என்னுடைய பிபிஸி பேட்டி
by வெங்கட் • February 24, 2004 • பொது • 0 Comments
இன்று காலை நான் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிபிசி தமிழோசையின் அறிவியல் பகுதிக்காக லினக்ஸ், திறந்த மூலநிரல்கள் பற்றியும், நம் சமூகத்திற்கு இதன் அவசியங்களைப் பற்றியும் ஒரு பேட்டி அளித்தேன். முடிவில் தமிழில் லினக்ஸ் வளர்ச்சி குறித்தும் சில வார்த்தைகள் சொல்லமுடிந்தது. குறுகிய அவகாசத்தில் எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் பேசியது. ஓரளவுக்குச் சரியாகவே வந்திருக்கிறது என்று நம்புகிறேன்.
இதன் ஒலி வடிவத்தை என்னுடைய வழங்கியிலிருந்து எம்பி3 வடிவில் கேட்கமுடியும். பிபிசியின் முழு நிகழ்ச்சிகளையும் அவர்கள் தளத்திலிருந்து நேரடியாகக் கேட்கலாம்.
இதே நிகழ்ச்சி இன்று மாலை 5:00 மணிக்கு, டொராண்டோவில் உள்ளூர் சிறப்பலை வானொலியான கனேடியத் தமிழ் வானொலியில் மறு ஒலிபரப்பாகிறது என்று தெரிவிக்கிறார்கள்.
எழுத்தைப்போலவே பேச்சிலும் இவ்வளவு சுத்தமாக பேசுவீர்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை! வாழ்த்துகள்.
விங்கட் சு.ரா வையே பேட்டி கண்டவராயிற்றே !:D
வெங்கட்..இப்பகுதையில் unicode ல் எழுதும் போது “கொம்பெல்லாம்” கோபித்துக் கொள்ளுகிறது. wordpad எழுதி ஒட்டவேண்டியுள்ளது. ஆனால் name பகுதியில் நன்றாக எழுத முடிகிறது. உ.ம்: ரவியா..கவனிக்க முடியுமா? பத்ரி halascan னில் துவக்கத்தில் அப்படித்தான். இப்போது சரியாகிவிட்டது
மேலும் ..
sorry …I’m still having the same problem with badri’s comment section..in other blogs i can see correctly when writing…for ex kasi’s or other blogs..
பரி, என்னை விடுங்கள் பிபிஸி காரர்களின் தமிழ்? எனக்குத் தெரிந்த பிரெஞ்சு நாட்டு இயற்பியல் பேராசிரியர் ஒருமுறை இப்படிச் சொன்னார், “செய்யும் காரியம் எல்லாவற்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சான்றான்மையை அடைவதன் முதல் கட்டம். அதை அப்படியே செய்ய முயற்சிப்பது இரண்டாவது. செய்ததாக மற்றவர்கள் பாராட்டும்பொழுது உடனடியாக உங்கள் உச்ச எல்லையை உயர்த்திவைப்பது மூன்றாவது. அப்படியிருக்க இந்தியர்கள் கலப்புத் தமிழையும், கலப்புக் கன்னடத்தையும் பேசுவது எனக்கு வியப்பாக இருக்கிறது”
ரவியா; கொஞ்சம் என்ன சொன்னீர்கள் என்று சொல்லிவிடுங்கள். பைட் குதறல் ஒன்றுமே புரியவில்லை.
பிபிஸி தமிழ் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதுபற்றி முன்பே அறிந்ததுதானே
தமிழக ஊடகங்களுடன் ஒப்பிடும்போது…வேண்டாம் வேண்டவே வேண்டாம்!
Encoding-ஔஐ யுனிகோடுக்கு மாற்றினால் ரவியா எழுதியிருப்பது தெரிகிறது.
try right click–encoding- Utf…I can read like that..I write alwys in unicode with ekalappai..don’t why sometimes it doesn’ work
வெங்கட், உங்கள் பேட்டி, சிறப்பாக இருந்தது. உச்சரிப்பும் அருமை.
இது ஒரு சோதனை. இதனை நான் Wordpad+e-Kalappai கொண்டு தட்டச்சினேன். ரவியா பிரச்சினை பற்றி ஒரு ஆய்வு.
Dear Venkat,
I listened to your short interview from the mp3 file. You have spoken precisly and with clarity. I guess it will help many people to think on that line.
A good effort