• எனது நதி – உமாமகேஸ்வரி

    by  • November 28, 2004 • இலக்கியம் • 1 Comment

    சமீபத்திய வாசிப்பில் பிடித்த கவிதை

    எனது நதி

    உமாமகேஸ்வரி

    சிறுவயதில் பார்த்தபோது
    அம்மாவின் புடவையென
    அலையோடிருந்தது.
    செல்லமாய் வளைவுகளில்
    சேர்த்தணைக்கும்;
    வருடும் மெல்ல.
    பள்ளங்களில் கால்பட்டால்
    பதறிப் பாய்ந்து மிரட்டும்
    பருவ காலத்தில்
    ஓரம் தைத்த தாவணிகளாய்
    உருவம் மாறிக் கிடந்தது
    துள்ளல் போர்த்தித் துவண்டு அடங்கி
    சன்னமாய் மின்னும் ஜரிகை வரிகளோடு
    வேறு திசையில் எறிந்து
    மாறுதலாக்கியது திருமணம்
    திரும்பிவந்து தேடினால்
    பிரிந்த நூலிழைகளாய்த்
    திரிந்திருந்தது அதுவும்
    அறுந்த
    அடி நீரோட்டத்தோடு.

    One Response to எனது நதி – உமாமகேஸ்வரி

    1. November 29, 2004 at 1:32 am

      இப்போதுதான் இங்கு வந்தேன். Triangular Objectsற்க்கு நன்றி! விக்கி-ஜாகிர் ரசிகரான நீங்கள் சக்தி ஆல்பங்களில் இருவரும் போட்டு கலக்கியிருப்பதிலிருந்து எதிர்காலத்தில் இங்கே தரலாமே!

      கர்நாடக சங்கீதத்தில் இந்துஸ்தானியை விட தாளத்திற்கு அதிக முக்கயத்துவம் தரபடுவதாக சொலவது, ஒரு சம்பிரதாயம் சார்ந்த உண்மையாக இருக்கலாமே தவிர, ஸோலோவாக தபேலா அளவுக்கு மிருதங்கம் போன்ற வாத்தியங்கள் எடுபடுவதுஇல்லை என்பது என் தனிபட்ட கருத்து. தபேலாவில் உள்ள சுதந்திரமும், சாத்தியங்களும் மற்றதில் அந்த அளவுக்கு இல்லை என்று தோன்றுகிறது-இன்னும் பொதுவாக இந்துஸ்தானியில். (இன்னும் புரியாத விஷயம், இந்த தபேலா வாசிக்கும் எவரும் நன்றாய் சிரித்தபடி ஜாலியாக வாசிக்க, இந்த மிருந்தங்ககாரர்கள் மட்டும் ஏன் மூஞ்சியை(குறிப்பாய் மூக்கை) அத்தனை கோணலாக்கி கொள்கிறார்கள் என்று புரியவில்லை!)

      பாலக்காடு மணி அய்யர் என்று ஒருவர் இருக்கிறாரா-ந்தாரா? (மதுரை தெரியும்!)-அல்லது வார்த்தை பிழையா?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *