என்னுடைய மூன்றாவது வலை தொடரில் பின்தொடர்தல் பற்றி எழுதுவதாக இருந்தேன். அதே தலைப்பில் பத்ரி இன்றைக்கு வலைக்குறித்துள்ளார். அவர் பின்தொடரும் நிழலின் குரல் பற்றி எழுதியிருந்ததை நான் நிழலாக இங்கே தொடர் உத்தேசம். பொதுவில் பின்தொடர்தலைப் பற்றி பத்ரி கிட்டத்தட்ட விளக்கிவிட்டார். இருந்தாலும் என்னுடைய மூன்றாவது வலையின் தொடர்ச்சிக்காக…

பொதுவில் பின்தொடர்தலை இப்படிக் குறிக்கலாம்;

1. காசி ஒரு விஷயத்தை எழுதுகிறார். அதன் மீது எனக்கு மேலதிகக் கருத்து/மாறுபாடு இருக்கிறது. படித்தவுடனேயே ஏதாவது சொல்லவேண்டும் என்று மனது குடைகிறது. என்ன செய்ய முடியும்?

(1அ) உடனே காசியின் கருத்துக்கள் பகுதியில் இரண்டு வரி எழுதலாம். அப்படியே மறந்து போய்விடலாம். இந்த முறையில் (அ) காசியின் குறிப்பும், என்னுடைய கருத்துமாக விஷயம் அத்துடன் நின்று விடும்.

(1ஆ) காசியின் கருத்தின் சுட்டியை எடுத்துக் கொண்டு என்னுடைய வலைக்குறிப்புக்குப் போய் அங்கே அவரைச் சுட்டிக் காட்டிவிட்டு, ஜெயமோகன் ரீதியாக ஒரு கட்டுரையை எழுதலாம். அப்படி நான் எழுதினால், என்னுடைய வலைத்தளத்திற்கு காசி வராமல் போனால் அதே தலைப்பில் நானும் எழுதியிருப்பது காசிக்குத் தெரியாமலேயே போய்விடலாம்.

(1இ) நான் அப்படி எழுதியிருக்கிறேன் என்று காசியிடம் (காசியின் பக்கங்களுக்கு வருபவர்களுக்கு) தெரிவிக்க விரும்பினால், மீண்டும் அவருடைய பக்கங்களுக்குப் போய் அங்கே என்னுடைய சுட்டியை சேர்த்துவிட்டு வரலாம்.

பின்தொடர்தலின் முதல் சாத்தியம் இது; திரும்ப காசியின் பக்கங்களுக்குப் போகத் தேவையில்லாமல் உங்கள் வலைக்குறிப்பு மேலாண்மைச் நிரலியே இதை செய்து முடிக்கும்.

2. நாளை பத்ரிக்கு காசியின் கருத்தை ஒட்டியும் என் கருத்தை வெட்டியும் சொல்ல வேண்டும்போல் இருந்தால் என்ன செய்வார்?

(0) நான் காசியைப் போலவே அதே தலைப்பில் கருத்து எழுதியிருக்கிறேன் என்பது பத்ரிக்குத் தெரியாமலே போகலாம்.

(2அ) அப்படித் தெரியவந்தால், 1(அ) முறையை இரண்டு தடவை பின் பற்றி காசியின் வலைக்குறிப்பிலும் என்னுடைய வலைக்குறிப்பிலும் கீழே எழுதிவிட்டுப் போவார். இப்படி காசியின் பக்கத்தில் பத்ரி கருத்து எழுதியது எனக்குத் தெரியாமலும், என் பக்கத்தில் எழுதியது காசிக்குத் தெரியாமலும் போகலாம்.

(2ஆ) இரண்டு சுட்டிகளையும் வெட்டி எடுத்துக் கொண்டு அவருடைய பக்கத்தில் போய் எனக்குப் போட்டியாக அவரும் ஜெயமோகன் ரீதியில் இன்னொரு பெரிய கட்டுரை எழுதலாம். அப்படி எழுதினால் எனக்கும் காசிக்கும் அதைப்பற்றி தெரியவர சாத்தியமில்லை.

(2இ). மாறாக பத்ரி சிரத்தையாக “வெங்கட், பார் நீ சொன்னதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்” என்று என்னுடைய வலைக்குறிப்பிலும், “காசி, ஆமாங்க, நீங்க சொன்னதுதான் சரி, வெங்கட் கருத்துக்கு நான் உடன்படவில்லை” என்று காசியின் பக்கத்தில் எழுதலாம்.

இப்படிப் பக்கம் பக்கமாகப் போய் கருத்து எழுதலாம், கருத்து எழுதியிருக்கிறேன் என்று எழுதலாம், கருத்து எழுதியாக அவருக்கு எழுதிவிட்டேன் என்று மூன்றாம் நபரிடம் போய் எழுதலாம். தலாம், லாம்,ம்ம்ம்ம்ம்ம்.

இப்படியாக தொடர்ச்சியான ஒரே மாதிரியான செயல்களைச் செய்வதில் மனிதர்களைவிடக் கணினிக்குத் திறமை அதிகம். அதை கணினி செய்து முடிக்கும் முறைக்குத்தான் பின்தொடர்தல் என்று பெயர்.

* * *
மூவபிள்டைப் முன்வைத்த பின்தொடர்தல் தொழில்நுட்பத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

காசியின் குறிப்பின்மேல் எனக்கிருக்கும் கருத்தை என் பக்கத்தில் எழுதிவிட்டு அதில் அவருடைய பின்தொடர் சுட்டியைப் பயன்படுத்தலாம், அப்படிப் பயன்படுத்த என்னுடைய வலைக்குறிப்பு நிர்வாக நிரலியான மூவபிள்டைப் மறந்துவிடாமல் உடனே அவருடைய நிர்வாக நிரலியைத் தொடர்பு கொண்டு, TrackBack Entry என்பதில் என்னுடைய கருத்தின் முகவரியைத் தானாகச் சேர்ப்பித்துவிட்டு வரும்.

நான் இந்தக் காரியத்தைச் செய்தபின் பத்ரி காசி வீட்டிற்கு வந்தால், அவருக்கு இதே தலைப்பில் இன்ன&