• ஐஐடிக்கள் – ரவி சீனிவாஸும் &

    by  • July 16, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடை கடந்து இரண்டு நாட்கள் ஐஐடி அலசலைப் பற்றிய கருத்தை ரவி சீனிவாஸ் இப்படி எழுதியிருக்கிறார்:


    வெங்கட் ஐ.ஐ.டிகள் குறித்த வெறுப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.அதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கங்கள்,காரணங்கள பொருத்தமாக இல்லை.தன் தரப்பினை நியாயப்படுத்த அவர் முன் வைத்துள்ள கருத்துக்களை என்னால் ஏற்க இயலாது. வெறுப்பினை மறைக்கும் முயற்சியாகவே இது தோன்றுகிறது. அவர் எழுதியுள்ளது போல் எழுதி இந்தியாவின் எந்த உயர் கல்விநிறுவனத்தையும் வீண் அல்லது தோல்வி என்று வாதிட முடியும்.குறைந்த பட்சம் ஒழுங்கான கேள்விகளையாவது அவர் கேட்டிருக்கலாம்.
    உதாரணமாக ஒன்றைத் தருகிறேன்.வேதியியல் துறையில் ஐ.ஐ.எச்.சியுடன் ஐ.ஐ.டிகளை ஒப்பிடுவது என்பது பொருத்தமாக இராது. இது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வெங்கட்டிற்கு வெறுப்பு இருப்பதால் அவற்றை ஒப்பிட்டு ஐ.ஐ.டி கள் வீண் என்று வாதிடுகிறார்.இன்போசிஸ் நாராயணமூர்த்தி எங்கு படித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவர் பேட்டியில் ஐ.ஐ.டிகள்,ஐ.எச்.சி போன்ற்வை இல்லாவிடில் இந்திய மென்பொருள் தொழில் வளர்ச்சி பெற்றிராது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் வெங்கட் எழுப்பும் கேள்விகளைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது.

    இப்படி ஒட்டுமொத்தமாக நான் எழுதியது சரியில்லை. நான் வெறுப்பில் எழுதியிருக்கிறேன் என்ற ரீதியில் வெறும் காற்றில் முழம்போட்டிருக்கிறார் ரவி. நான் என்னுடைய வாதங்களை ஒவ்வொரு தரவுகளாக முன் வைத்திருக்கிறேன். அவற்றில் தவறுகளை அவர் நேரடியாகத் தக்க பதிலுடன் சுட்டிக்காட்டியிருக்கலாம்.

    நான் ஐஐடிக்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்று எழுதியது எப்படி வெறுப்பாகும்? இந்த ஏரணத்தில் பார்க்கப்போனால் தோல்வியைப் பற்றிய எல்லா அலசல்களும் வெறுப்பு என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கலாம்.

    ஐஐடி-ஐஐஎஸ்ஸி வேதியல் துறைகளை ஏன் ஒப்பிடக்கூடாது? ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று சொல்கிறார். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டவில்லை. பின் ஐஐடியின் அறிவியல் துறைகளை யாருடன் ஒப்பிட்டு அலசலாம்?

    நான் முன்னரே சொன்னதுபோல வினோத் கோஸ்லாக்களின் பட்டியலில் இன்னொரு நாராயணமூர்த்தியைச் சேர்த்திருக்கிறார். நான் எழுதியிருந்தபடி என்னுடைய இரு கைவிரல்களையும் விரித்தெண்ணும்பொழுது நாராயணமூர்த்தியும் அவற்றுக்கிடையில் அடங்கினார்.

    நான் சொல்வது இந்தத் தனிமரங்கள் தோப்புகள் ஆகமாட்டா என்பதைத்தான். ஐஐடிக்கள் இல்லாவிட்டால் மென்கலன் வளர்ச்சி இல்லை என்று நாராயணமூர்த்தி சொல்லியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. நாராயணமூர்த்தி ஐஐடிக்களைச் சிலாகிப்பதை அவர் படித்த பள்ளியின் மீதான பற்று என்ற புலத்திலும் பார்க்கவேண்டும். எந்தத் தரவுகளின் அடிப்படையில் இதைச் சொல்லியிருக்கிறார் என்று ரவி சுட்டினால் அதை வைத்து என் கருத்தை நிறுவமுடியும். உணர்வுபூர்வமான ஒற்றை வாக்கியத்தை நாராயணமூர்த்தி உதிர்த்திருந்தால் அதற்கு ஏன் முக்கியத்துவம் தரவேண்டும். நாராயணமூர்த்தியின் ஆதார பொறியியல் கல்வி மைசூர் பல்கலையில் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். (அவர் ஐஐடி கான்பூரில் படித்தது ஒன்றரை வருடங்கள்தான்).

    நான் எழுப்பும் கேள்விகளைப் படித்தால் சிரிப்பு வருவதாக எழுதியிருக்கிறார் ரவி. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருடைய அபரிமிதமான நகைச்சுவை உணர்வுக்குத் தலைவணங்க வேண்டியதுதான்.

    0 Responses to ஐஐடிக்கள் – ரவி சீனிவாஸும் &

    1. RangA
      July 16, 2004 at 7:05 pm

      I do not agree with you, venkat. The idea of IITs is to create knowledgeable and intelligent original thinkers. To a large extent they do produce such people. Whether that intelligence and knowledge is useful for our country is what you are analysing and your opinions are based this factor. The knowlwdge of the IItian is not useful for our country not because of IITs but because of the stupid govt policies and social systems. If an IITian wants to start an industry what kind of facilities are there in India? What kind of research or development initiative is their in industries? I know of several talented people who are treated badly due to bueracracy and idiocy of the public sectors. IIT is not a failure. The Indian govt and their system is a failure. The same IITians go to other countries and are successful and the countries are also benefited. That is proof enough for the usefulness of IIT.

      nalladhOr veeNai seidhu adhai nalam kedap puzudhiyil eRivadhuthaan thappu. adhu veeNai senjavan thappu illa.

    2. Kasi
      July 16, 2004 at 7:49 pm

      வெங்கட்,

      உங்கள் puritan பார்வையில் ஐஐடிக்கள் தோல்வி என்று சொன்னாலும், நீங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டுப் பிறகு அதை நிறுவ முயற்சிப்பதாகவே எனக்குப் படுகிறது. நாம் பலரும் இதைச் செய்கிறோம்: முடிவெடுப்பது பல ஆண்டுகளாய், பல நிகழ்வுகளை அவதானிப்பதால் வருவது. நாம் கொடுக்கும் காரணங்கள் மட்டுமே நம் முடிவுகளுக்கு முழுப்பொறுப்பாகா. உங்கள் முடிவுகளுக்கு உங்களுக்குப் பூரண உரிமையுண்டு. ஆனால், உங்கள் இந்த முழு எதிர்மறையான தீர்ப்பு, எல்லாராலும் ஏற்கமுடியாததாக இருக்கிறது. முழுத்தோல்வி என்று தீர்ப்புச் சொல்வதைவிட, என்னென்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

      //RangA: …If an IITian wants to start an industry what kind of facilities are there in India? What kind of research or development initiative is their in industries?…// This is pure escapism. Whatever facilities are availabale to any other engineer is available to these people too. Are they not trying and proving? At personal level everyone, including this self, try to improve our earning, status, with minimum risk, and just fly off our land. But I don’t justify this when it comes to analyzing our social responsibility. I feel IITians, just because they are salebale, sell themselves for a better price. Thats it. No point in trying to cover-up this.

    3. RangA
      July 16, 2004 at 8:34 pm

      Kasi,

      The problem with us, Indians, is to think of everything in an ideal perspective and justify impracticalities. Why should we not try to improve our earning, status etc in an easier way and why should we be always reminded of social responsibilities? And what purpose is served by an IITian (or any other professional) struggling in India with his egoistic unimaginative bosses/bueracrats ? Atleast he can be useful to his family and his employer somewhere else. I am not saying an IITian is to be given special facilities. Whatever facilities available for any talented, interested person is bad in our country. Compared to other countries. How easy it is to start a business (even for a regular degree holder) in USA? Europe? How easy it is in India? why is it so?

    4. venkat
      July 17, 2004 at 7:48 am

      Sorry, I have missed to give a link to Ravi Srinivas’ original posting here it goes,

      http://ravisrinivasblog.rediffblogs.com/

    5. venkat
      July 17, 2004 at 8:02 am

      காசி,

      நான் ஒவ்வொரு கருத்தாக எண்ணிக்கையிட்டு ஐஐடிக்கள் ஏன் தோல்வியடைந்தன என்று எழுதியிருக்கிறேன். இது மற்றவர்கள் என் கருத்துக்களை எளிதாக எடுத்து மறுத்து வாதிட உதவியாயிருக்கும் என்ற நம்ப்பிக்கையில். அதாவது 13 இடங்களில் நான் ஐஐடிக்கள் தோற்றுப்போகின்ற என்று எழுதியிருந்தால் அதில் மற்றவர்கள் (ஒருவரே என்று இல்லை) 10 இடங்களில் நான் சொல்வது தவறு என்று காட்டினால் என் வாதம் தோற்றுப்போகும். ஐஐடிக்கள் முழு வெற்றி என்று உறுதியாகும். ஆனால் இன்றுவரை யாரும் அதைச் செய்ய முயற்சிக்கவில்லை.

      எல்லோரும் நீ சொல்வது தவறு என்று உணர்வுபூர்வமாகச் சொல்கிறார்கள் (சொல்கிறீர்கள்). ஒருவர் முழுத்தவறு என்று சிரிக்கிறார். மற்றவர்கள் சிலவற்றை ஒத்துக்கொள்கிறேன் என்கிறீர்கள் (எனவே அந்தச் சிரிப்பு உங்களையும் சேரும் :) ). நான் பிரகாஷிடம் சொன்னதுப்போல் ஐஐடியால் நாட்டுக்கு நன்மை என்ன என்று பட்டியலிடலாமே (எனக்கு சில நன்மைகள் தெரியும் ஆனால் நானே இதை எழுதப்போவதில்லை. இறுதியில் யாரும் எழுதாவிட்டால் நானே எழுதுவேன்).

      கட்டாயம் என்ன செய்யலாம் என்று எழுதப்போகிறேன். என்னுடைய கருத்துக்களை இப்படி ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறேன்;

      1. ஐஐடிக்களின் இன்றைய நிலை (அதாவது என் பாணியில் தோல்விகள்)

      2. ஏன் ஐஐடிக்களிடம் எதிர்ப்பார்க்க வேண்டும்?

      3. ஏன் அவர்களால் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் போகிறது? இது ஐஐடிக்களின் நடைமுறைகளை ஆராய முயலும்.

      4. என்ன செய்யலாம்?

      இப்படி ஒட்டுமொத்தமாக நெடுங்கட்டுரையாக எழுதாமல், மற்றவர்களின் கருத்துக்களை ஒவ்வொருநிலையிலும் கேட்க வ்லைக்குறிப்புகள் உதவுகின்ற்ன அல்லவா? உதாரணமாக, ஒருவர் வெற்றிப்பட்டியல் கொடுத்தால், என்ன செய்யலாம் என்று எழுதும்பொழுது அந்த வெற்றியை எப்படித் தக்கவைத்துக்கொள்லாம் என்று அலசவும் உதவாயிருக்கும்தானே?

      எனவே, மெதுவாகச் செல்லலாமே!

    6. venkat
      July 17, 2004 at 8:17 am

      RengA,

      >Why should we not try to improve our earning, status etc in an easier way and why should we be always reminded of social responsibilities?

      Because you (IITs) burn about approximately 12% of the central budget outlay for Secondary and Higher Education. That is, these handful of IITs grab an eigth of the entire money allocated for education in India. Mind you, this does not count for subsidies in hostel, food, working standard improvements. Besides, IIT prof. are also eligible for grabing money from other R&D allocations (such as Dept of Atomic Energy. DRDO, DST, NCERT, CSIR, … as R&D project subcontract). They do grab a great share of this.

      So you have social responsibilities that you cannot shy away from. (If anyone else talk about grabbing public money and bolting away, it would be termed Criminal).

      Can you calculate how much a student would have to pay as monthly fee if IITs were not funded/subsidised by govt? This will include funding libraries, labs, infrastrucutre, paying salaries, etc. Had you paid that amount as monthly fee, you are fee to try to improve your earning, status etc. in an easier way and need not always be reminded of social responsibilities.

      This is why I said my (our) expectations on IITs are justified. In fact, if you look in the real business perspective (as you have couched your comment), these expectations are low on returns.

    7. Ve Elanjelian
      July 17, 2004 at 10:18 am

      Hmm… Venkat, வணக்கம்.

      On this, I am with you. Having met a fair share of IITian’s in the US, especially, and elsewhere, I tend to think that IIT is more hype than real. Of course, there is no question as to their academic merit. However, I think they are also the product of misplaced priorities; inborn inferiority complex of a nation trying to liberate itself from the grips of colonialism.

      I am happy though that India has finally attained a level of maturity now to pay a greater attention to primary and secondary education. Studies show that the law of diminishing marginal returns holds true, particularly, for education. The greatest bang for buck is obtained at the elementary level.

      And, guess what … with the likes of Renga around, one doesn’t have to go far looking for signs of IIT’s _overall_ failure. :sigh:

      e.

    8. Kasi
      July 18, 2004 at 2:35 am

      //RengA: Why should we not try to improve our earning, status etc in an easier way and why should we be always reminded of social responsibilities?//

      :( :(

      வெங்கட், என்னால் இப்போது இதில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. வெறுமனே வாசித்துவிட்டுப் போகிறேன்.

    9. Srinivas Venkat
      July 18, 2004 at 8:46 am

      16, 17 வயதில் பிரமிப்பாக தெரியும் IIT 30 க்கு மேல் தெரிவதில்லை, காரணம் யதார்த்தம்தான். இன்றைக்கு உங்களுக்கு உள்ள IIT பற்றிய தெளிவான ஆராய்ந்து நோக்கும் பார்வைகள் உங்களின் 16-வது பிராயத்தில் இருந்திருக்குமா?

      சாதம் உண்ணும் மழலைக்கு நிலவைப் போலத்தான் 16 வயதில் யாருக்கும் IIT. அந்த வயதில் IIT பற்றிய கனவுகள் கற்பனைகள் அதற்கான தகுதி குறித்து நாமே இட்டுக் கொண்ட வறைமுறைகள் பற்றி இன்று நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கும்.

      IIT –யில் சேரும் தகுதியை 0.01 மதிப்பெண்ணில் இழக்கும் மாணவன் முட்டாளுமல்ல, அதே மதிப்பெண் அதிகம் வாங்கியதால் IIT-யில் சேரும் மாணவன் அதிபுத்திசாலியும் அல்ல.

      16 வயதில் புத்திசாலித்தனம் அல்லது வெற்றி அவன் படிக்கும் புத்தகங்களல் மதிப்பிடப்படுகிறது. ஆனால் 30 வயதில் ஒருவன் பெரும் வெற்றி அவனின் அனுபவத்தினாலும் தைரியத்தினாலும், தெளிவான சிந்தனையால் அவன் எடுக்கும் முடிவுகளாலும்தான் கணிக்கப் படுகிறது.

      அந்த வகையில் IIT-யோ, அல்லது REC -யோ அல்லது இந்தியாவில் இருக்கும் மற்ற ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகளோ ஒரு கிரியா ஊக்கிகள்தான்.

      Only the Name differs.

    10. வெங்க&#297
      July 19, 2004 at 12:12 pm

      ஸ்ரீனிவாஸ் வெங்கட்,

      என்னுடைய பதினாறு வயதில் எனக்கு ஐஐடியைப் பற்றித் தெரியாது. எனக்கு அப்பொழுது இருந்த ஆசையெல்லாம் டாக்டராக வேண்டும் என்பதே. ஆனால் வாங்கிய மதிப்பெண்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை (நூலிழையில் என்று சொல்லலாம், சற்றே தடியான ட்வெயின் நூல் என்று வைத்துக்கொள்ளுங்களேன் :) ). கிடைக்காமல் போனவுடன் அப்பொழுது என் குடும்பத்தில் பெரும் நிம்மதி. மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருந்தால் என் அப்பாவால் கட்டாயம் செலவைச் சமாளிக்கமுடியாமல் போயிருக்கும்.

      அது ஒருபுறம் கிடக்க, உங்கள் கருத்து அற்புதமானது. இப்படிப் பதினாறு வயதில் ஐஐடிக்குள் கனவுடன் நுழையும் மாணவர்களை அதன் சூழலும் பயிற்றுமுறையும் (இந்திய) எதார்த்தத்துக்குத் தயார்ப்படுத்துவதில்லை. ஐஐடியும் ஆர் ஈ சியும் கிரியா ஊக்கிகள்தான். ஆனால் விடலைப்பருவத்தில் கிரியா ஊக்கிகளின் பங்கு அளவிடமுடியாதது. இவைதான் மாணவர்களை ஆற்றுப்படுத்துகின்றன. என்னை விட என் (கும்பகோணம் அரசினர்) கல்லூரியில் புத்திசாலி மாணவர்கள் கட்டாயம் இருந்தார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு படிப்பின் அவசியம் தெரியவில்லை. எம் எஸ் ஸி படித்தவுடன் ஏதோ வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டதைப்போலப் பேசுவார்கள். (எத்தன வருஷத்துக்குடா மச்சி இன்னும் பரிச்சை எழுதிகிட்டு இருக்கெறது). ஆனால் நம் பயிற்று முறைகள் தேர்வுகளில் விடையளித்தல் என்று மாத்திரம் இல்லாமல் கற்றலுக்கு வழிசெய்து கொடுத்தால் இந்த எண்ணம் தோன்றாது.

      ஐஐடி ஆர் ஈ சி சூழல்களில் இந்தக் கிரியா ஊக்கிகள் ஓரளவுக்கு நன்றாகச் செயல்படுகின்றன.

    11. ravi srinivas
      July 22, 2004 at 3:56 pm

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *