• ஏழ்மை கைக்கொள்

    by  • May 21, 2004 • நகைச்சுவை • 0 Comments

    குறிப்பு: ஒரு வேலையற்ற மதிய உணவு இடைவேளையில் அருள் செல்வனின் நாத்திகம் பயில் குறிப்பை வெட்டியட்டித் திருத்தியது. (அருள், கண்டுக்காதீங்க, அப்பப்ப வருமே அதே கிறுக்குத்தனம்தான்).

    ஏழ்மை கைக்கொள்

    தன் வாழ்நாள் முழுவதும் ஒருவன் முழு ஏழையாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.

    1. ஏழ்மை மனிதனை விடுவிக்கிறது. சொத்துதான் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப் பெரும் தளை. செல்வமின்றியிருப்பது மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. செழுமையும் அது செழுங்கிழை தாங்கப் பணித்தலும் சுதந்திரப்பாதையின் மிகப் பெரும் தடைகள். வறுமையே மனிதனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.

    2. செல்வமின்மை மனிதனைத் தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள் குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தை வழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது.

    3. செல்வமின்மை மனிதனைப் பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவனைத் தன் செயல்களுக்கு தன்னையே பொறுப்பேற்கக் கற்றுத்தருகிறது. எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கிகளையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்க வேண்டும். கூலிபெற்றுக் கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.

    4. ஏழ்மை மனிதனை இரக்கமுள்ளவனாக, அன்புடையவனாக மாற்றுகிறது. பிற மனிதரை, பிற உயிர்களை தன்னைப் போலவே எண்ண வைக்கிறது. வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் இழக்காமல் அனைவரையும் நேசிக்க கற்றுத்தருகிறது. மனித வாழ்வின் நிலையில்லாமையும் இலக்கில்லாமையும், அவனை பணத்திமிரில் இளைப்பார விடாமல் இக்கணத்தை, சூழலை, சகஉயிர்களைச் செல்வமாக போற்றும் மனதைத் தருகிறது.

    5. ஏழ்மை மனிதனை மனிதனாக்குகிறது. பொருளீட்டல் மனிதனை மிருகமாக்குகிறது. பாவம் செய்யத் தூண்டுகிறது.அவனைத் தேவனாக்கிக் காட்டுகிறது. சகமனிதனின் இருப்பைக் கீழானதாகக் காட்டி வசைபாடி அவனைத் தாழ்வுணர்சியும் பய உணர்சியும் கொண்டவனாக்கி மனச் சமனை நிலைகுலைக்கின்றது.

    6. ஏழ்மை மனிதனை அறநெறியாளனாக ஆக்குகின்றது. மடியில் கனமும் இல்லத்து வாயில் அடைப்புமில்லாத, தூய்மையான சிந்தனைகள் கொண்ட, பொறுப்புள்ள, அன்பு நிறைந்த ஒரு மனிதன், சுய அறம் இன்றி வாழ இயலாது. மனிதனுக்கு அந்த சாத்தியத்தை ஏழ்மை வழங்குகிறது.

    முழு ஏழையாக இருப்பது ஒரு அசாதாரணமான கடினமான ஒரு நிலை. ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தநிலையை உறுதிசெய்ய அடியேன் சித்தமுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் சொத்துக்களினின்று உங்களை விடுவிக்க என்னை அணுகவும். :)

    0 Responses to ஏழ்மை கைக்கொள்

    1. karthikramas
      May 22, 2004 at 12:10 am

      அண்ணாத்தே, கலக்கீட்டீங்க!! நான் வேணும்னா ஏதாவது உதவு செய்யட்டுமா? :-)

    2. Balaji-paari
      May 23, 2004 at 6:43 pm

      Pagadi pannuvatharkku oru nalla santharppam ;) .

      Aanaal ungal nookkam enna endru puriyavillai :( .

    3. வெங்க&#297
      May 24, 2004 at 10:54 pm

      குன்றேழு நின்றவனும், கொழுவின்றி உழன்றதனுக்குத் தேரீந்தவனுமாய் ஒருங்கே வந்தவனே, எம் நோக்கம் என்ன என்பதை இன்று நீ உணரக் கடவாய்! (வெட்டுப்பல், கோரைப்பல், சிங்கப்பல் இதெல்லாம் கிடையாது):)

    4. Balaji-paari
      May 25, 2004 at 4:50 am

      :)

      :)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *