ம்ம்.. அப்பாடா ஆறு மாத முழுநேரக் கூத்து நாளைக்கு உச்சகட்டத்தை எட்டப்போகிறது.

நிலையில் உறுதியான அயோக்கியனா, தடுமாறும் அறிவாளியா என்று அமெரிக்க மக்கள் நாளை முடிவு செய்துவிடுவார்கள் (அல்லது, அவர்கள் சார்பில் திருவாளர் புஷ் முடிவு செய்வார்).

இந்தக்கூத்தில் கனேடிய ஊடகங்கள் (வழக்கம்போல்) நிறைய பகடி செய்தன. இந்த நாட்களில் நான் வலையை விட்டு அஞ்ஞாதவாசம் இருந்ததால் கனேடியரல்லாதவர்களுக்கு அறியத் தரமுடியவில்லை. எனவே, முதலும் கடைசியுமாக, புஷ்-கெர்ரி விவாதத்தைப் பகடி செய்து கனேடியத் தொலைக்காட்சி வழங்கிய நிகழ்ச்சி.

Bush-Kerry Debate – Real Media

குறிப்பு: கனேடிய ஒலிபரப்பு நிறுவனம் மக்கள் வரிப்பணத்தில் நடப்பது. இதன்மீது கனேடிய அரசாங்கத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இதில் வரும் Royal Canadian Air Farce நிகழ்ச்சியில் எல்லோரையும் அறைத்து எடுத்துவிடுவார்கள். இதில் வழமையாக ஆறுபேர் வருவார்கள். இவர்களின் திறமை அளவிடமுடியாது. அனைவரும் முதல்தர நகைச்சுவையாளர்கள்.