மூவபிள்டைப் தனது 3வது வடிவத்தை விரைவில் வெளியிடவிருக்கிறது. இதற்குக் களப்பரிசோதனை நடத்த (ஆல்பா சோதனை) உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு வலைத்தளங்களில் என்னுடையதும் ஒன்று (என்னுடைய பரிசோதனைகள் யுனிகோட் சார்ந்தவை). இது ஒரு நல்ல அனுபவம். மூவபிள்டைப் குழு தொடர்ச்சியாக வலைக்குறிப்புத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்கிறது. என்னுடைய தளத்தின் தனிப்பகுதியில் இந்தச் சோதனையைத் தொடங்கவிருக்கிறேன்.