• அது

    by  • April 18, 2004 • இலக்கியம் • 0 Comments

    காணக்கிடைக்காதது
    கையிலடங்கா
    அது

    நிறமின்றி உருவின்றி ஒலியின்றி
    கரங்களும் கால்களுமின்றி

    எங்கனும் பரவி என்றும் நிலைபெற்று
    எள்ளவிற்க் குறையாகி எல்லாமுந் தானாகி

    பகுக்கவியலாது
    உணரக்
    கிடைக்கும்

    நூலம்படையிழுத்துப்
    பரவி
    வெளி நிறைத்து மையமமருஞ்
    சிலந்தியாய்

    மண்ணில் துளிர்த்தெழும்
    தாவரமாய்

    மனிதனில் முளைக்கும்
    ரோமமுந் தானாய்

    அழிவெதனுக்குண்டு?

    எல்லாமும்
    ஆதியும் அந்தமும்
    அற்புதமும்
    அதுவே
    யாம்

    முண்டகோபநிஷத் (அத்:1, பகுதி:1, செய்யுள் 6,7) அதர்வணவேதத்தின் சில பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்தபொழுது தன்னிகழ்வாகக் கண்ணில்பட்ட் ஒரு பகுதி. என்னை உலுக்கியெடுத்துவிட்டது. ஆத்மனைப் பற்றிப் பேசும் பகுதி இது. சுட்டியைச் சொல்லாவிட்டால் கட்டாயம் அணுத்துகள் இயற்பியலில் எளிதாக நுழைத்துவிடலாம்.

    (எழுதுவதற்குக் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது. விட்டால் “அணுவா, அன்றே யாம் சொன்னோம்” என்று தாமரைப்பூத்த தடாகத்தினர் ஜ்வலிக்கும் பாரதப் பட்டியலில் பதினேழாவதாகச் சேர்த்துவிடுவார்கள்)

    * * *

    பாடலின் கவிதை வடிவம் என்னுடையது. நிறுத்தங்களும், நெகழ்ச்சிகளும் என்னுடைய கற்பனை. உரைவடிவத்தில் மூன்று மொழிபெயர்ப்புகளை (மூன்றுமே ஆங்கிலத்தில்தான்) படித்துப் பார்த்தேன். மூன்றுமே இதன் கவித்துவத்தைத் தொடவில்லை. (பாட்ரிக் ஓளிவெல் அருகில் வந்திருக்கிறார்). மேக்ஸ் முல்லரின் ‘ஆரியக்கூத்தைப்’ படித்தவுடன் சற்று ஏமாற்றம் வந்தது.

    நான் படித்த ஆங்கில மூலங்கள் இதோ;

    1. Max Muller

    That which cannot be seen, nor seized, which has no family and no caste, no eyes nor ears, no hands nor feet, the eternal, the omnipresent (all-pervading), infinitesimal, that which is imperishable, that it is which the wise regard as the source of all beings.’

    As the spider sends forth and draws in its thread, as plants grow on the earth, as from every man hairs spring forth on the head and the body, thus does everything arise here from the Indestructible.

    2. Swami Ghambirananda, Adwaitha Ashram, kolkatta

    (By the higher knowledge) the wise realize everywhere that which cannot be perceived and grasped, which is without source, features, eyes, and ears, which has neither hands nor feet, which is eternal, multiformed, all-pervasive, extremely subtle, and undiminishing and which is the source of all.

    As a spider spreads out and withdraws (its thread), as on the earth grow the herbs (and trees), and as from a living man issues out hair (on the head and body), so out of the Imperishable does the Universe emerge here (in this phenomenal creation).

    3. Upanisads, Patrick Olivelle, (Oxford World Classics)

    What cannot be seen, what cannot be grasped, without color, without sight or hearing, without hands or feet.

    What is eternal and all-pervading, extremely minute, present everywhere- That is the immutable, which the wise fully perceive. As a spider spins out threads, then draws them into itself, As plants sprout out from the earth; As head and body hair grows from a living man; so from the imperishable all things here spring.

    0 Responses to அது

    1. sundaravadivel
      April 19, 2004 at 5:35 am

      நல்ல ஆக்கம். ஆத்மாவுக்கான வரையறையை நினைவு படுத்துகிறது.

      அப்புறம், மையமமருஞ் சிலந்தி எனும்போது, அந்த மையம் ஏனோ அகம்பாவத்தின் இருப்பிடம் மாதிரித் தெரிகிறதே? எல்லாமும் என்றால் நூலாம்படையும் தானே?

    2. வெங்க&#297
      April 19, 2004 at 6:46 am

      நம் செய்கையினால் (நல்லவை/தீயவை இரண்டும்தான்) நூலாம்படையாக பரவினாலும், வெளியை நிறைத்தாலும் ஆத்மனின் இருப்பு உள்ளில்தானே?

      ஆத்மனின் வரையறைதான் இது. அணுவிற்குப் பெரிதும் ஒத்துப்போவதுதான் வியப்பு. இப்பகுதியைப் படிக்கப்படிக்க ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது. அணுத்துகள் இயற்பியலில் துகள்களின் இயல்புகளை String Theory கொண்டு விவரிக்கிறார்கள். சிலந்திவலையின் ஒப்புமை மிக அருகில் வருகிறது. இதே போல ஒவ்வொரு வரிகளும் (நான் மற்றவர்களின் வாசிப்பனுவத்திற்குக் குறுக்கே நிற்க விரும்பவில்லை)

    3. முத்த&#300
      April 19, 2004 at 11:22 am

      அணுவை ஆயிரம் கூறாய்ப்பிளந்தால் ஆதிசிவனின் தோற்றத்தைக் காணலாம் என சித்தர் பாடலில் எங்கோ படித்த ஞாபகம்.. ( கற்றை இயற்பியல், அணு விஞ்ஞானிகள் யாரும் இதற்காய்ச் சணடைக்க்கு வரவேண்டாம்… :) )

    4. Karthikramas
      April 19, 2004 at 2:45 pm

      எவ்வடி வுகளுந் தானா யெழிற்பரை வடிவ தாகிக்

      கௌவிய மலத்தான் மாவைக் கருதியே யொடுக்கியாக்கிப்

      பௌவம்விண் டகலப் பண்ணிப் பாரிப்பானொருவனென்று

      செவ்வையேயுயிரிற் காண்டல் சிவரூபமாகுமன்றே.

    5. முத்த&#300
      April 22, 2004 at 10:26 am

      கார்த்திக் … அசத்திப்புட்டீங்க …. :D

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *