மதுரைத் திட்டத்தின் கோப்புகளை தஸ்கி 1.7 குறியீட்டு வடிவத்திலிருந்து யுனிகோடுக்கு மாற்றித்தர உதவி தேவைப்படுகிறது. கோப்புகள் பொதுவில் வெற்று உரைவடிவத்திலும், மீயுரை (html) வடிவத்திலும் இருக்கின்றன. குறியீட்டு மாற்றத்திற்குப் பல கருவிகள் எளிதில் இலவசமாகக் கிடைக்கின்றன. (சுரதாவின் பொங்குதமிழ் மாற்றிகள், லினக்ஸில் வசீகரன் நீட்டித்த தஸ்கி<=>யுனிகோட் iconv என்று பல உண்டு.

யுனிகோடில் மாற்றப்பட்டால் கூகிள் போன்ற தேடல் இயந்திரங்களைக் கொண்டு தமிழ் இலக்கியங்களில் எளிதாகத் தேடமுடியும். பிறகு ஒரு தரவுத்தளத்தினாலான அடிப்படையில் கோப்புகளை மாற்றியமைத்து பல எளிதான முறைகளில் (காலவரிசை, அகரவரிசை, ஆசிரியர் பெயர் வரிசை,…) கோப்புகளை ஒழுங்குபடுத்தித் தரமுடியும். ம.தியின் முதல் 100 வெளியீடுகளும் ஏற்கனவே யுனிகோடில் கிடைக்கின்றன. வெளியீடுகள் 100-200 யுனிகோடில் மாற்றப்பட வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் மதுரைத்திட்டத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் இல்லாவிட்டால் எனக்கும் எழுதலாம்.