• கன்னட வீரசைவ வசனங்கள் – 2

    by  • February 21, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    அக்கமஹாதேவி

    திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மறுத்து நிற்கும் தன்னைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் அக்கமஹாதேவி இப்படிச் சொலிகிறாள்;


    மலடி தாய்மைய அறிவாளோ?

    வளர்ப்புத்தாய் அன்பை அறிவாளோ?

    வலியின் கொடுமையை வலியற்றவன் அறிவானோ?

    சென்னமல்லிஹார்ச்சுனன்

    என்னை ஆட்கொண்டு நடம்புரிகிறான்

    என்பதை நீங்கள் எப்படி உணர்வீர்கள் தாய்மார்களே?


    (மொழியாக்கம்: பாவண்ணன்)

    பலவாறாக அக்கா திருமணத்தை விலக்கி நின்றாலும் நம்மூர் வழக்கம்போலக் கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லி, கௌசிகன் என்பவனுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள். திருமணத்திற்கு உடன்படும் அக்காவின் ஒரே கட்டளை திருமணம் செய்துகொண்ட கணவன் தன்னைத் தொடக்கூடாது என்பது;


    இவ்வுலகுக்கு ஒரு கணவனோ? அவ்வுலகுக்கு ஒரு கணவனோ?

    லௌகிகத்துக்கு ஒரு கணவனோ? ஆன்மீகத்துக்கு ஒரு கணவனோ?

    என் கணவன் சென்னமல்லிஹார்ச்சுனனைத் தவிர

    மற்ற கணவன்மார்களெல்லாம்

    முகில் மறைவில் பரந்த வண்ணத் திட்டுக்கள் போலாம்.


    (மொழியாக்கம்: பாவண்ணன்)

    தன்னைத் தொடமுயன்ற கணவனிடம் தன் மனது அவன்பாலில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறாள்.


    எருதின் சிந்தனை தோலைக்காக்கும் சிந்தனை

    குரடனின் சிந்தனை வேறு

    தர்மம் சிலர் சிந்தனை; கர்மம் வேறுசிலரது

    என்னுடையது எனக்கானது; உன்னுடையது காமம்

    விலகிப் போ, சேலையை விடு மடையனே

    எனக்கோ என் தேவன் சென்னமல்லிஹார்ச்சுனன்

    காட்சிதருவாரோ மாட்டாரோ என்பதே சிந்தனை


    எம்மேகொண்ட்டு சிந்தே ஸமகாரகொண்ட்டு சிந்தே

    தர்மிகொண்ட்டு சிந்தே, கர்மிகொண்ட்டு சிந்தே

    நனகே நன்ன சிந்தே, தனகே தன்னகாமத சிந்தே

    வல்லே ஹோகு ஸெய்ரக பிடு மருளே

    நனகே சென்னமல்லிகார்ஜ்உன தேவரு

    வளிவரோ வளியரோ எம்ப சிந்தே

    தன்னை விலக்குவது மாத்திரம் கௌசிகனுக்கு முக்கியமில்லை, சென்னமல்லிஹார்ச்சுனனை அறிந்துகொள்வதும் முக்கியம் என்று தெருட்டுகிறாள்.


    மலம் நிறைந்த சட்டி; மூத்திரக்குடுவை

    எலும்புப் பாய், சீழின் துர்நாற்றம்

    சுடட்டுமா, இந்த உடலை

    உடலைப் பற்றிக்கொண்டு கெட்டுப்போகவேண்டாம்

    சென்னமல்லிஹார்ச்சுனனைஅறிந்து மயக்கறுப்பாய்!

    (மொழியாக்கம்: பாவண்ணன்)

    சீக்கிரமே குடும்பவாழ்வை விட்டு தன்னுடைய ஆன்மீகத்தேடலுக்கு விலகிச் சென்றாள் அக்கமஹாதேவி!

    (தொடரும்)

    0 Responses to கன்னட வீரசைவ வசனங்கள் – 2

    1. Rhama Sankaran
      February 26, 2004 at 8:34 am

      Vanakkam. Kannada thesaththu Akkamaha Deviyai enggalukku arimukam seithatharku nanri. Thamiz pakthi nayakikalil yaaraiyaavathu allathu Aandalai ivargalodu oppita mutiyumaa? konjcham sollunggalen.

      Anbudan Rhamaa

    2. வெங்க&#297
      February 26, 2004 at 12:32 pm

      ரமா, வரும் நாட்களில் ஆண்டளையும் அக்கமஹாதேவியையும் ஒப்பிட்டு எழுத உத்தேசம். ஆமாம், நீங்கள் கும்பகோணத்தில் படித்தவரா?

    3. Rhama Sankaran
      February 27, 2004 at 10:36 am

      Dear Venkat

      Venkat, Yes. I am a Kumbakoni. I also read your interesting episodes on Kumbakonam. Wanted to ask you the same thing. Can you give me your email ID? I live in Singapore and I am from Mens’ College KMB. I also listened to your BBC interview on Linux open sources. I am getting lot of inspirations from your blog and trying to learn the basics in Comp. Just improving. Thanks and waiting to know your comparative study between A1 and A2. Anbudan Rhamaa

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *