இந்திய இராணுவ ஆராய்ச்சித்துறை தோல்விகள் – 1
by வெங்கட் • October 27, 2004 • அறிவியல்/நுட்பம் • 7 Comments
இந்திய இராணுவ ஆராய்ச்சித்துறையின் தோல்விகள் குறித்து அவுட்லுக் இதழில் வந்த ஒரு கட்டுரை வந்தியத்தேவனின் வலைப்பதிவு மூலம் கிடைத்தது. (நன்றி, வந்தியத்தேவன்).
தொடர்ந்து அவருடைய வலைப்பதிவில் அவுட்லுக்கின் கட்டுரை முழுவதையும் மறுபதிப்பு செய்திருக்கிறார். இனி இந்தக் கட்டுரை தொடர்பான என்னுடைய கருத்துக்கள்.
And it’s not for want of infrastructure or funds, given its annual budget of Rs 4,000 crore and its 51 hi-tech laboratories. But set up in 1958 with the aim of cutting down on arms imports through indigenisation, it’s this very objective that the DRDO seems to have lost sight of.
Almost half of this year’s Rs 77,000-crore defence budget is earmarked for imports. In fact, the organisation’s first major act in the new millennium was to approve a perspective plan from the services entailing defence imports worth Rs 1,20,000 crore for the next 15 years.
இந்தக் கட்டுரையின்படி இந்தியாவின் வருடத்திய இராணுவச் செலவு – 77,000 கோடி ரூபாய்கள்
இராணுவ இறக்குமதி – 33,500 கோடி ரூபாய்கள்
இராணுவ ஆராய்ச்சிக்கான செலவு – 4,000 கோடி
இதில் இராணுவ் ஊழியர் ஊதியம், இன்னபிற செலவுகளின் கணக்கு எனக்குத் தெரியாது. ஆனால், குத்துமதிப்பாக இறக்குமதி போக மீதமுள்ள ஒதுக்கீட்டில் 10 சதவீதம் ஆய்வகங்களின் உற்பத்தியால் விளைந்தது என்று வைத்துக்கொண்டாலும் செலவுக்கும் வரவுக்கும் சரி; நிலுவை இல்லை என்றாகிறது. அந்தவகையில் ஆராய்ச்சிக்கூடங்களால் எந்தவித இழப்பும் இல்லை.
கட்டுரை முழுவதும் எதிர்மறையான தொனிதான் இருக்கிறது. நேரடியாக முன்னேறுவதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றிச் சொல்லவில்லை.
* * *
இந்திய அணுசக்தி ஆய்வகத்தில் விஞ்ஞானியாகப் வேலைசெய்ந்தவன் என்பதாலும், இந்திய அறிவியல் கழகத்தில் நான்கு DRDO மானியம் பெற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தவன் என்பதாலும் (இதில் ஒன்று திட்டத்திற்கு திரு அப்துல் கலாம் ஒரு மதிப்பீட்டாளராக இருந்தார்) ஓரளவுக்கு இராணுவ ஆராய்ச்சி எப்படி நடக்கிறது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் என்னுடைய கருத்துகள்:
1. முதலாக வரவு, செலவு, நஷ்டம், நிலுவை போன்ற ரீதியில் கணக்குப்போட்டு இராணுவ ஆராய்ச்சியைப் பார்க்கக்கூடாது. தன்னிறைவு, சுயச்சார்பு, இறையாண்மை போன்றவை தொடர்புள்ள விஷயம் இது. பணத்தை முன்னிருத்தி நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசுவது தவறு (முழுத்தவறு இல்லை; பின்னால் வருகிறேன்)
எனவே இந்தியா சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுக்கால இராணுவ ஆராய்ச்சியில் என்ன விளைந்திருக்கிறது என்று பொதுவில் பார்ப்பதுதான் சரியான வழி என்று தோன்றுகிறது. ஐம்பதுவருடங்கள் சுயச்சார்படைய போதுமான (தாராளமான என்று படிக்கவும்) காலம். அப்படிப் பார்த்தால் இராணுவ் ஆராய்ச்சித்துறை தோல்வியைத்தான் கண்டிருக்கிறது. திரு. கலாம் அவர்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கிய காலத்திலிருந்து இராணுவத்தின் தொழில்நுட்ப வெற்றி என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் (கவனிக்கவும், திரு கலாமின் பெரும்பாலான வெற்றிகளின் பின்பலம் விண்ணாராய்ச்சிக் கழகம் (ISRO)). பொதுவில் இறக்குமதியின் அளவைப் பெருக்கிக் கொண்டே போவதன்மூலம் இரா.ஆ -வின் இருப்பு தேவையற்றதாகிக் கொண்டிருக்கிறது.
2. இரா.ஆ நிறுவனங்களின் தோல்விக்குக் காரணங்களாக அங்கிருக்கும் விஞ்ஞானிகள் குறிப்பிடுவது இராணுவத்தினரின் அதீத தலையீடு. உதாரணமாக, புனேயின் இருக்கும் Institute of Armament Technology லேசர் தொடர்புள்ள ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது. இங்கேயிருக்கும் சட்டத்தின்படி இயக்குநர்கள் மாறிமாறி வருவார்கள். மூன்றாண்டுகளுக்கு ஒரு விஞ்ஞானி என்றால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு ராணுவ அதிகாரி. இதுபோன்ற ஒதுக்கீட்டு முறைகளில் அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்ப்பது என்பதெல்லாம் பகல்கனவு. ராணுவத்தார் வரும்பொழுது விஞ்ஞானிகளை முறையற்ற வகையில் நெருக்குவதும், பின்னர் விஞ்ஞானி வந்தவுடன் அவர் பழைய உத்தரவுகளையெல்லாம் நீக்குவதுமாகத்தான் ஐ.ஏ.டி காலத்தைக் கழிக்கிறது.
பல சமயங்களில் இரு சாராரிடையேயும் ஈகோ பிரச்சனை வருகிறது. இது இராணுவத்தினரிடம் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகச் சொல்வார்கள் (பொதுவில் அவர்களுக்கு யாரும் எதிர்வார்த்தை சொல்வது பிடிக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே).
3. இரா.ஆ தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக நான் கருதுவது எல்லாவற்றிலும் அகலக்கால் விரிப்பது (Spreading themselves too thin). இது இந்திய அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சுக்கு இடங்கொடுப்பதற்காக நடக்கும் கேலிக்கூத்து. உதாரணமாக அவுட்லுக் கட்டுரையின் உபதலைப்புகளைப் பாருங்கள்
- Nuclear Submarine Project
- Main Battle Tank (Arjun)
- Surface to Surface Missiles
- Surface to Air guided missiles
- Light Combat Aircraft
- Remotely Piloted Vehicle
இதைப்போல காலைவிரிக்கும் நாடுகள் உலகில் மிகவும் குறைவு. (எனக்குத் தெரிந்தவகையில் அமெரிக்காவும் ரஷ்யாவும்தான்). இதைப்போன்ற அபத்தத்தை வேறுநாடுகளில் பார்க்கமுடியாது. இந்த இடத்தில் இந்தியாவின் அணுசக்தியையும், செயற்கைக்கோள், உயிர்-ஆயுதங்கள், வேதி-ஆயுதங்கள் முயற்சிகளைச் சேர்த்துப் பார்க்கவேண்டும்.
மாறாக, இஸ்ரேல் (ஏவுகணைகள், துப்பாக்கிகள்), பிரஸில் (இலகு விமானங்கள்), ஸ்வீடன் (டாங்குகள்), நெதர்லாந்து (வழமையான ஆயுதங்கள்) என்று தங்களுக்கான தனியிடத்தைப் பிடித்துக்கொண்டு அங்கே கோலோச்சுகின்றன. பிரஸில் அமெரிக்க இராணுவத்திற்கு முக்கிய உபதயாரிப்பாளராக இருக்கிறது. இதேபோல் இந்தியாவும் தங்களுக்கென்று ஏதாவது ஒன்றிரண்டு துறைகளைத் தெரிந்தெடுத்து அதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். (இனியும் செய்யலாம்). ஹோவிட்ஸர்கள் விற்கும் ஸ்வீடன் இலகு போர்விமானங்களை (LCA) செய்ய முயற்சிப்பதில்லை. மாறாக, தாங்கள் விற்கும் டாங்குகளின் பணத்தைக் கொண்டு அவற்றை இறக்குமதி செய்கின்றன.
(தொடர்ந்து எழுதுகிறேன்)
Your article is very interesting. It's true that DRDO tries to do too many things at one time.
Looking forward to your future articles.
இறக்குமதிக்கான செலவை எதனால் பெருமளவு கூட்டிக்கொண்டே செல்கின்றனர்? நவீன நுட்பம் கொண்ட தளவாடங்களை இறக்குமதி செய்யவா இல்லை வேறேதேனும் காரணங்கள் உண்டா?
ஏவுகணை நுட்பத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாகப் படிக்கிறோம். அத்துறையில் மேலும் கவனம் செலுத்தலாமே!
I do agree that DRDO didnt have a realistic deadlines in some of these projects. But think about it, a nation has to start somewhere. You cannot depend on Russia for all your defence needs, in this capitalistic world..I think you get the drift.
Do you know how many projects have failed in former USSR and USA and the relative new comer China?? May be not, the failures never get advertised like the successes.
Now Outlook is not the first media outlet to critizize, there are people like Natkarni and others.
Also I'll say this disclaimer before I elaborate more on individual projects, I'm in no way related to DRDO or any other labs, most of my knowledge is through defence forums like BR.
Lets see about the individual projects,
1.Nuclear Submarine Project
The project is very much happening. We are looking forward for our first indegenous nuclear submarine by 2008-2010. Now for a country like India with no prior experience in nuke sub, other than leasing a second gen Chalie class sub from Russia, building a SSN is a big ask. But regardless we learnt a lot in hull designing, reactor miniaturization, sonars and other sensors.
Main Battle Tank (Arjun)
Arjun's design has ben repeatedly changed and the final design was approved in early 90's. Now any modern MBT takes atleast 10 years for design and testing.
Surface to Surface Missiles
Though Akash might not come out as expected, still its a very good platform to test/develop new S2S missiles. It still can be used a SAM system.
Surface to Air guided missiles
Prithvi 1,2 3 are tested successfully. 1 and 2 are already deployed with Army and Airforce.
Agni 1,2 are in serial production.
Sagarika – Couple days back Prithvi was launched using a underwatr launcher. that should show the development of Sagarika.
Surya – No one really talks about an ICBM these days. But PSLV/GSLV have an excellent track record, so Surya is very much in development.
Light Combat Aircraft
Its been discussed so much, so I honestly dont think its fair to talk about LCA.
Remotely Piloted Vehicle
Lakshya/Nishant prototypes are being tested by the Army. Lakshya I believ was even deployed during Kargil war.
VJay
>a nation has to start somewhere. You cannot depend on Russia for all your defence needs, in this capitalistic world..I think you get the drift.
I guess half a century is too long a time to start. We should have been in the export mode (beyond production for domestic consumption), but we are still starting. The problem is we want to participate in all the races.
>Do you know how many projects have failed in former USSR and USA and the relative new comer China?? May be not, the failures never get advertised like the successes.
True, but the point is India could not boast a single success, unlike any of these countries, who can hold others to ransom with their technical superiority.
Rest of your comments, I am sure, only reiterate the point that we-are-there, yet-we-are-not-there.
ராதா, உங்கள் கேள்விக்கு அடுத்த பகுதியில் பதிலளிக்கிறேன்.
I am more inclined with VJay's comments. Just because we dont have great results, the efforts cannot be scrapped. Our entry into various technologies indicate the need in all those departments. Whether ultimately its a success or not, we have to put in the effort. One day it'll happen.
I believe in a more generic vision complementing the overall defence strategy for defence research than developing specific areas alone. More on this in India 2020 by Dr.APJ et al.
Yagna, Nice to see you back. Did you get your Netjuke working
Yes, all these can be accepted twenty years back. It is now more than 50 years of defence R&D and we have not made significant inroads into our import reduction. Technology export is nowhere in the horizon. Spill-over technologies to the civil domains is not seen. It is time to reconcile to harsh realities and recoup our R&D.
Remember: I am not preaching to scrap defence R&D, I want to refocus on identified core areas and improve efficiency by direcly linking to productivity (possibly through private arms manufacture)