• ஐஐடிக்கள் – சில யோசனைகள்

    by  • July 19, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஐஐடிக்கள் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றாமல் போயிருக்கின்றன என்பதை இந்த வரிசையின் முதல் குறிப்பில் எழுதியிருந்தேன். தொடர்ந்து ஐஐடிக்களிடமிருந்து ஏன் நாம் நிறைய எதிர்பார்க்க வேண்டும் (அல்லது ஐஐடிக்களுக்கு இருக்கும் கடமைகள்) என்பதைப் பற்றி எழுதியிருந்தேன். இதில் அடுத்தபடியாக, ஐஐடிக்கள் ஏன் அவற்றின்மீதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதைப் பற்றி எழுதுவதாக இருந்தேன். ஆனால் தொடர்ந்தும் எதிர்மறையான விஷயங்களையே எழுதிக்கொண்டிருந்தால் அது என்னுடைய நோக்கத்தைத் திசை திருப்பிக் காட்டக்கூடும் என்று தோன்றுவதால். இனிமேல் சில குறிப்புகளுக்கு ஐஐடிக்களின் நிலைமையை முன்னேற்ற என்ன செய்யலாம், அவற்றின் பயனை “இந்தியாவிற்கு” அதிகரிப்பது எப்படி என்பதைப் பற்றி சில கருத்துக்களை எழுத உத்தேசம். இந்த இடத்தில் தோல்விக்கான காரணங்களும் இடையிடையே சொல்லப்பட்டு அதை எப்படி மாற்றுவது என என் மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதவிருக்கிறேன். குறை சொல்வது எப்பொழுதும் எளிது, உருப்படியான யோசனைகளைச் சொல்வது கஷ்டம். இப்பொழுது நான் உருப்படியான யோசனைகள் என்று என் மனதிற்குப் பட்டதைச் சொல்ல முயற்சிக்கிறேன். (இது நான் ஐஐடிக்களின் மீது எரிச்சல் படுகிறேன் என்பதைப் போன்ற அபத்தமான விமர்சனத்தைத் தவிர்க்க உதவும் என்று நம்புகிறேன். அவற்றின்மீது உண்மையான அக்கறை எனக்கிருப்பதை இப்பொழுது தெளிவுபடுத்த முடியும்).

    இந்த நிலையில் நான் உருப்படியானவை என்று கருதுபவை உண்மையிலேயே நடைமுறையில் சாத்திமில்லாதவையாக இருக்கலாம், அல்லது வெறும் அபத்தமாகக் கூட இருக்கலாம். எனவே, எல்லோரும் வாருங்கள் என்னுடைய யோசனைகளை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கலாம்.

    * * *
    {ஒன்று}

    முதலாவதாக, எனக்கிருக்கும் பெரிய வருத்தம். ஐஐடிக்கள் தம் அண்டையிலிருக்கும் தொழிற்சாலைகளைக் கூட எட்டிப் பார்ப்பதில்லை என்பது. முன்னர் சொன்னதுபோல ஐஐடி சென்னையிலிருக்கும் மாணவன் ஒரு முறைகூட அருகிலிருக்கும் கிண்டி தொழிற்பேட்டைக்குப் போய் எட்டிப்பார்க்காமல் ஐஐடியில் முதலிடம் பெற்று அடுத்த விமானத்தில் பறந்துபோய்விட முடியும். என்னைப் பொறுத்தவரை இது இழிநிலை. (அயலில் இருக்கும் தொழிற்கூடங்களுக்கும் ஐஐடிக்களும் தொடர்பு தேவையில்லை என்று யாரும் கூற முற்படமாட்டார்கள் என்று நம்புகிறேன். அப்படி யாராவது இருந்தால், இதன் தேவையை என்னால் விவாதிக்க முடியும்).

    பெரும்பாலான ஐஐடி மாணவர்களுக்கு இந்தியத் தொழில் நிலவரமே தெரிவதில்லை. இது இந்தியாவிற்கு எந்த வகையிலும் பயனுள்ளதில்லை. மாறாக உள்ளூரில் இருக்கும் சவால்கள், பிரச்சனைகளை நேரிய வழியில் மாணவர்களுக்குத் திறந்து காட்டுவதன் மூலம் மாணவர்களின் திறனுக்கு நேரடியான அறைகூவல் விடுத்து அவர்களின் கவனத்தை நம் நாட்டின் தேவைகளுக்குத் திருப்ப முடியும். பல ஐஐடி மாணவர்கள் தங்களுடைய “உலகத் தரத்தால்” உள்ளூர் தொழிற்கூடங்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

    இதை எப்படி மாற்றலாம்? முதலாவதாக, ஐஐடிக்ளின் படிப்புகாலத்தை நான்கு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக்கலாம். இதில் ஐந்தாவது ஆண்டு மருத்துவக்கல்லூரிகளில் உள்ளுறை மருத்துவராக நேரடித் தொழில் அனுபவம் பெறுவதைப் போல வைத்துக்கொள்ளலாம். ஒரு வகையில் இந்த ஐந்தாவது ஆண்டு இந்தியாவிற்குப் பணியாற்றியே தீரவேண்டும் என்று ஐஐடி மாணவர்களுக்கான தார்மீகக் கடமையாகவும் கொள்ளலாம். இதற்கான செயல்முறை இப்படியிருக்கலாம்;

    ஐஐடியின் இரண்டாமாண்டு/மூன்றாமாண்டு ஆண்டுதோறும் வருடத்திற்கு இரண்டுமாதங்கள் தொழிற்சாலைகளில் பணியாற்ற வேண்டும். நான்காம் ஆண்டு இறுதியில் ஆறு மாதங்கள் தொழிற்கூடத்தில் பணியாற்ற வேண்டும் (2+2+6=10 மாதங்கள்).

    ஐஐடி நேரடியாகத் தொழிற்சாலைகளைத் தொடர்புகொண்டு ஐஐடி மாணவர்களை பயிற்சி ஊழியர்களாகப் பணியாற்ற ஏற்பாடு செய்யலாம். அதாவது திட்டத்தில் பங்குபெறும் தொழிற்சாலைகளை மூன்றாகப் பிரிப்பது. இதில் உயர்நிலை தொழிற்கூடங்களில் (இந்த இடத்தில் நான் கார் தயாரிபுத் துறையை உதாரணமாக எடுக்கிறேன்) – ·à®ªà¯‹à®°à¯à®Ÿà¯, ஹ்யுண்டாய், போன்றவற்றில் இரண்டாம்வருட இறுதியில் இரண்டுமாதங்கள் பணியாற்றுவது. மத்திய நிலைத் தொழிற்கூடங்களில் – உதாரணமாக, டிவிஎஸ், போன்றவற்றில் மூன்றாம் வருட இறுதியில் இரண்டு மாதங்கள். முழுமையான தொழிற்பயிற்சியை நான்காவது வருட இறுதியில் ஆறு மாதங்களுக்கு இடைநிலை மற்றும் துவக்கநிலை தொழிற்சாலைகளில் ஐஐடி மாணவர்கள் கட்டாயம் செலவிட நிர்ப்பந்திக்கலாம். (இப்படி தொழிற்கல்வி தரும் நிறுவனங்களுக்கு அரசு மாணவர்களுக்கான ஊதியத்திற்கு வரிவிலக்கு தரலாம்).

    பலருக்கும் இது தலைகீழாக இருப்பதைப்போலத் தெரியும். ஆனால் இந்த முறையில் பல நன்மைகள் இருக்கின்றன. முதலாவதாக, எடுத்த எடுப்பிலேயே உயர்தர கூடங்களுக்குப்போவதால் அங்கிருக்கும் சீரிய தொழில்முறைகளை மாணவர்கள் பின்னர் செல்லவிருக்கும் சிறிய தொழிற்கூடங்களுக்கு எடுத்துச் செல்லமுடியும். இது சிறிய நிறுவனங்களுக்கு நல்ல பயனைத்தரும். பன்னாட்டு நிறுவனங்கள் இரண்டாம் வருட மாணவனை வேலைக்கு வைப்பார்களா என்று கேட்கலாம். இது கட்டாயம் சாத்தியம் – முதலில் இவர்கள் ஐஐடி மாணவர்கள். மேலும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர்கள் முதல்வருட மாணவர்களைக் கூட கோடைக்கால வேலைகளில் அமர்த்துகிறார்கள்.

    இறுதிவருடம் நேரடியான உள்ளூர் சிறு நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலம், மாணவர்கள் உள்ளூர் தொழில் நிறுவனங்களை/நிலவரங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். இது மாணவர்கள் நேரடியாக உள்ளூர்த் தேவைகளை அறிய உதவி, அவர்களைத் தொழில் முனைவேர்களாக மாற்றி இந்தியாவிலேயே தங்க ஊக்குவிக்கும். ஒவ்வொரு வருடமும் சிறந்த ஐஐடி மாணவருக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதை நேரடியாக இந்தத் தொழில்முனைப்புத் திட்டத்துடன் இணைக்கலாம்.

    இதற்கான வழி முறைகளில் சில சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் இது கட்டாயம் சாத்தியமான முறைதான். நான்கு வருடப் படிப்பை ஐந்துவருடங்களாக்குவதற்கு முதலில் எதிர்ப்பு இருக்கும். ஆனால் ஐஐடிக்களுக்கு இதை நிர்ப்பந்தமாக்கும் வல்லமை இருக்கிறது (ஐந்து வருடம் பி.டெக் என்றால் யாரும் பின்வாங்க மாட்டார்கள்). இதைத் தார்மீக ரீதியாகப் பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் எடுத்துச் செல்ல ஐஐடிக்கள் விளம்பரங்களில் ஈடுபடலாம். எனக்குத் தெரிந்தவகையில் தொழிற்சாலைகளையும், ஐஐடிக்களையும் அருகில் கொண்டுவர இது அருமையானவழி.

    பிரேசில், மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அரசின் மானியம் பெற்று படிப்பவர்கள் உள்ளூரிலேயே சிலகாலம் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இன்னும் பல நாடுகளில் இளமைப்பருவத்தில் ராணுவப் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறாது. இந்திய ஜனநாயக முறைகளில் இத்தகைய கட்டாயங்கள் எந்தவகையிலும் பயன் தரமாட்டா. (ஆனால் இந்தக் கட்டுபாடுகள் குறித்த தகவல்களை ஐஐடிக்கள் விளம்பர உத்தியாகப் பயன்படுத்தலாம்). மாறாக மேற்ச் சொன்ன நடைமுறையில் கல்வியின் ஒரு அங்கமாக இந்தியத் தொழிற்கூடங்களை மாற்றுவது எளிது, இது மறுக்க முடியாத தேவையும் கூட.

    0 Responses to ஐஐடிக்கள் – சில யோசனைகள்

    1. RangA
      July 19, 2004 at 7:51 pm

      I do not know about the current trend but IITs did have idustrial training for 2 months to 4 months. The idustries, fearing exposure of their knowhow would not reveal much information to these trainees nor would they use them for active research. This may vary from industry to industry.

      As I had said earlier the problem is with the industries and our social structure. Induatries believe in foreign collaboration and readymade knowhow than inhouse developments. The other oppurtunities are gobbled up by inefficient public sectors. This is not the case for Sony ericsson motorola etc as you mentioned in your ‘great’ 13 points…

    2. Pari
      July 20, 2004 at 6:28 pm

      Our college had a world bank aided scheme called IMPACT under which we had to undergo a training in a company after 6th semester.

      Choosing a company and getting permission was left to us(of course, they provided the letter, explaining the purpose). I must tell that it wasn’t easy to get permission. Parents, their friends ‘influence’ only ensured that we got one.

      All said and done, we, a group of 4(max. for a batch) went to a small company in Guindy industrial estate. We were working on a LIVE project, actually.(We were split into two groups and worked on two completely different projects.)

      Though the project head had given free access to everything in the project, we couldn’t do much, because we were seeing a “complete” project the first time. It’s not the same as your lab experiments.

      It involved programming micro controllers. We were to study mu.c(short for micro controller) only in the final semester, that too as an elective.(Not many chose that. It’s a different story.) So we were content to imitate what we had done in the lab, like programming the 555 timer and stuff like that.

      The experience was really a confidence booster.

      But final year “project” was more of a formality(it still is) and it’s a shame.

      Out of the 10 batches atleast 3/4 had gained on-the-job experience.

      (IIT is as alien to me as Anna University. I didn’t know there’s a seperate application for Anna univ. I knew about IIT only in college :-) )

      That’s why I’m ‘learning’ about IITs from current discussions and not commenting. However, this comment is related to industrial training.

      Sorry for the lengthy post :(

    3. Pari
      August 11, 2004 at 2:30 pm
    4. வெங்க&#297
      August 12, 2004 at 1:08 pm

      pari,

      Many thanks for the pointer, I would not have noticed otherwise. He has many valid points (some of which I wrote on my IIT series).

      But he has a poor writing style someone should have edited. I have read the first three episodes, will summarize my opinions once he concluded.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *