நண்பர் பா.ராவுக்கு பாரதீய பாஷா பரிஷத் விருது கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் உள்ளிட்ட சில முக்கிய எழுத்தாளர்களின் குழுவில் நண்பர் பா.ராவும் இடம்பெறுவது சந்தோஷமளிக்கிறது. ஒரு விதத்தில் இந்த விருதைப்பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு முன்னதாக நான் அறிந்துகொண்டிருக்கிறேன், ஆனால் இதை வலையில் பதிவு செய்வதில் பத்ரி முந்திக்கொண்டுவிட்டார் 🙂 (செய்தி கிடைத்த நேரத்தில் பத்ரி அவருடன் இருந்திருக்கிறார். நானோ உலக உருண்டையின் மறுபக்கத்தில்).

பாராட்டுக்கள்.