foveon_camera.pngநான் பல நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கருவி சந்தைக்கு வரவிருக்கிறது. ·à®ªà¯‹à®µà®¿à®¯à®©à¯ என்ற துவக்கநிலை நிறுவனத்தின் கண்டுபிடிப்பான புதிய படச்சில்லு டிஜிட்டல் படத் தொழில்நுட்பத்தைப் புதிய நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. photofilm.pngவழமையான படலங்கள் வேதிமாற்றத்தின் மூலம் புகைப்படங்கள் பதிவு செய்யப்படும். இந்தப் படலங்களில் மூன்றுவித வெவ்வேறு வேதிக்கலவைகள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்காகப் பூசப்பட்டிருக்கும். இந்தப் பூச்சுகள் முறையே சிவப்பு, பச்சை, ஊதா இவற்றில் ஒன்றின் ஒளியளவுக்குத் தக்கபடி வேதிமாற்றத்திற்கு உள்ளாக ஒட்டுமொத்தமாக பலவண்ணத்தில் படம் சேமிக்கப்படும்.

·à®ªà®¿à®²à®¿à®®à¯à®•à®³à¯ˆ விட்டுவிட்டு டிஜிட்டலுக்கு படக்கலை மாறத்தொடங்கியதில் இதுவரை இருந்துவந்த முக்கிய குறைபாடு இதுதான். பதிவு செய்யும் சிசிடி சில்லுகளில் ஒவ்வொரு புள்ளியிலும் மூன்று வண்ணங்களில் ஏதாவது ஒன்றைத்தான் பதிவு செய்யமுடியும். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் நாம் படத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் அது பதிவு செய்யும் வண்ணம் தவிர்த்த பிற வண்ணங்களை இழக்கிறோம். (ஆனாலும், இந்தப் புள்ளிகள் நெருக்கமாக இருப்பதால் நம் கண்ணுக்கு அந்த வித்தியாசம் தெரிவதில்லை).

single_layerCCD.pngஇதைத் தவிர்க்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்த உருவான டிஜிட்டல் கருவிகளில் உள்வரும் ஒளி மூன்றாகப் பகுக்கப்பட்டு மூன்று வேறு சில்லுக்களுக்குச் செலுத்தப்படும், பின்னர் இவற்றின் கலவை வீதத்தைக் கணக்கிட்டு ஒட்டுமொத்தமாகப் படம் பதிவு செய்யப்படும். இந்த முறையில் ஒவ்வொரு புள்ளியிலும் மூன்று வண்ணங்களின் அளவும் துல்லியமாக மின்னோட்டமாக மாற்றப்பட்டு ஒருங்கிணைவதால் படத்தின் துல்லியம் இழந்துபோகாமல் தவிர்க்க முடிகிறது. ஆனால், மூன்று வேறு சில்லுக்கள், அவற்றுக்காக உள்வரும் ஒளியைப் பிரித்துத் தரப் பட்டகங்கள் எனக் கூடுதல் பாகங்கள் தேவைப்படுவதால் இதுபோன்ற கருவிகள் அளவில் பெரிதாக இருக்கும். விலையும் மிக அதிகம். ஆறு மெகாபிக்ஸெல் சாதாரண காமெராவின் விலை $1000 என்றால் இந்த மூன்று சில்லு காமெராவின் விலை $14,000 ஆக இருக்கும்.

·à®ªà¯‡à®µà®¿à®¯à®©à¯ என்ற துவக்கநிலை நிறுவனம் சென்ற வருடம் புரட்சிகரமான கண்டுபிடிப்பை அறிவித்தது. அதன் அடிப்படையில் மூன்றடுக்கு சிசிடி சில்லுகள் இருக்கும். ஒவ்வொரு அடுக்கும் மூவண்னத்தில் ஒன்றைப் பதிவு செய்துகொண்டு மற்ற வண்ணங்களைத் தடுக்காமல் அடுத்த அடுக்கிற்கு அனுப்பும். இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இதன் மூலம் படக்கருவியின் அளவு சாதாரண காமெராக்களைப் போலவே சிறிதாக இருக்கும். கூடவே படத்தின் துல்லியமும் அதிகம்.

இந்தச் சில்லை சென்ற நவம்பவரில் ஒரு திட்டத்தில் பயன்படுத்த என்னால் சோதிக்க முடிந்தது. அப்பொழுது அதன் விலை $3000 (4 மெகா பிக்ஸெல்). விலை அதிகம் என்ற ஒரே காரணத்தால் நாங்கள் இதைத் தவிர்க்க வேண்டியிருந்தது. இன்றைக்குப் போலராய்ட் நிறுவனம் ·à®ªà¯‹à®µà®¿à®¯à®©à¯ சில்லுக்களின் அடிப்படையில் அமைந்த புதிய காமெராவை அறிவித்துள்ளது. இதன் விலை $400 டாலர்கள். இதுதான் தொழில்நுட்பத்தின் பிரமிப்பூட்டும் வளர்ச்சி. சென்ற வருடம் ·à®ªà¯‹à®µà®¿à®¯à®©à¯ அதிகமான சில்லுக்களைத் தயாரிக்கவில்லை, எனவே விலை அதிகம். இப்பொழுது நுகர்வோர் சந்தைக்கு வந்திருப்பதால் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைத்திருக்கிறார்கள்.

foveon_ccd.pngபொதுவில் டிஜிட்டல் காமெரா சந்தை இப்பொழுது மிகவும் போட்டி நிறைந்தது. ·à®ªà¯‹à®µà®¿à®¯à®©à¯ நிக்கான், கேனன், சோனி, போன்ற ஜப்பானிய நிறுவனங்களை எதிர்கொண்டாக வேண்டும். இந்தச் சந்தையில் இடத்தைப் பிடிப்பது மிகவும் கஷ்டம். அப்படி ·à®ªà¯‹à®µà®¿à®¯à®©à¯ நிற்காமல் போனாலும் இந்தத் தொழில்நுட்பத்திற்கு நிக்கானும் சோனியும் பதில் சொல்லியாக வேண்டும்.

என்னுடைய கருத்தில் டிஜிட்டல் பட உலகம் ·à®ªà¯‹à®µà®¿à®¯à®©à®¾à®²à¯ மாற்றி எழுதப்படவிருக்கிறது.