• கடிதம்

    by  • April 25, 2004 • இலக்கியம் • 0 Comments

    கிடைக்கப்
    பெற்றேன்

    அத்தனை வெளுப்பில் காகிதம்
    எங்கே வாங்குகிறாய்?

    அச்சு நேர்த்திதான்;
    வெட்டியட்டிய வண்ணப்படமும்
    அழகாகத்தான் இருக்கிறது

    எழுத்துப் பிழை எதுவுமில்லை

    கணினியில் புதிதாக
    இலக்கணத் திருத்தி
    இணைத்திருக்கிறாயா?

    கசியும் அந்தப் பேனாவை
    இன்னும் வைத்திருக்கிறாயா?

    0 Responses to கடிதம்

    1. பாரா
      April 27, 2004 at 3:41 am

      கடிதம் தான். கடைசி வரிதான் இதனைக் கவிதையாக்குகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *