காட்டில் விலைமாது யானை ஒன்று இருந்தது. அதற்குத் தான் ரொம்பப் பேரழகி என்று கர்வம். அதனுடைய ரேட் கொஞ்சம் அதிகம். என்ன செய்வது வயது இருக்கும்பொழுதே நாலு காசு பார்த்துவிட வேண்டாமா?

அந்த விலைமாது யானையிடம் போய்விட வேண்டும் என்று காட்டிலிருந்த இரண்டு விடலைகளுக்கு ஆசை; ஒன்று குரங்கு மற்றது சுண்டெலி. இரண்டும் பல நாட்களாகத் தம்முள்ளே இதுபற்றி பேசிக்கொண்டிருந்தன. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ‘அந்தத் தெருவுக்குள்’ நுழைந்தன. யானை அப்பொழுதுதான் தன் தும்பிக்கையால் இடது முன்காலில் நகச்சாயம் பூசிக்கொண்டிருந்தது.

“ம்ஹ்ம்.. ம்ம்…” தொண்டையைக் கனைத்தது குரங்கு

சாயம் பூசுவதை நிறுத்திவிட்டு தன்னுடைய சிறிய கண்ணால் குரங்கைப் பார்த்தது யானை “ம்.. என்ன?”

“அது வந்து… அதாவது…”

“என்ன, வந்து போயி…” – யானை

“ஒங்களோட…ஒன்னோட… ரேட் என்ன?” தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டது குரங்கு. அருகில் சுண்டெலி யானைப் பார்த்து ஜொள்விட்டுக் கொண்டு நின்றது.

“ம்ம்ம். அரெ மணிக்கி ஆயிரம் ரூவா” அலட்சியமாகச் சொன்னது யானை. அது கள்ள மார்க்கெட்டில் வாங்கிய எலிஸபெத் ஆர்டென் நகச் சாயத்தின் விலை. ஒருதடவைக்கு எட்டு பாட்டில் நகச்சாயம் தேவையாக இருக்கிறது.

“நாங்க… சின்னவங்க… கொஞ்சம் கொறச்சுக்கலாமே” என்றது சுண்டெலி.

“ம்ம்.. இந்தப் பாட்டில் நெயில்பாலிஷ் என்ன வெல தெரியுமா?” பிளிறியது யானை.

நமக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என்று இரண்டும் பேசாமல் வந்துவிட்டன.

* * *
ஒரு வாரம் கழித்து சுண்டெலி வாலில் மல்லிகைப்பூவைச் சுற்றிக் கொண்டு அடிக்கடி வாலின் நுணியை முகர்ந்து பார்த்துக் கொண்டு கம்பீரமாக நடந்து கொண்டிருந்தது. கவனித்த குரங்கு அருகில் சென்றது. சுண்டெலி சட்டை செய்யாமல் நடையைத் தொடர்ந்தது.

“ஏய், எங்கடா போற?”

பதில் ஏதுமில்லை.

“எலேய், சொல்றா, எங்க போற?” ஆச்சரியமாகக் கேட்டது குரங்கு.

“ம்ம்.. நம்ம மேலெத்தெரு ஆனெ கிட்டதான், இன்னிக்கு அரெமணி ஜாலிதான்”

குரங்குக்கு அலட்சியம், “ம்ம். அதுக்கு ஆயிரம் ரூபா வேணுந் தெரியுமா?”

அலட்சியமாக இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை விசிறிக்காட்டியது சுண்டெலி. குரங்குக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“எப்புடிடா கெடச்சது”

“ம்ம்.. ரேஷன் கடெலேந்து அரிசி திருடிவித்தேன், கையாலாகதப் பயலே, வேலயப் பாத்துகிட்டுப் போடா”

குரங்குக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என்று ரகசியமாக சுண்டெலியைப் பின்தொடர்ந்தது. சுண்டெலி நேராக யானையின் வீட்டு வாசலில் போய் வாலைச் சுழற்றிக் கொண்டு நின்றது. சத்தம் கேட்ட யானை வெளியே வந்தது.

“ம்ம்.. என்ன வேணும்?”

“அரெ மணிக்கு… வந்திருக்கேன்”

“ஆயிரம் ரூபா இருக்கா?” அலட்சியமாகக் கேட்டது யானை.

இரண்டு ஐநூறு ரூபாய்களைக் காட்டியது. யானைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும் பணம் பணம்தானே. அதிலும் சுலபமாக, அலுப்பிலாமல், ஆயிரம் ரூபாய் கிடைத்தால் மறுக்கவா முடியும்.

“சரி வா” யானை தென்னை மரத்துப் பக்கமாகப் போய் நின்றது.

குரங்குக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. அவமானம் தாங்கமுடியவில்லை. சரி வந்ததுதான் வந்தாகிவிட்ட்து, என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட்டுப் போகலாமே என்று ஒருவருக்கும் தெரியாமல் தென்னைமரத்தில் ஏறி ஒரு மட்டை மேல் ஒளிந்துகொண்டு உட்கார்ந்தது.

“ம்ம். படு” – சுண்டெலி

“ஹேய் என்னால படுக்கமுடியாது. யானை படுக்காது தெரியுமா” அலட்சியமாகச் சொன்னது யானை.

“என்னடி, காச வாங்கிகிட்டு பிலிமா காட்றே” – சுண்டெலி கத்தியது.

“சர்தான் போய்யா, என்னால படுக்க முடியாது. பணத்தை வீசியெறியத் தயாரானது யானை.

சுண்டெலிக்கு ஏமாற்றம். ஆனாலும் யானையின் மேல் இருந்த ஆசை விடவில்லை. மேலே குரங்கு இருப்பதை வேறு பார்த்துவிட்டது. இவ்வளவு தூரம் வந்து ஒன்றுமில்லாமல் திரும்பிப் போனால் நாளை குரங்கு தன் ஆண்மையைக் கேலி செய்யும் என்ற பயம் வேறு.

“சரி, சரி, அப்படியே திரும்பி நில்லு, நா பாத்துக்கிறேன்” – சுண்டெலி

யானை வாகாகத் திரும்பி நின்றது. சுண்டெலி சரசரவென்று பின்னங்கால் வழியாக ஏறி வந்தது.

குரங்குக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மட்டையிலிருந்து எட்டிப் பார்த்தது. இப்பொழுது சுண்டெலியின் வால் மாத்திரம் அசைவது தெரிந்தது.

நம்மால் முடியாத காரியத்தை… கேவலம் இந்தச் சுண்டெலி சாதித்துவிட்டதே என்ற ஆத்திரம் குரங்குக்கு. இதற்கெல்லாம் காரணம் இந்த யானைதானே என்று எரிச்சல் வந்தது. ஒரு தேங்காயைப் பறித்து யானையின் நெற்றியில் படும்படி குறிபார்த்து வீசியது.

டங்க்.. யானையின் தலையில் தேங்காய் விழுந்தது. கிட்டத்தட்ட இந்த உலகில் இல்லாத யானைக்கு இந்தத் திடீர் அதிர்ச்சி பெரிய வலியைக் கொடுத்தது. காடே அதிர “அம்ம்மாஆ..” என்று அலறியது.

சுண்டெலி மெதுவாக வெளியில் வந்தது. யானையிடம்;

“ஸாரி, நாங் கொஞ்சம் மொறட்டுத்தனமா நடந்துகிட்டேன் போல இருக்கு. ரொம்ப வலிக்குதா? வேணுன்னா… கொஞ்சம் மெதுவா…”