கூரையும், அலுமினியச் சுவரும்தான் தீர்வுகள் என்பதில்லை. இது இந்த வலி நிறைந்த நிமிடத்தில் என் எண்ணத்தில் உதிப்பவை. ஆனால் கட்டாயம் கூரைகள் தவிர்க்கப்பட வேண்டும். சோகமான விஷயம், சரஸ்வதி பாடசாலைக்குப் பின்புறத்தில் ஒரு குளம் இருந்தது. எனக்குத் தெரிந்து அதில் நீர் இருந்தது. பின்னர் அது தூர்ந்துபோய்விட்டது. அதில் நீர் இருந்திருந்தால் தீயை அணைப்பதற்கு உதவியிருக்குமோ? சரஸ்வதி பாடசாலை முன் காவிரி மணல் கொட்டப்பட்டிருக்கும், இதெல்லாம் பயனற்றுப் போய்விட்டதே என்று ஆதங்கமாக இருக்கிறது). இன்னும் என்னென்னவோ சொல்ல வேண்டும்போல் தோன்றுகிறது. கோர்வையாக எழுத மனதுவரவில்லை. அழுகைதான் மிஞ்சுகிறது. |
஠னà¯à®ªà®¿à®©à¯ வà¯à®à¯à®à®à¯, à®à®à¯à®à®³à¯ à®à®©à¯à®±à¯à®¯ à®à®³à®¨à®¿à®²à¯à®¯à¯à®ªà¯ பà¯à®°à®¿à®¨à¯à®¤à¯à®à¯à®³à¯à®³ à®®à¯à®à®¿à®à®¿à®©à¯à®±à®¤à¯. வரà¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à¯ தà¯à®°à®¿à®µà®¿à®à¯à®à®¿à®©à¯à®±à¯à®©à¯. à®à®¨à¯à®¨à®¿¨à®²à¯à®²à¯ பà¯à®±à¯à®±à¯à®°à¯à®à¯à®à¯à®à¯ à®à®¾à®²à®®à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à®µà®²à¯à®¯à¯ à®à®±à¯à®±à¯à®®à¯ à®à®°à¯ மரà¯à®¨à¯à®¤à¯.
சற்று முன்னர் சன் செய்திகளில் கல் மனமும் கசிந்துருகும் அந்த கோரக் காட்சிகளை பார்த்தேன். இதைவிட துயரம் தரும் ஒரு காட்சியை இனி நான் காணப் போவதில்லை. என்ன வார்த்தைக் கொண்டு இந்த துன்பத்தை பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை. எதையும் சிந்திக்கவோ, எழுதவோ முடியவில்லை. மிகவும் வருந்துகிறேன்.
இது தாங்க ஒண்ணாத ஒன்று.
எங்கள் வீட்டில் TV இல்லை. இணையத்தின் வழி
வரும் செய்திகளே பயங்கரமாக இருக்கின்றன. இவையெல்லாம்
முற்றிலும் தவிர்க்க கூடியவைதான் என்று நினைக்கும் போது இன்னும்
இயலாமை அதிகமாகத் தெரிகிறது.
செய்தியைக் கேட்டதும் எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது. (எனக்குத் தெரிந்த ஒரே கும்பகோணத்துக்காரர் நீங்கள் தான்) மகாமக சாவுகளையும் மிஞ்சிவிட்டது இந்தக் கொடூரம். அத்தனையும் பாலர் பள்ளிக் குழந்தைகள் என்னும்போது இன்னும் துக்கம் இரட்டிப்பாகிறது. மெட்ரிக் பள்ளிகளை இப்படி நெருக்கமான மாடிகளில் நடத்துகிறார்களே என்று எரிச்சலாகவே இருக்கும். இன்று அது கோபமாக மாறிவிட்டது. விசாலமான கட்டடங்கள் இல்லாவிட்டால் அனுமதி கொடுக்கக் கூடாதென்று சட்டம் வரவேண்டும். அதில் ஓட்டைகளைத் தேடாமல், பள்ளி நடத்துவோர் கடைப்பிடிக்கவும் வேண்டும். கையில் எடுக்கும் தியணைக்கும் கருவிகள் எல்லாப் பொதுவிடங்களிலும் இருக்கவும், அதைக் கையாளும் அறிவு ஆசிரியர்/அலுவலர்களுக்கு இருக்கவும், சட்டம் வரவேண்டும்.
குழந்தைகளின் சாவு, அதுவும் ‘வளர்ந்தவர்களின்’
தவறுகளால் 75 இளந்தளிர்கள் கருகிப் போனது,
துயரம்,கோபம்,இயலாமை,குற்றவுணர்ச்சி என மாறி,மாறி வந்து தாக்குகிறது…
town high school,பாணாதுறை,சிறுமலர் போன்ற பள்ளிகளுள்ள குடந்தையில்,இது போன்றொரு பள்ளிக்கூடம் எப்படி இருக்கவிடப்பட்டது…
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் பெற்றோர்கள் என்ன மனதில் நினைத்துக் கொண்டிருப்பார்கள்…வினாக்கள் துளைக்கின்றன..
அமேரிக்காவிலுள்ள OSHA போன்று இந்தியாவில் உள்ளதா..தெரியவில்லை..இருந்தாலும் எந்த அளவுக்கு அவர்கள் துணிவுடன் செயல்பட முடியும்..
எப்படி இருந்தாலும் நம்மைப் போன்ற புலம் பெயர்ந்த தீர்க்க முடியாத செஞ்சோற்று கடனாளிகள்,விழிப்புணர்வு கொண்டு வர ஏதாவது செய்தே ஆக வேண்டும்..
துயரத்தை பங்கு கொண்டமைக்கு நன்றி வெங்கட்.
அறையில் ஆசிரியர்கள் யாருமில்லை, கதவுகள் பூட்டியிருந்திருக்கின்றன, அதனாலேயே குழந்தைகள் வெளியேற முடியவில்லை என்றொரு கூற்றும் நிலவுகிறது.
காசியண்ணா: நீங்கள் பிபிசியில் கேட்டிருக்கலாம். //விசாலமான கட்டடங்கள் இல்லாவிட்டால் அனுமதி கொடுக்கக் கூடாதென்று சட்டம் வரவேண்டும்//
1948ம் வருசத்துச் சட்டம் தெளிவாகவே இருக்கிறதாம். வருவாய்த்துறை அதிகாரியின் பார்வை/பரிந்துரைக்கேற்ப கல்வித்துறை அனுமதியளிக்க வேண்டுமாம். இந்த இரண்டு இடங்களிலும், பள்ளி நிர்வாகத்திலும் சட்ட மீறல்கள்.
When my father got transferred to Kumbakonam, I was sent to Saraswathi Padasala. I was in 3rd grade, and the school was very strict. They need money every other day, and students were given worst punishment for very simple things. Once we were asked to run with our shoes on the head as one student did not put her shoe in proper line. That was my last day at the school. My parents moved me to Town high school in the middle of academic year, where I spent next 9 years. When the school was managed by Mr. Kasi Raman, it was better.One of the school management director is well know Mythili Sivaraman (kasi Raman’s sister in law) who talks a lot on equality, feminism etc but the school was worse than an army boot camp.I think the kids were afraid to get up and run with the fear they might get punished. I can only think of that. I am very upset and shocked. How can a school be run with out proper fire codes? Of late I am hearing morefire accidents in Tamil Nadu. Accidents like this leave a scar that never heals.
Padma
மிகவும் துயரமான நிகழ்விது.வரிசையாக கிடத்தப்பட்டிருக்கும் கருகிய குழந்தைகளின் படம் நெஞ்சைத் துளைக்கிறது. இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துகள் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை உரியோர் மேற்கொள்ளட்டும்.
வெங்கட், நீங்கள் சொல்லும் சரஸ்வதி பாடசாலாவும், விபத்து நடந்திருக்கும் பாலசரஸ்வதி (லார்டு கிருஷ்ணா வளாகம்) பள்ளியும் வெவ்வேறானவையா அல்லது ஒன்றேவா?
வலைப்பூவிலிருக்கும் சுட்டி:
http://www.vikatan.com/vc/2004/jul/vc0149.shtml
This is Krishnan’s letter to kumbakonamfriends@yahoogroups about exact location of the school
———————————-
From: “nknsister”
Date: Fri Jul 16, 2004 9:14 pm
Subject:
hi,
Kasiram Street:
that street is actually is in center of the dabir middle street.
it is just opposite to anjaneyar koil in sakaji st.en route to vasu
theatre
i did my vth std there in 1985.and it has been developed into a 3
storeyed building over a period of 20 years
very sad!!!
krishnan
——————————————
=ISMAIL KANI
SAUDI ARABIA
சுந்தரவடிவேல், இஸ்மாயில்
நன்றி. நேற்று இரவு நானும் இதைப் புரிந்துகொண்டேன். காசிராமன் தெரு என்று பார்த்தவுடனேயே உறைத்தது.
முதலில் லார்ட் கிருஷ்ணா என்று படித்தவுடன், இது சரஸ்வதி பாடசாலையின் அங்கம் என்று நினைவுக்கு வந்தது. (அப்படித்தான் இருந்தது). இது பக்தபுரித் தெருவிலிருக்கும் ச.பா வளாகத்தினுள்ளே இருந்தது. இப்பொழுது பிரிக்கப்பட்டு தனியாக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வது வாழ்ந்த ஊரைப்பற்றிய நினைவுகள் மனதில் உறைந்து உறுதிப்படுப் போயிருக்கின்றன. என் நினைவில் இருக்கும் கும்பகோணம் இப்பொழுது நிச்சயம் இருப்பில் கிடையாது என்று அவ்வப்பொழுது மூளை சொல்லிக்கொண்டேயிருந்தாலும், பிம்பம் மாறமாட்டேனென்கிறது.
இது காசிராமன் தெருவில் இருக்கிறது. எனவே நான் எழுதிய பின்னால் குளமும் முன்னால் மணற்பரப்பும் கிடையாது. காசிராமன் தெரு நெருக்கமானது. இது ஒத்தைத் தெரு, (ஒரு வரிசைதான் வீடுகள்), மறுபுறம் வாய்க்கால். தூர்ந்துபோன குளமில்லாம்ல், இங்கெ எனக்குத் தெரிந்தவகையில் நீர் ஓடிக்கொண்டுதானிருந்தது. (இப்பொழுது வாய்க்காலையும் தூர்த்து அதன்மேல் வீடுகட்டிவிட்டார்களா என்று தெரியவில்லை).
காசிராமன் தெருவிலிருந்து அரைகிலோ மீட்டரில்தான் நான் வசித்திருந்தேன். இப்பொழுதும் காசிராமன் தெருவின் மறுகோடியில் என் மாமா இருக்கிறார். ஆனால் இதில் எந்த இடத்தில் பள்ளி இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஏனென்றால் அத்தனை நெருக்கமான, குறுகலான தெரு.
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் மீதான நம் மக்கள் மோகமும் காரணம். எனக்குத் தெரிந்தவகையில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் மீது அரசாங்கம் அதிகக் கட்டுப்பாடுகளை வைத்திருப்பதில்லை. அவை கத்தரிக்காய் கடைகள் மாதிரி கல்வி வியாபாரம் செய்பவை. என்ன செய்வது அங்கே கத்தரிக்காய்கள் ஆங்கிலத்தில் விற்கிறார்களே?
naan migavum varundhugiren